“சுந்தர்.சி.க்கு டாக்டர் பட்டம் தருவேன்” || புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்

2 0
Spread the love
Read Time:10 Minute, 31 Second

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல்’. இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தமிழகமெங்கும் இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளி யிட இருக்கிறது. வரும் அக்டோபர் 7ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் நடை பெற்றது.

படக்குழுவினருடன் புதிய நீதிக்கட்சி தலைவரும் இந்தப் படத்தின் தயாரிப் பாளருமான ஏ,சி.சண்முகம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி, இயக் குநர் பேரரசு, கவிஞர் சினேகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

இந்த படத்தின் தயாரிப்பாளரும் புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ.சி.சண் முகம் பேசும்போது, “நானும் சுந்தர்.சி.யும் ‘ரிஷி’ பட சமயத்தில் முதன் முதலாக விமானத்தில்தான் சந்தித்தோம். அப்போதிருந்து நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது. ‘அரண்மனை-3’ படத்தை அவரை நம்பி ஒப்படைத்தேன். நல்ல லாபம் கிடைத்தது. இப்போது இரண்டாவது முறையாக ‘காபி வித் காதல்’ படத்தையும் சிறப்பாகவே எடுத்துக் கொடுத்திருக்கிறார். அடுத்து நாங்கள் இருவரும் மூன்றாவதாக இணையும் படம் மிகப்பெரிய படமாக இருக்கும்.

இந்த இடத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றியுள்ள 200 தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் அவர் களது குடும்பத்தினருக்கு என்னுடைய மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை தரும் விதமாக அனைவருக்குமே இலவச சிகிச்சை கார்டு வழங்க இருக்கிறேன். சாதாரண சிகிச்சை முதல், அறுவை சிகிச்சை வரை இந்த 200 பேரின் குடும்பத்துக்குமே இலவசம்தான்.

அதேபோல என்னுடைய கல்லூரியில் படித்துள்ள 4000 மாணவர்களுக்கு அடுத்த மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்வின் போது இயக்குநர் சுந்தர்.சி.யின் பன்முகத்தன்மை கொண்ட உழைப்பையும் பணியையும் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க இருக் கிறோம்” என்று கூறினார்.

இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது, “நீண்ட நாட்களாகவே ஃபீல்குட் படம் ஒன்றை இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் படம் முழுவதும் ஒரு புன்சிரிப்புடன் படத்தைப் பார்க்க வேண்டும் என நினைத்தேன். ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தை அப்படித்தான் தொடங்கினேன். அதில் முதலில் நக்மாதான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. பின் கதை வேறுவிதமாக மாறிவிட்டது. அதற்கடுத்ததாக ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தையும் அதேபோல் பீல்குட் படமாக எடுக்க வேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால் சந்தானம் வந்ததும் படத்தின் ரூட்டே மாறிவிட்டது. இந்த முறை ‘காபி வித் காதலி’ல் படத்தில் என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது.

ஊட்டி என்பது எல்லோருக்கும் சுற்றுலா தளம் என்றால் எனக்கு மட்டும் அது வேலை பார்க்கும் இடம் என்பது போல மாறிவிட்டது. மூன்று விதமான குணாதிசயங்களுடன் உள்ள மூன்று சகோதரர்கள், அவர்களுக்கு இடையே ஏற்படும் காதல் மற்றும் குடும்பப் பிரச்சினை ஆகியவற்றை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். இந்தப் படத்தில் ஆறு கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகர் யோகிபாபுவுக்கு இதில் ஸ்டைலிஷான கதாபாத்திரம். இந்த மூன்று கதாநாயக\ர்களில் தீயா வேலை செய்யணும் குமாரு என்று சொல்ல வேண்டுமென்றால் ஜீவாவைச் சொல்லலாம்.

