வணிக வெற்றிக்கு ஹீரோக்களின் கால்ஷீட்டையோ, பிரம்மாண்ட பட்ஜெட்டையோ எதிர்பார்க்காமல் நல்ல கதைக்களத்தை மட்டுமே நம்பி நிறைய நல்ல திரைப் படங்களைக் கொடுத்துவருகிறது மலையாள சினிமா. அவற்றில் நான் கண்டுகளித்த சில படங்களை இங்கே உங்களுக்காகத் தருகிறேன்.
வாசி
கீர்த்தி சுரேஷ் – டொவினோ தாமஷ் இணைந்து நடித்த ‘வாசி’ என்ற திரைப்படத்தை இயக்குநர் விஷ்ணு ஜி. ராகவ் இயக்கியுள்ளார். ‘வாசி’ திரைப்படத்தை கீர்த்தி சுரேசின் அக்கா தன்னுடைய ரேவதி கலாமந்திர் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். வெளியிட முடியாத நிலையில் நடிகர் சூர்யா கைகொடுத்து வெளியானது. ஒரு வழக்கு வருகிறது. ஒரு பழகிய பெண்ணிடம் பாலுறவு வைத்துக்கொண்டு பிறகு மறுக்கும் ஒருவனின் வழக்கில் பெண்ணின் தரப்பில் நாயகனும் ஆணின் தரப்பில் நாயகியும் இறங்கி வாதாடுகிறார்கள். இவர்கள் ஏற்கெனவே ஒரு மூத்த வழக்கறிஞரிடம் ஜூனியராகப் பணியாற்றியவர்கள். அப்போது இவர்களுக்குள் காதல் மலர்கிறது. இவர்கள் வழக்கு நடத்த ஒரே அறையை பகிர்ந்துகொள்கிறார்கள். அப்போதுதான் இந்த வழக்கு இவர்களிடம் வருகிறது. வழக்கு நடக்கும்போதே இவர்களுக்குத் திருமணம் நடக்கிறது. இதற்கிடையே வழக்கு சம்பந்தமாக இருவருக்குள்ளும் ஈகோ ஏற்படுகிறது. வழக்கு பல கட்டங்களைக் கடந்து நாயகனுக்கு சாதகமாக வருகிறது. நாயகியின் வாதி அவரின் உறவினப் பையன். இருந்தாலும் அவனிடம்தான் தவறு இருக்கிறது. இவர்களுக்குள் ஏற்படும் ஈகோ பெரியதாகி இவர்களுக்குள் விவாகரத்து வழக்கிவிடுமா என்று எண்ணத் தோன்றும். ஆனால் வழக்கு முடிந்ததும் வழக்கம்போல் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்குகிறார்கள். கதை சுபம். படம் தொடங்குவதும் முடிவதும் தெரியவில்லை. இரவு 11 மணிக்கு மேல் பார்க்கத் தொடங்கி 1 மணிக்கு முடிந்தது. தூக்கம் கண்ணைக் கட்டவில்லை. வாய்ப்பிருந்தால் ஒரு முறை கண்டுகளியுங்கள்.
ஈசோ
குறைவான பட்ஜெட்டில் சமூகப் பிரச்னையைப் பேசும் படம் ‘ஈஷோ’. மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது. ராமச்சந்திரன் பிள்ளை கேரக்டரில் ஜாஃபர் இடுக்கி மற்றும் ஈஷோ ரோலில் ஜெயசூர்யா நடித்திருக்கிறார்கள். இரண்டு மகள்களுக்குத் தந்தையான ராமச்சந்திரன் பிள்ளை என்பவர் ஏ.டி.எம் செக்யூரிட்டியாகப் பணியாற்றுகிறார். இவர், பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இரண்டு சிறுமிகளின் வழக்கில் முக்கிய சாட்சி. குற்றம் சாட்டப்பட்டவரின் கையில் அதிகாரம் இருப்பதால், ஏ.டி.எம் செக்யூரிட்டியான ராமச்சந்திரனை கொலை செய்யத் திட்டம் தீட்டப்படுகிறது.
அடுத்த நாள் காலை சாட்சி சொல்ல நீதிமன்றம் செல்ல விடாமல் தடுக்க, இரவோடு இரவாகக் கொலை செய்துவிட அடியாளை அனுப்புவார். இரவு நேரத்தில் நைட் வாட்ச்மேனாக ஏ.டி.எம் வாசலில் இருக்கும் ராமச்சந்திரனை ஈஷோ என்பவர் சந்திப் பார். யார் இந்த ஈஷோ என்பது பார்ப்பவர்களுக்குத் தெரியாது. சந்தேகத்துக்குரியவ ராகவே இருப்பார். நல்லவனா அல்லது கெட்டவனா? என்கிற சந்தேகம் எழுந்து கொண்டே இருக்கும். அப்போது அந்த வாட்ச்மேனும் ஈஷோவும் நிகழ்த்தும் உரை யாடல் மிகவும் சுவாரசியமாக அமைந்திருக்கிறது. இரவு பல காட்சிகள் மாறி மாறி நிகழ்கிறது. கொல்ல வந்த ஈஷோவே இந்த வாட்ச்மேனை காப்பாற்றுகிறார். சாட்சி சொல்ல வேண்டிய கொலை வழக்கு என்ன? அடுத்த நாள் காலை நீதிமன்றத்தில் ராமச்சந்திரன் பிள்ளை சாட்சி சொன்னாரா என்பதே கதைக்களம்.
