‘வதந்தி’ திரைப்படத்தில் இசையில் அசத்தும் சைமன் கே.கிங்

1 0
Spread the love
Read Time:3 Minute, 3 Second

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான ஒரு சுயமுன்னேற்றப்படம் ‘பேப்பர் ராக்கெட்’. இந்தப் படம் பல அம்சங்களுக்காக வெகுவாகப் பாராட்டன. அதில் முக்கியமான அம்சம் இசை. சைமன் கே.கிங்கின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்தன. குறிப்பாக பல வெளிப்புறப் படப்பிடிப்பு நகர்வின் ஆக்கத்திற்கு சைமன் கே. கிங்கின் இசை கைகொடுத்து என்றால் மிகையில்லை.

இப்போது ‘கொலைகாரன்’ படத்திற்குப் பிறகு இசையமைப்பாளர் சைமன் கே கிங் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ்

சைமன் கே.கிங் இயக்குநர் சசியின் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளியான ‘ஐந்து ஐந்து ஐந்து’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து ‘சத்யா’ திரைப்படத்தின் “யவ்வானா” பாடலுக்காகவும், ‘கொலைகாரனி’ல் பின்னணி இசைக்காகவும் நன்கு அறியப்பட்டவர்.
‘கொலைக்காரன்’, ‘கபடதாரி’, ‘சத்யா’ போன்ற திரைப்படங்களுக்கு இசை அமைத்து, பல்வேறு குறிப்பிடத்தக்க BGMகள் மற்றும் பாடல்களைத் தன்வசமாக்கினார்  இசையமைப்பாளர் சைமன்.கே.கிங்.

இவர் இந்த டிசம்பரில் மீண்டும் ஒருமுறை தனது சிறந்த படைப்புகளில் ஒன்றை நமக்குக் கொண்டுவருகிறார்.

‘கொலைகாரன்’ திரைப்பட இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸுடன் புதிய படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் சைமன்.கே.கிங்.

சைமன் கே. கிங்

இந்த டைனமிக் ஜோடி, தங்களின் வரவிருக்கும் அமேசான் பிரைம் திரில்லர் தொடரான ‘வதந்தி’ மூலம் நம் அனைவரையும் இருக்கைகளின் நுனியில் அமரவைக்கப் போவது உறுதி.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிருத்திகா உதயநிதிக்காக ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெற்றிகரமான வலைத் தொடரில் பணியாற்றினார். தற்பொழுது அவர் புஷ்கர் & காயத்திரி தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா, லைலா, நாசர் மற்றும் பலர் நடிக்கும் ‘வதந்தி’ எனும் திரைப்படத்தில் தான் பணியாற்றுவதை மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தில் சைமன் கே. கிங் இசையில் புதிய பரிமாணத்தைச் செய்ய உள்ளாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!