இனி நல்ல படங்கள் வருமா? || ‘ஸ்கிரிப்டிக்’ திரைக்கதை வங்கி தொடக்கம்

1 0
Spread the love
Read Time:11 Minute, 24 Second

திரையுலக வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக ‘ஸ்கிரிப்டிக்’ (SCRIPTick) திரைக்கதை வங்கியை (Script Bank) தொடங்கியுள்ளனர் மதன் கார்க்கி மற்றும் கோ. தனஞ்ஜெயன்.

திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை உருவாக்கி, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் தளமாக இது இருக்கும். சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு புதிய முயற்சிதான் ‘ஸ்கிரிப்டிக்’.

பிரபல பாடலாசிரியர், எழுத்தாளர், திரைக்கதை எழுத்தாளர், மற்றும் ‘டூப்பாடூ’ போன்ற பல புதிய முயற்சிகளை முன்னெடுத்தவர் எனப் பன்முக வித்தகராகத் திகழும் மதன் கார்க்கி மற்றும் பிரபல தயாரிப்பாளர்-விநியோகஸ்தர், பாஃப்டா (BOFTA) திரைப்படக் கல்லூரி நிறுவனர்
கோ. தனஞ்ஜெயன் இருவரும் இணைந்து தொடங்கியுள்ளனர். இந்தியாவிலேயே முதன்முறையாக, “ஸ்கிரிப்டிக்” (SCRIPTick) என்ற பெயரில் ஒரு திரைக்கதை வங்கியை தொடங்கியுள்ளது இதுவே முதல் முறை.

‘ஸ்கிரிப்டிக்’ திரைக்கதை வங்கி மற்றும் www.scriptick.in என்ற அதன் இணையதளத்தை மூத்த திரைப்பட இயக்குநர், ‘இயக்குநர் இமயம்’ திரு பாரதிராஜா அவர்கள் இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

திறமையான எழுத்தாளர்களிடமிருந்து கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, முழுமையாக உருவாக்கப்பட்ட, நேர்த்தியான திரைக்கதைகளைத் தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்களுக்கு வழங்க உருவாக்கப்பட்டதுதான் ஸ்கிரிப்டிக்.

தற்போது உருவாகும் பெரும்பாலான திரைப்படங்களின் திரைக்கதைகள் அனுபவம் வாய்ந்த திரைக்கதை எழுத்தாளர்களைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, தோல்வி அடையும் திரைப்படங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை  நாம் பார்க்கிறோம்.

இதைக் கருத்தில்கொண்டு, ஸ்கிரிப்டிக் வழங்கும் திரைக்கதைகளின் தரம் அனுபவம் வாய்ந்த திரைக்கதை எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவால் உறுதி செய்யப்படுகிறது. எனவே, ‘ஸ்கிரிப்டிக்’டிலிருந்து பெறப்பட்ட திரைக்கதைகள், திரைப்படங்களாக உருவாக்கப்படும்போது பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பை அவை பெறும் என்பதைத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் நம்பலாம்.

பல சுயாதீன திரைக்கதை எழுத்தாளர்களை உருவாக்குவதும், அவர்களின் பணிக்கு உரிய ஊதியம் வழங்குவதும் ஸ்கிரிப்டிக்-ன் இலக்காகும். திரைப்படங்களுக்கான கதைகள் எழுதும் தொழிலைத் தேர்ந்தெடுக்க, அதிக எண்ணிக்கையிலான திரைக்கதை எழுத்தாளர்கள் உருவாக இந்த முன்முயற்சி ஊக்குவிக்கும்.

புள்ளி விவரம் ஒன்றை சமீபத்தில் பகிர்ந்த பிரபல தயாரிப்பாளர் திரு எஸ்.ஆர். பிரபு (ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்), 2022 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தாங்கள் பெற்ற கதைச் சுருக்கங்களின் எண்ணிக்கை குறித்தும் அவற்றில் எத்தனை அடுத்த கட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டன என்பது பற்றியும் தெரிவித்திருந்தார். அதன்படி, மேற்கண்ட காலகட்டத்தில் அவரது குழு பல்வேறு வகைகளில் 814 கதைச் சுருக்கங்களைப் பெற்றபோதிலும், அவற்றிலிருந்து வெறும் 43 (Only 5%) கதைச் சுருக்கங்கள் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு முழு திரைக்கதைகளைப் படிப்பதற்குத் தகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

பல ஆண்டுகளாகத் திரைக்கதைகளை மதிப்பீடு செய்து வரும் ஸ்கிரிப்டிக் குழுவிற்கும் இதே அனுபவம்தான்.  2022-ஆம் ஆண்டில் ஸ்கிரிப்டிக் குழுவால் வாசிக்கப்பட்ட 106-க்கும் மேற்பட்ட முழு திரைக்கதைகளில் (Bound Scripts), நான்கு மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு, அடுத்த கட்ட முன்னேற்பாடுகளுக்கு (Pre-Production) எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஒவ்வொரு தயாரிப்பாளரும் இதே போல நூற்றுக்கும் மேற்பட்ட திரைக்கதைகளைப் படித்து, ஒரு சில திரைக்கதைகளைத் தேர்ந்தெடுக்காமல், ஒரு வல்லுநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைக்கதைகளை மட்டுமே படித்தால், அவர்களின் நேரமும், செலவுகளும் மிச்சமாகும். அதைவிட குறைவான நேரத்தில், பல திரைப்படங்களை அவர்களால் உருவாக்க முடியும்.