ஒரு நாள் இரவில் படத்தின் முழு கதையும் நடக்கிறது. இரண்டு பேருமே போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள். ஒரே லொக்கேஷனுக்குள் முழு கதையையும் நகர்ந்தா லும் எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்டது ப்ளஸ். தளர்ந்த தோற்றத்துடன் அனுபவ நடிப்பை வெளிப் படுத்தியிருக்கிறார் ஜாஃபர் இடுக்கி. அதுபோல, வில்லத்தனத்துடன் பயமுறுத்துகிறார் ஜெயசூர்யா
Amar Akbar Anthony படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மலையாள நடிகர் Nadirshah. காமெடியை மையமாகக் கொண்டு படங்களை எடுக்கும் இவர், இந்தமுறை கொஞ்சம் சீரியஸான ஒரு கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். சிறுமிகளுக்கு நிகழ்த் தப்படும் பாலியல் வன்கொடுமையை மையமாக் கொண்டு த்ரில்லர் ஜானரில் ஒரு கதையைக் கொடுத்திருக்கிறார்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் சிறுமி மட்டுமின்றி, மொத்த குடும்பத் தையும் இந்த சமூகம் எப்படியாக நடத்துகிறது, அதன் விளைவு எப்படியாக மாறுகிறது என்று சொன்ன விதம் அருமை.
நாரதன்
தற்போது தமிழகச் செய்தி சேனல்களில் நடக்கும் பலவித உள்குத்து வேலைகளை பட்டவர்த்தமாக காட்டும் படம் நாரதன். செய்தியாளர்கள், தலைமைப் பதவியில் இருப்பவர்களின் நிலை, அரசியல் கட்சி தலைவர்களின் சேனல் தொடர்பு ஆகியவற்றை அப்பட்டமாகக் காட்டும் படம். குறிப்பாக பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையில் வரத் துடிப்பவர்கள் பார்க்கவேண்டிய படம்.
ஒரு பத்திரிகையாளன் அன்றாடம் படும் அவலங்கள், கதைகளுக்கான வேட்டை, குறை வான சம்பளம் வாங்கும், அதிக வேலை செய்யும் பத்திரிகையாளர்களின் அவலநிலை, நிறுவனங்களிலோ அல்லது வேலையிலோ தங்களுடைய பேரார்வத்துக்காக ஒட்டிக் கொண்டிருக்கும் அவலங்கள், ஒரு பத்திரிகையாளரை எந்த நிறுவனங்கள் கட்டாயப் படுத்துகின்றன என்பதை ‘நாரதன்’ படம்பிடித்துள்ளது.
பிரபல தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளரான சந்திரபிரகாஷ், உயர் அதிகாரிகளின் தேவையற்ற அழுத்தத்திற்கு உள்ளாகிறார். இது அவரை வேலையை விட்டு வெளி யேறத் தூண்டுகிறது. ஒரு போட்டி ஊடகக் குழு அவருக்கு ஒரு புதிய வேலையை வழங்கும்போது, அவர் தன்னை ஒரு கொடுங்கோல் பத்திரிகையாளராக மாறிவிடு கிறார். பிளாக்மெயில் ஜர்னலிசம் செய்கிறார். TRP ரேட்டிங்கிற்காக உண்டாக்கிய பொய் செய்திகளைப் பரப்பவிட்டு தலைகனமாகச் செயல்படுகிறார். ஒரு வழக்கு நீதிமன்றத் துக்கு வருகிறது. அந்த வழக்கை வம்படியாக நடத்துகிறார் கதாநாயகன். ஆனால் அந்த வழக்கு அவருக்கு எதிராகவே திரும்புகிறது. இது தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் தன்மைக்கு எதிரானது காரணம் தீர்வு நியாயமாக வழங்கப்படுகிறது. சேனல் செய்தி யாளர் கைத செய்யப்படுகிறார். தப்பு செய்தால் தண்டனை உண்டு என்கிறது மலை யாளம் சினிமா. நாயகனாக டோவினோ தாமஸ் மிகச் சிறப்பாக கடுகடு முகத்துட னேயே நடித்திருக்கிறார். படம் தொடங்குவதும் முடிவதும் தெரியவில்லை. வேகம் வேகம்.
ஒரு தெக்கன் தள்ளு கேஸ்
எழுத்தாளர் இந்துகோபனின் ‘அம்மிணி பிள்ளை வெட்டு கேஸ்’ என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது ‘ஒரு தெக்கன் தள்ளு கேஸ்’ திரைப்படம். பிஜு மேனன், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஶ்ரீஜித் இயக்கியுள்ளார். இதுதான் இவருக்கு முதல் படம் என்பதும் குறிப் பிடத்தக்கது.