இதுவரை நான் பணியாற்றிய நடிகைகளிலேயே சவாலான நடிகை என்றால் அது சம்யுக்தாதான். இந்தப் படத்தில் அவர் கண் சிமிட்டாமல் நடிக்க வேண்டிய ஒரு காட்சியைப் படமாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதேபோல ரைசாவைப் பார்க்கும்போது யாரிடமோ அட்ரஸ் கேட்டு வந்தவர் போல காட்சியளிப்பார். ஆனால் கேமரா முன் வந்துவிட்டால் அந்தக் கதா பாத்திரமாகவே மாறிவிடுவார். அம்ரிதாவைப் பொறுத்தவரை நம்மைவிட இன்னொரு நடிகைக்கு அதிகக் காட்சிகள் கொடுக்கிறார்களோ என்கிற எண்ணம் ஓடிக்கொண்டே இருப்பது போல எந்நேரமும் ஒரு சந்தேகத்தி லேயே இருப்பார்.

அதேபோல ஆக்சன் படத்தில் ஹீரோக்களுக்கு அடிபடுவது பற்றி கேள்விப் பட்டு இருக்கிறோம். ஆனால் ‘ரொமாண்டிக்’ படத்தின் கதாநாயகி அடிபடுவது என்பது புதுசாகத்தான் இருக்கும். அது வேறு யாருமல்ல, மாளவிகா சர்மா தான். டேமேஜ் ஹீரோயின் என்று கூட சொல்லலாம். அவர் ஒருநாள் இருந் தாலும் கூட அது பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். இந்தப் படத்தில் நடித்த கதாபாத்திரங்களில் முக்கியமாக இடம் பெற்றுள்ள அந்தக் குழந்தை நட்சத்திரம்தான் படத்தின் திருப்புமுனை கதாபாத்திரம். நானும் யோகிபாபு பேசிக்கொள்ளும்போதுகூட அந்தக் குழந்தை யின் அப்பா அம்மா நமக்காகவே பெற்றுவிட்டு இருக்காங்களோ என்று பேசிக்கொள்வோம்.

படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையும் இணைக்கும் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார். கதாபாத்திரத்தை மட்டும் எழுதும்போது டி.டி.யை தவிர வேறு யாரையும் யோசிக்கவில்லை. காலில் அடிபட்டு இருந்த நிலையி லும் கூட கஷ்டப்பட்டு நடனமாடினார்” என்றார்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரான நடிகை குஷ்பு பேசும்போது, ‘நான் ஒரு தயாரிப்பாளராக இங்கே இருக்க எனது கணவர் சுந்தர்.சி தான் காரணம். ஒரு தயாரிப்பாளராகச் சொல்கிறேன். அவரை நம்பி தாராளமாகக் காசு போடலாம். தயாரிப்பாளர்கள் நிம்மதியாகப் போய் தூங்கலாம். இந்தப் படத்தை 35 நாட்கள் ஊட்டியில் படமாக்கினார்கள். ஒரு நாள் கூட என்னைப் படப்பிடிப்பிற்கு வா என சுந்தர்.சி அழைத்ததே இல்லை. என்னுடைய திருமண நாள் வருகிறதே என்று நானாக அவரிடம் போன் செய்து கேட்டபின் மூன்று நாட்கள் ஊட்டிக்குச் சென்று படக்குழுவினருடன் தங்கியிருந்தேன்.

இந்தப் படத்தில் பிரதாப் போத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இந்த நேரத்தில் இல்லாதது மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது. இந்தப் படத்தில் நான் நடித்த ‘ரம்பம்பம்’ பாடலைப் பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால் அதில் ஆடுவதற்கு என்னை அழைக்கவில்லை. நாளை பாடலைப் படமாக்க இருக்கிறார்கள் என்றால் சென்னையில் இருக்கும் என்னிடம் அதற்கு முதல் நாள் இந்தப் பாடலைப் படமாக்கப் போகிறோம் என்று கூறினார் சுந்தர்.சி. மற்றவர்கள் இது பற்றி அவரிடம் கேட்டபோது அவங்க ஆடி ஏற்கெனவே அந்தப் பாடலை எல்லாம் பாத்துட்டாங்கல்ல என்று சமாளித்தார்” என தனது கணவர் சுந்தர்.சி பற்றி ஜாலியாக புகார் பத்திரம் வாசித்தார் குஷ்பு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!