இந்த நோக்கில்தான் ஸ்கிரிப்டிக் திரைக்கதை வங்கி தொடங்கப்படுகிறது.  திறமையான திரைக்கதை எழுத்தாளர்களிடமிருந்து கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முழுமையாக உருவாக்கப்பட்டு, படப்பிடிப்பிற்குச் செல்லத் தயாரான நிலையில் உள்ள நேர்த்தியான திரைக்கதைகளை ஸ்கிரிப்டிக் நிபுணர் குழு தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும். மதன் கார்க்கி, கோ. தனஞ்ஜெயன் ஆகியோருடன் திரைக்கதை வல்லுநர் ‘கருந்தேள்’ ராஜேஷ் தலைமையில் அமைந்துள்ள இந்தக் குழுவில், திரைப்பட இயக்குநர், கதாசிரியர் மற்றும் திரைக்கதை நிபுணர்கள் உள்ளனர்.  

இது தவிர, ஸ்கிரிப்டிக் குழு திரைக்கதை குறித்த ஆலோசனை (Script Consulting), செப்பனிடுதல் (Script Doctoring), முறைப்படுத்துதல், திரைக்கதை மதிப்பீடு (Script Rating Certificate) உள்ளிட்ட இதர பல சேவைகளையும் வழங்கும்.

ஸ்கிரிப்டிக்-இன் தொடக்கம் குறித்து கருத்துத் தெரிவித்த இணை நிறுவனர் மதன் கார்க்கி, “கோ. தனஞ்ஜெயனுடன் இணைந்து இந்தப் புதிய முயற்சியைத் தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். காலத்தின் தேவையாக இது உள்ளது. திரைப்படமாகவோ வலைத்தொடராகவோ உருவாக்கப்படும் கதைகள், வலுவானவையாகவும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் வகையிலும் இருக்க வேண்டும். புதிய பாதையை உருவாக்கும் இதுபோன்ற திரைக்கதைகளை வழங்க நாங்கள் தொடங்கும் கூட்டு முயற்சி ஸ்கிரிப்டிக் ஆகும். தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த திரைப்படத் துறைக்கும் பயனுள்ளதாக இது இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறினார்.

இந்த முன்னெடுப்பு குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஸ்கிரிப்டிக் இணை நிறுவனர் கோ. தனஞ்ஜெயன், “புதிய முயற்சியான ஸ்கிரிப்டிக்-ஐ வெளிக்கொணர, பலவற்றில் முன்னோடியாக இருக்கும் மதன் கார்க்கியுடன் கூட்டு சேருவது பெருமைக்குரிய தருணம் ஆகும். சினிமா துறையில் சிறந்த திரைக்கதைகள் வெளிக்கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் பல ஆண்டுகளாக எனக்குள் இருந்தது. திரைக்கதை நிபுணர்களின் பல்வேறு அளவுகோல்களை பூர்த்தி செய்யும் நல்ல திரைக்கதைகளைக் கண்டுபிடிப்பதுதான் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். அத்தகைய திரைக்கதைகளைப் பெற, நூற்றுக்கணக்கான கதை சுருக்கங்கள் அல்லது திரைக்கதைகளை அவர்கள் படிக்க வேண்டும். அந்த பெருமுயற்சியைக் குறைத்து, சிறந்த திரைக்கதைகளை மட்டுமே அவர்களுக்கு வழங்க நிபுணர்களின் பங்களிப்போடு ஸ்கிரிப்டிக் திரைக்கதை வங்கி தொடங்கப்படுகிறது. திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் இது ஒரு முன்னோடி முயற்சியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.

‘ஸ்கிரிப்டிக் திரைக்கதை வங்கி’யைத் தொடங்கி வைத்த ‘இயக்குநர் இமயம்’ திரு பாரதிராஜா, இந்த முன்னோடியான முயற்சியைப் பெரிதும் பாராட்டி, தனது கருத்துக்களை ஒரு வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

10 நேரடி திரைக்கதைகள், 1 தழுவல் மற்றும் 3 மறு ஆக்கத் திரைக்கதைகளுடன் தொடங்கப்பட்டுள்ள ஸ்கிரிப்டிக் திரைக்கதை வங்கியில் தங்கள் திரைக்கதையைச் சேர்க்க ஆர்வமாக உள்ள திரைக்கதாசிரியர்களும், நல்ல திரைக்கதைகளை எதிர்பார்த்திருக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களும், எங்களை கீழ்காணும் முறைகளில் தொடர்பு கொள்ளலாம்.

இணையதளம்: www.scriptick.in  மின்னஞ்சல் முகவரி: [email protected] அலைபேசி: 90030 78000/90030 79000

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!