கேரளாவின் வர்கலா அருகேயுள்ள சிறு கிராமத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை பயணிக்கிறது. படம் மொத்தமும் அந்தச் சிறிய கடற்கரை கிராமத்திற்குள் அகப்பட்டுக்கொண்டாலும், காட்சிகளும் அதன் போக்கும் கொஞ்சம் கூட ரசிகர்களை அயர்ச்சிக்குள்ளாக்கவில்லை.
அம்மிணி பிள்ளையான பிஜு மேனனுக்கும், ஊதாரியாக சுற்றித் திரியும் ரோஷன் மேத்யூக்கும் இடையில் ஏற்படும் ஈகோவும், அதன் விளைவுகளும் தான் படத்தின் ஒருவரிக் கதை.
அம்மிணி பிள்ளையான பிஜு மேனன் ஒரு பிரச்சினையில் பொடியன் ரோஷன் மேத்யூவை அடித்து விடுகிறார். அந்தச் சம்பவம் கிராம மக்கள் அனைவருக்கும் தெரியவர, அதனால் ரோஷன் மேத்யூவுக்கு அவமானமாகப் போய்விடுகிறது. அதுமட்டுமா! அவன் ஆழ்மனம் முழுவதும் பிஜூ மேனனை பழிவாங்க வேண்டும் என்ற வன்ம்ம. ஒருகட்டத்தில் பொடியனும் அவனது நண்பர்களும் சேர்ந்து அம்மிணி பிள்ளையை வெட்டி விடுகிறார்கள். பிஜு மேனன் ஒரு யானையைப் போல பொடியனையும் அவனது கூட்டத்தையும் தூக்கிப் போட்டு பந்தாடுகிறார். தன்னை வெட்டியவர்கள் யார் எனத் தெரிந்தும் போலீஸாரிடம் கேஸ் கொடுக்காமல் விட்டு விடுகிறார் பிஜு மேனன். ஆனால் உடல் நலம் தேறிவந்ததும் வெட்டியவன் ஒருவனைப் பிடித்து வந்து தன்னை வெடியவர்களின் பெயர்களை எழுதவைத்து ஒவ்வொருவரையும் பெயர்கள் எழுதப்பட்ட இடத்துக்கு அழைத்து வந்து மக்கள் முன் அவர்களை அடிக்கிறார். இதுதான் கதை. ஒரு நாவலைப் படமாக்கும்போது கதையின் மூலத்தைச் சிதைத்துவிடுவார்கள். ஆனால் இதில் ஒரு நாவல் அப்படியே படமாக்கப்பட்டுள்ளது. கௌரவமான நாயகன். பார்க்கவேண்டிய படம்.
ரெண்டகம்
வேலையில்லாமல் சுற்றித் திரியும் கிச்சுவுக்கு (குஞ்சாக்கோ போபன்) தனது காதலி கல்யாணியுடன் (ஈஷா ரெப்பா) சேர்ந்து இந்த நாட்டை விட்டு வெளியேறி நார்வே சென்று செட்டிலாகிவிட வேண்டும் என ஆசை. தன் கனவை நிறைவேற்ற போதிய பணமில்லாமல் தவிக்கும் அவரை நாடும் மர்ம கும்பல், தாவூத் (அரவிந்த்சாமி) என்பவரிடம் பழகி நட்பாகி அவரின் நினைவை மீட்டெடுக்க வேண்டும் என்ற மிஷனை கொடுக்கிறது.
அதற்கு ஒப்புக்கொண்டு தாவூத்துடன் பழக ஆரம்பிக்கும் கிச்சு, தனக்கு கொடுக்கப்பட்ட மிஷனை சரியாக முடித்தாரா, தாவூத்துக்கு நினைவு திரும்பியதா என்பதோடு மட்டுமல்லாமல், அந்த மிஷனால் அவர் வாழ்க்கையில் நிகழும் திருப்பங்களையும் சேர்த்து ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் படம்தான் ‘ரெண்டகம்’.
ஒரு படத்தின் முந்தைய கதையையும் சொல்லாமல், பிந்தைய கதையையும் சொல்லாமல் வெறும் நடுப்பகுதியை மட்டும் காட்சிப்படுத்தி புதுமை புகுத்த நினைத் திருக்கிறார் ஃபெலினி டி.பி.
‘சாப்டர் 2’ என முடித்து ‘சாப்டர்1’ மற்றும் ‘சாப்டர் 3’-க்கு லீட் கொடுத்திருக்கிறார்கள். மலையாள நடிகர் குஞ்சாகாபோபனுக்குத் தமிழில் இது முதல் படம். வாரி சுருட்டிய தலைமுடி, ஷேப் வைக்கப்பட்ட தாடி, இறுதிக்காட்சியில் மாஸ் கூட்டுவது என மலையாள மண்ணின் சாயலிலிருந்து விடுப்பட்டு கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறார்.
நரைத்த முடி, பொருந்தாத ஜிப்பா, அப்பாவி முகம் டூ மும்பை தாதா உருமாற்றத்தில் மலையாள ஸ்டைலில் வேட்டியைக் கட்டிக்கொண்டு நடந்துவரும் அரவிந்த் சாமி. இரண்டு பெரும் நடிகர்களின் கெமிஸ்ட்ரி திரையில் துறுத்தாத இணைவைக் கொடுப் பது படத்திற்கு பலம்.
