ஜில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களின் இயக்குனர் ஒபிலி என்.கிருஷ்ணா, நடிகர்கள் சிம்பு,கெளதம் கார்த்திக் வைத்து ‘பத்துதல’ என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், மார்ச் 30 ம் தேதி பத்து தல திரைப்படம் திரைக்கு வருவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
சிம்புவுக்கு மாநாடு, பிறகு வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் நடித்த பிறகு தமிழ் சினிமாவில் பெரிய கிரேஸ் ஏற்பட்டுள்ளது. வெந்த தணிந்தது காடு படத்தில் வரும் மல்லிப்பு வைச்சி வைச்சி வாடுதே என்கிற பால் சூப்பர்டூப்பர் ஹிட்டானது, அதனால் அந்தப் பாடலில் ஒரு சொல்லையே பத்துதல என்கிறதை இந்தப் படத்திற்கு வைத்திருக்கிறார்கள்.
இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா சிறந்த அனுபவம் வாய்ந்தவர். அவரின் இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் பத்துதல படத்திற்கு இப்போதே பெரிய அளவில் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. அதிலும் சிம்பு வேடத்தில் புதிய மாற்றங்களை செய்து திரைக்கதையை அமைத்திருக்கிறார்களாம்.