இறுதிக் காட்சியை நெருங்கும்போது, படம் மொத்தமாகப் பல்வேறு திருப்பங்களுடன் உருமாறுவது படத்தின் தரத்தை உயர்த்துகிறது. மொத்தத்தில், குஞ்சாக்கோ போபன் – அரவிந்த் சாமி ‘கூட்டணி’ ஈர்த்துள்ளது. ஆனால், முதல் பாதியில் விறுவிறுப்பான, சுவாரஸ்யமான காட்சிகளை சேர்த்து, இரண்டாம் பாதியை தெளிவாக்கியிருந்தால் ‘ரெண்டகம்’ பார்வையாளர்களின் கவனத்தை இன்னும் ஈர்த்திருக்கும்.
ஆபரேஷன் ஜாவா
கேரள காவல் துறையின் சைபர் கிரைமில் தற்காலிகப் பணியை மேற்கொள்ளும் இரண்டு இளைஞர்களின் வழியாக இந்தத் திரைப்படம் விரிகிறது. பிடெக் படித்துள்ள அந்த இளைஞர்கள் சரியான பணி கிடைக்காமல் சமூக அங்கீகாரத்திற்காக தம்முடைய கணினி அறிவை காவல்துறைக்கு தாரை வார்க்கின்றனர்.
கேரள மாநிலத்தில் 2015 – 2017-ம் ஆண்டுகளின் இடையில் நிகழ்ந்த உண்மையான இணையக் குற்றங்கள், அவை சார்ந்த வழக்கு விசாரணைகளின் வழியாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த துண்டு துண்டு சம்பவங்களை சேர்த்துப் படமாக்கிய விதம் அருமை. அறிமுக இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கியிருக்கிற இந்த மலையாளத் திரைப்படம் பரவலான வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது. கேரளத்தில் நிகழும் பல்வேறு இணையக் குற்றங்களின் விசாரணைக் காட்சிகளும் பகுதி பகுதியாக வருகின்றன. நன்கு படித்தும் வேலை கிடைக்காத இரு இளைஞர்கள், சைபர் கிரைமிற்கு உதவுகின்றனர். அனைத்து வழக்குகளிலும் தங்களின் அறிவைச் சிறப்பாகப் பயன்படுத்தி விடையைக் கண்டுபிடிப்பதில் பெரும் பங்காற்றும் அவர்கள், இறுதியில் சக்கையாகப் பயன்படுத்தப்பட்ட கறிவேப்பிலை போல வெளியேற்றப்படு கிறார்கள்.
நிரந்தர ஊழியர்களை அமர்த்துவது என்பது பெரும் நிதிச்சுமை என்பதால் அரசும் சரி, தனியார் அலுவலகங்களும் சரி, ஒப்பந்த, தற்காலிக பணியாளர்களையே பெரும்பாலும் நியமிக்கின்றனர். எனவே என்னதான் திறமையாக உழைத்தாலும் பணி நிரந்தரமின்மை என்னும் கத்தி அவர்களின் தலைக்குமேல் நின்றபடியே இருக்கிறது. இதுவே அவர் களுக்கு பெரும் மனஉளைச்சலைத் தருகிறது. சமூக பாதுகாப்பில்லாத இந்த உணர்வை படம் மிக கச்சிதமாக இறுதியில் வெளிப்படுத்தியிருக்கிறது.
நம் சமூகத்தில் இணையம் தொடர்பாக எத்தனை குற்றங்கள் சமீபத்தில் பெருகியுள்ளன என்பதைத் தீவிரமும் நகைச்சுவையும் கலந்த காட்சிகளாகச் சொல்லிச் செல்கின்றனர்.
இதன் இயக்குநரான தருண் மூர்த்தி அடிப்படையில் கணினி தொடர்பான படிப்பை முடித்தவர். என்பது குறிப்பிடத்தக்கது.
நா தான் கேஸ் கொடு
தென்னிந்தியாவின் பிற மாநிலங்கள் கடந்த கால, எதிர்கால கதைகள் குறித்த திரைப் படங்களை பிரமாண்டமாக எடுத்துவரும் சூழலில், மலையாளத் திரையுலகம் மட்டும் தொடர்ந்து சாமானிய மக்களின் கதைகளை மையப்படுத்திய திரைப்படங்களை எடுத்து வெற்றி பெற்று வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணமாக ‘நா தான் கேஸ் கொடு’. குஞ்சாக்கோ போபன், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் இந்திய சினிமாவில் மிக முக்கியமான படம்.
திருட்டுத் தொழிலைவிட்டுத் திருந்தி வாழ்ந்து வருபவர் குஞ்சாக்கோ போபன். ஒருநாள் இயற்கை உபாதையை கழிக்க ஒதுங்கிய அவர்மீது திடீரென ஆட்டோ மோத வருகிறது. அந்த விபத்தில் இருந்து தப்ப நினைத்து அருகில் இருந்த ஒரு வீட்டின் சுற்றுச்சுவரை தாவி குதித்து விடுகிறார். அந்த வீட்டில் உள்ள இரண்டு நாய்கள், குஞ்சாக்கோ கோபனை ‘உட்காரும்’ இடத்தில் வெறித்தனமாக கடித்து விடுகின்றன.
இதையடுத்து இந்த விபத்திற்குக் காரணமானவருக்கு எதிராக வழக்கு தொடர்கிறார். இந்த வழக்கில் அவர் வென்றாரா, இல்லையா என்பது படத்தின் கதை. முழு நீள ஒரு கோர்ட் ரூம் டிராமா வகையான கதையை நகைச்சுவை கலந்து எடுத்திருக்கிறார் இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன்.
திரைப்படங்களில் அரசியல் பேச இன்னும் அச்சப்பட வேண்டிய சூழல் நிலவி வரும் இன்றைய சூழலில், இந்தப் படத்தில் சமகால அரசியல் சார்ந்த நிகழ்வுகளை இயக்குநர் கையாண்டிருக்கும் விதம், படம் பார்ப்பவர்களை ரசிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கிறது. படத்தில் வரும் சின்னச் சின்ன வசனங்கள் மூலமாகவும் நிகழ்கால அரசியல் நடப்புகளைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். மேலும், கீழமை நீதிமன்றங்களுக்கான அதிகாரம் வலிமை இந்தப் படத்தில் விரிவாக பேசப்படுகிறது. அங்கு நடைபெறும் வாதங்கள், குறுக்கிடும் சவால்களை தத்ரூபமாக பதிவு செய்திருப்பது சிறப்பு.
Party in Person என்றொரு பதம் நீதிமன்ற கலைச்சொற்களில் உண்டு. இது, வழக்குத் தொடர்ந்த மனுதாரரே, அவருக்காக நேரில் ஆஜராகி வாதிடுதலைக் குறிக்கும். இந்தப் படத்திலும், குஞ்சாக்கோ போபன் தன் வழக்கிற்காக வாதிடுகிறார். இப்படி தங்களது வழக்கில் தாங்களே ஆஜராகி வாதிடுபவர்கள் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து படத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இறுதியில் வழக்கு மத்திரியின் மேல் பாய்ந்து நீதிபதி அமைச்சரை கைது செய்கிறது போலிஸ். பார்க்க வேண்டிய படம்.
தள்ளுமாலா
‘தள்ளுமாலா’ என்றால் ‘சண்டைகளின் மாலை’ என்று பொருள். அதாவது, மோதல் களின் தொகுப்பு என்று கொள்ளலாம்.
சண்டை சர்க்கரைப்பொங்கல் என்ற ரீதியில் எவருடனும் சண்டையிடத் தயாராக இருக்கும் குணாம்சம் கொண்டவர் வஸீம் (டொவினோ தாமஸ்). அவரும் எஸ்.ஐ. ரெஜியும் (ஷைன் டாம் சாக்கோ) சண்டையிடுவதில் படம் தொடங்குகிறது. இதற்கு முன்னர், இருவரும் சண்டையிட்ட ஒரு பொழுதில் வஸீம் திருமணம் நின்றுபோனது இன்னொரு கிளைக்கதை.
வஸீமுக்கும் ரெஜிக்கும் இடையே என்னதான் பிரச்சினை என்று அறியும் முன்னர், வஸீமின் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்கள் அறிய வேண்டும். அவர்களும் கூட ‘சட்டென்று தீப்பற்றும்’ அளவுக்கு ஆத்திரத்தை மூட்டை கட்டிச் சுமந்து கொண்டிருப்பவர்கள்தான். அதுவும் தனிக்கதை தான்.
ஜம்ஷி (லுக்மன் ஆவரன்), சத்தார் (ஸ்வாதி தாஸ்), ராஜேஷ் (ஆஸ்டின் டேன்), விகாஸ் (அத்ரி ஜோ) என்று நண்பர்கள் ஒவ்வொருடனும் மோதலுக்குப் பின்னர் நட்பானவர் வஸீம். இவ்வளவு ஏன், தனது காதலியான பீ பாத்து என்ற பாத்திமாவை (கல்யாணி) முதன்முதலாக ஒரு மோதலின் வழியேதான் அவர் சந்திக்கிறார்.
தொட்டதற்கெல்லாம் சண்டை என்றிருக்கும் வஸீம், ஒரு கட்டத்தில் தனது ஆத்திரத் தால் தந்தை நடத்திவரும் தியேட்டர் தீக்கிரையாகக் காரணமாகிறார். இதையடுத்து, பணி நிமித்தம் துபாய் செல்கிறார். இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் கேரளா திரும்புபவர், திரும்பவும் பாத்திமா உடன் நட்பு கொள்கிறார். அது காதலாகக் கனிகிறது.
இருவரது குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட, திருமண நாளுக்கு முன்னதாக ரெஜியும் அவரது நண்பர்களும் வஸீம் வீட்டுக்கு வருகின்றனர். இது வஸீம் நண்பர்களிடம் கோபத்தை விதைக்கிறது. காரணம், சில ஆண்டுகளுக்கு முன்னதாக ரெஜி குரூப்பிடம் வஸீம் குரூப் அடி வாங்கினர் என்ற முன்கதை.
அப்புறமென்ன, திருமண நிகழ்வையும் மீறி வஸீம் குரூப்பும் ரெஜி குரூப்பும் ஏன் மோதிக் கொண்டார்கள்? அதன் பின்விளைவுகள் என்ன? பாத்திமாவும் வஸீமும் இணைந்தார்களா என்று சொல்கிறது ‘தள்ளு மாலா’.
ரொம்பவும் எளிமையான கதையாக இருந்தாலும், காட்சிகளை ‘நான் லீனியர்’ முறையில் வெவ்வேறு அத்தியாயங்களில் அடக்கி கவனம் ஈர்க்கிறது திரைக்கதை. இயக்குனர் காலித் ரஹ்மான். டொவினோ தாமஸ், கல்யாணி, லுக்மன் ஆவ்ரன், ஷைன் டாம் சாக்கோ நடிப்பில், விஷ்ணு விஜய் இசையில், காலித் ரஹ்மான் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ’தள்ளு மாலா’ அப்படியொரு ‘ட்ரெண்ட்செட்டர்’ தகுதியை எட்டியிருக்கிறது.
சீதா ராமம்
தேசபக்தியையும் மதவாதத்தையும் அறவே பின்பற்றும் அஃப்ரீனா (ரஷ்மிகா) லண்டனில் தான் படிக்கும் கல்லூரி உரிமையாளரின் காரை உடைத்துவிடுகிறார். அதற்குத் தண்டனையாக 10 லட்சம் ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் தருமாறு அஃப்ரீனாவிடம் கேட்கிறார். அப்படி முடியாத பட்சத்தில் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென கல்லூரி உரிமையாளர் கேட்க, ஒரு இந்தியனிடம் பாகிஸ்தானி பெண்ணான நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் மாறாக காசை தருகிறேன் என்கிறார்.
பின், தனது இறந்துபோன தாத்தா தனக்கென ஏதேனும் சொத்து சேர்த்து வைத் துள்ளாரா? என குடும்ப வக்கீலிடம் வினவுகிறார் அஃப்ரீனா. அப்போது, 20 வருடங் களுக்கு முன் ராம் (துல்கர்) எழுதிய கடிதம் ஒன்றை சீதா மகாலட்சுமியிடம் (மிருணால்) ஒப்படைத்தால் தான் அவருக்குச் சேர வேண்டிய சொத்து சேரும் என உயில் ஒன்று வரையப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் வக்கீல்.
எனவே அந்த கடிதத்தை ஒப்படைக்க இந்தியா வருகிறார் அஃப்ரீனா. அப்போது 20 வருடங்கள் கழித்து முகவரி தெரியாத சீதா மஹாலட்சுமியை கண்டு கடிதத்தை ஒப்படைத்தாரா? அந்த கடிதத்தில் ராம் எழுதியது என்ன? என்பது படத்தின் மீதிக்கதை.
ராம் மற்றும் சீதாவின் காதலைப் பற்றிய கதையை இந்த விமர்சனத்தில் தெரிவிக் காததன் காரணம். படிப்பதைவிட திரையில் இசையுடன் கண்டு உணர்வதுதான் சிறந்த தருணமாக இருக்கும் என்பதனால் தான்.
துல்கர் சல்மான், மிருணால் தாகூர், ரஷ்மிகா மந்தனா, சுமந்த, கவுதம் வாசுதேவ் மேனன், சச்சின் கேதேகர், பிரகாஷ் ராஜ், முரளி சர்மா, வெண்ணிலா கிஷோர், தருண் பாஸ்கர், பூமிகா என பலரின் நடிப்பில் உருவான காவியக் கதை தான் “சீதா ராமம்”. ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். விஜய் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
நடிப்பில் அனைத்து கலைஞர்களும் மிக யதார்த்தமாகவும், அளவான நடிப்பையும் வெளிப்படுத்தி படத்திற்கு வலு சேர்த்துள்ளனர். 65 மற்றும் 85ஆம் காலத்திற்கேற்ற படியான ஆடை அமைப்பும் இப்படத்திற்கு சிறப்பு சேர்த்தது.
ஆகச்சிறந்த திரைக்கதையை அமைத்தது இயக்குநரின் முதல் வெற்றி. உணர்ச்சிகர மான வசனங்கள் எழுதி இக்கதையை மேலும் சிறப்பாகியுள்ளார் மதன் கார்க்கி. என்ன தான் திரைக்கதை, காட்சிபடுத்திய விதம், வசனம் என அனைத்தும் சிறப்பாக இருந்தாலும். நம்மை பல இடங்களில் கண்கலங்கச் செய்தது விஷால் சந்திரசேகரின் இசை தான். பாடல்களும் பின்னணியும் அவ்வளவு இனிமை. நாயகி இருபது வருடங்களாக வயதாகாமல் அப்படி இருப்பதுதான் நம்பமுடியவில்லை. மற்ற காமல் ரசம் பிழியும் படம்.
ஹெவன்
எஸ்.ஐ. பீட்டர் குரிஷிங்கலின் மகன், அவனது வகுப்புத் தோழன் மற்றும் குடும்பத் தினருடன் கொலை செய்யப்படுவதைப் பார்க்கும் ஒரு புலனாய்வு திரில்லர்.
விதுரர் எஸ்.ஐ. பீட்டர் குருஷிங்கலின் (சுராஜ் வெஞ்சாரமூடு) மகன் செபின், அவரது வகுப்புத் தோழன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வீட்டில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். பிஜோய் குறிவிலா (சுதேவ் நாயர்) தலைமையிலான காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில், இந்தக் கொலைகள் கொள்ளையின் ஒரு பகுதியாக நடந்ததாக முடிவு செய்கிறது. நெறிமுறை காரணமாக, பீட்டரை விசாரணைக் குழுவின் ஒரு பகுதியாக ஆக்குவதற்கான கோரிக்கைகளுக்குப் பிறகும், அவர் விசாரணைக் குழுவிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார், ஆனால் SP அவரை இணையான விசாரணை செய்ய அனுமதிக்கிறார். அந்தக் குழு குற்றம் செய்த ஸ்டீபன் (ஜாஃபர் இடுக்கி) கொலையாளி அல்ல என்பதை அவர் கண்டுபிடித்தார்.
விசாரணையை பொறுப்பேற்குமாறு பீட்டர் கேட்கப்படுகிறார், இது குற்றவாளிக்கு வழி வகுக்கிறது மற்றும் ஒரு குடும்பம் மற்றும் வீட்டிற்கு ஒரு பார்வையாளராக இருந்த செபின் அந்த அதிர்ஷ்டமான நாளில் ஏன் கொல்லப்பட்டனர் என்பதற்கான பதிலுக்கு வழிவகுக்கிறது.
சுராஜ் வெஞ்சாரமூட் தனது பாத்திரத்தின் தொழில்முறை மற்றும் உணர்ச்சி அம்சங் களை சிறப்பாகக் கையாளுகிறார். அவர் மகன் கொலை செய்யப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் அவரது உதவியற்ற தன்மையை சித்திரிக்கும் விதத்தில்.
அலென்சியர்லே தனது போலீஸ் பாத்திரத்தில் ஒரு நல்ல வேலையைச் செய்கிறார், மேலும் இது ஒரு புலனாய்வு திரில்லர் என்பதால், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சந்தேகிக்க முனைகிறோம். மொத்தத்தில், இது ஒரு புலனாய்வு திரில்லர் படம்; நீங்கள் விசாரணை திரைப்படங்களின் தீவிர ரசிகராகவும், சூரஜ் ரசிகராகவும் இருந்தால், அதற்குச் செல்லுங்கள்.
கார்கி
ஒரு சிறுமி, அவள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள். குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் என்ற அடிப்படையில், அங்கு காவலாளியாகப் பணியில் இருந்த முதியவர் பிரம்மானந்தம் (ஆர்.எஸ். சிவாஜி) கைதாகிறார். அப்பா ஒரு பாலியல் குற்றவாளியாக இருக்க முடியாது என்று நம்பும் அவரது மகள் கார்கி (சாய் பல்லவி), தன் தந்தையைக் காப்பாற்ற, சமூகத்துடனும், சட்டத்துடனும் நடத்தும் போராட்டமும், அதன் முடிவும் தான் கதை.
ஒருவர் குற்றவாளியா, இல்லையா என்பதை தீர்மானிப்பதில், அவர் மீது நாம் வைத்திருக்கும் அன்பும், பாசமும், உறவின் முக்கியத்துவமும் தாக்கம் செலுத்தக் கூடாது என்பதை பொட்டில் அறைந்து சொல்கிறது படம். உரிமைகள் படிப்படியாக கிடைத்தாலும், பெண்கள் எப்படிப்பட்ட போராட்டத்துக்கும் தயாராக வேண்டும் என்பதை யும் உணர்த்துகிறது.
படத்தின் இறுதியில் நிகழும் திருப்பம் கதாபாத்திரங்களை மட்டுமின்றி, பார்வையாளர் களையும் அதிர்ச்சியில் உறையவைக்கிறது. சாய் பல்லவியின் நடிப்புப் பயணத்தில் இப்படம் மற்றொரு மகுடம்.
அவருக்கு உதவும் வழக்கறிஞராக காளி வெங்கட், சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கவுதம் ராமச்சந்திரனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் ஆண்களின் உலகத்துக்கு ‘கார்கி’ விடுக்கும் செய்தியும், அவர்களிடம் கோரும் மனமாற்றமும்தான் பெரும் படைப்பாகவும், பாடமாகவும் ஆக்குகின்றன.
ஃபயர்மேன்
ஃபயர்மேன் என்பது 2015ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம். தீபு கருணாகரன் இயக்கியது மற்றும் கேலக்ஸி பிலிம்ஸ் பேனரில் மிலன் ஜலீல் தயாரித்தது. இதன் கதை ஒரே நாளில் நிறைவடைகிறது. இதில் மம்முட்டி, உன்னி முகுந்தன், சித்திக் மற்றும் நைலா உஷா ஆகியோர் நடித்துள்ளனர்.
நரேந்தன் ஆச்சாரி, மூளைக் கட்டியால் சிகிச்சை பெற்ற மகளுடன் ஒரு கடையில் இருக்கும்போது அவரது மகள் காணாமல் போகிறார். ஒரு ஆவேசத்தில் அவர் அருகி லுள்ள காவல் நிலையத்திற்கு விரைகிறார். ஆனால் அவளைக் கண்டுபிடிப்பதில் அவர் கள் முயற்சி செய்யாததால் விரக்தியடைந்தார்.
அதே நாளில், தீயணைப்பு வீரர் லட்சுமணன் பிள்ளை பணியிலிருந்து வெளியேற்றப்பட் டார். பின்னர் ஆச்சாரி தனது காரில் ஓட்டிச் சென்று எல்.பி.ஜி. டேங்கரை சாலையில் கவிழ்த்து விபத்தை ஏற்படுத்துகிறார். உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது மற்றும் காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர் வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர்.
இருப்பினும், டேங்கரில் ஒரு கசிவு ஏற்படுகிறது. ஒரு போலீஸ் அதிகாரி கவனக்குறை வாக ஒரு வெடிப்பை ஏற்படுத்துகிறார். ஆனால் பிள்ளை இதை முறியடிக்க முயன்றார். அடுத்தடுத்து வெடித்ததில் பிள்ளை படுகாயமடைந்து அவரது கீழ் உடலை அழித்தார். தீ நாயகன் விஜய் அந்த இடத்தில் வீரத்துடன் தோன்றி பேரழிவைத் தவிர்க்கும் பொறுப்பை ஏற்கிறார்.
ஒரு பெரிய பேரழிவைத் தடுக்கிறார். அடுத்த நாள், தங்கள் அன்பான சக ஊழியர்களின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வேண்டிய விஜய் மற்றும் அவரது குழுவினர், அவசர அழைப்பைப் பெற்று, விபத்தைத் தடுக்க முடிவு செய்தனர். ஹீரோ சொல்வது போல், 101க்கு டயல் செய்யும் ஒரு சாமானியர், எந்த பிரச்சினையிலும் தன்னை காப்பாற்ற தீயணைப்பு வீரர் வருவார் என்று நம்புகிறார். பரபரப்பான படம். மம்முட்டியின் நடிப்பு கதை ஓட்டத்துக்கு உதவுகிறது.
சி.பி.ஐ.- 5
சிபிஐ அதிகாரி சேதுராம ஐயராக மம்மூட்டி நடித்துள்ளார். சி.பி.ஐ. சீரிஸின் ஐந்தாவது படம் இது. நான்காவது பாகம் வெளியாகி 17 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியான இந்தப் படம் இது.
கொலை வழக்குகளைத் துப்புத்துலக்கும் அதிகாரியாக நாயகன் நடிக்கும் படங்களை எடுத்துக் கொண்டால், மலையாள சினிமாவின் முன்னோடி படமாகக் கருதப்படுவது 1988-ல் வெளியான ஒரு சி.பி.ஐ. டைரிக் குறிப்பு’‘. கே.மாது இயக்கத்தில் கொலை வழக்கொன்றை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரி சேதுராம ஐயர் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருப்பார். மிகப் பெரிய வெற்றிபெற்ற இந்தப் படத்தின் திரைக்கதையை எஸ்.எஸ்.சுவாமி எழுதியிருந்தார்.
அதுவரை வெளியான கொலை வழக்குகளைத் துப்புத் துலக்கும் படங்களில் இருந்து தனித்துத் தெரிந்தது ஒரு சி.பி.ஐ. டைரிக்குறிப்பு. ஓமணா என்ற பெண்ணின் மர்ம மரணத்தைச் சுற்றி நிகழ்ந்த சம்பவங்களின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் சேதுராம ஐயரின் சாமர்த்தியத்தை கேரளாவே கொண்டாடியது. பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் சேதுராம ஐயராக சிறப்பான நடிப்பை மம்மூட்டி கொடுத்திருந்தார். அவரது கரியரில் முக்கியமான படமாக மாறியது.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மம்மூட்டி – கே.மாது – எஸ்.என்.சுவாமி கூட்டணி இரண்டாவது முறையாகக் கைகோர்த்தது. இந்தக் கூட்டணியில் 1989-ல் வெளியான ஜகர்த்தா படமும் ஹிட்டடித்தது. அதன்பின்னர், சுமார் 15 ஆண்டுகள் கழித்து சிபிஐ சீரிஸில் மூன்றாவது படம் சேதுராம ஐயர் சி.பி.ஐ. என்ற பெயரில் 2004-ல் வெளியானது. இந்த சீரிஸின் நான்காவது பாகமான நேரறியான் சி.பி.ஐ. 2005-ல் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த நிலையில், சி.பி.ஐ. சீரியஸின் ஐந்தாவது படம் ‘சி.பி.ஐ. 5’ கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கழித்து உருவாகிறது.
நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்குவதாக இருந்தது. கொரோனா சூழலால் தள்ளிப்போன நிலையில், வெளியாகி வெற்றி பெற்றது. மம்முட்டியின் நடிப்பு கதை ஓட்டத்துக்குச் சிறப்பு.
அடுத்து மேலும் சில மலையாளப் படங்களின் விமர்சனத்தில் சந்திப்போம்.