தாதா சாகேப் பால்கே விருது பெறுகிறார் இந்தி நடிகை ஆஷா பரேக்

2 0
Spread the love
Read Time:8 Minute, 25 Second

பாலிவுட்டில் 79 வயதான பழம்பெரும் நடிகை ஆஷா பரேக், 2020-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதைப் பெறுகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார். இந்த விருது புதுடெல்லியில் நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படவிருக்கிறது.

திரைத்துறையில் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படும் ‘தாதா சாகேப் பால்கே’ விருது, அத்துறையில் வாழ்நாள் சாதனை படைத்த ஒரு கலைஞருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்நிலையில், 2020ம் ஆண்டுக்கான விருது (27-9-2022) நேற்று ஆஷா பரேக்குக்கு அறிவிக்கப்பட்டது.

பீமல் ராய் இயக்கிய ‘மா’ (1952) திரைப்படத்தில்தான் ஆஷா பரேக்கை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே ஆஷா பரேக் தனது அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். அதன்பின், 1959ல் நசீர் ஹுசைனின் ‘தில் தேகே தேகோ’ என்ற படத்தில் நடிகர் ஷம்மி கபூருக்கு ஜோடியாக அறிமுகமானார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கும் இவர் இது வரை 95 திரைப்படங்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களைத் தயாரித்ததுடன், இயக்கியும் உள்ள இவர் இந்திய செவ்வியல் நடனக் கலைஞருமாவார்.

மத்திய அரசு ஆஷா பரேக்குக்கு 1992ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கவுரவித்தது. 1998 முதல் 2001 வரை மத்தியத் திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

ஆஷா பரேக் இந்தியத் திரைப்படத் துறையில் அதிகம் கொண்டாடப்படும் திரைக் கலைஞர்களில் ஒருவராக அறியப்படுகிறார். முக்கியமாக 1960, 70களில் பாலிவுட் ஹீரோவாக வலம்வந்த ஷமி கபூர் ஜோடியாக ஆஷா பரேக் தோன்றி நடித்த படங்களை ரசிகர்கள் மட்டுமல்ல, விமர்சகர்ளும் வெகுவாக ரசித்து வரவேற்றனர். இந்திய திரையுலகில் அழுத்தமான தடம் பதித்து அக்காலத்திலேயே பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகை யாக அவர் வலம்வந்தார்.

ஆஷா பரேக் தன் நீண்ட திரைப்பட அனுபவங்களைத் தொகுத்து ‘தி ஹிட் கேர்ள்’ என்று 2017-ல் புத்தகமாகவும் எழுதியுள்ளார்.

தாதா சாகேப் பால்கே யார்?

இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் துண்டிராஜ்கோவிந்த் பால்கே என்னும் தாதா சாகேப் பால்கே. இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

தாதா சாகேப் பால்கே 1870இல் நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார். ஓவியம், சிற்பம், அகழ்வாராய்ச்சி என பல விஷயம் கற்றார். ராஜா ரவிவர்மாவிடம் லித்தோகிராப் வரையும் பணியில் ஈடுபட்டார். பம்பாய் சர்.ஜே.ஜே. கலைக் கல்லூரியில் புகைப்படம் எடுக்கும் முறை யையும், இயற்கைக் காட்சிகளைக் கொண்டு சித்திரம் தீட்டும் முறையை யும் படிப்படி யாகக் கற்றார்.

தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப் படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் ராஜா ஹரிச்சந்திரா.

1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும் பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார். இடையில் மேஜிக் தொழில் செய்து வயிற்றுப் பிழைப்பை ஓட்டினார். அப்பொழுதுதான் லூமியர் சகோதரர்கள் ‘கிறிஸ்துவின் வாழ்வு’ என்கிற படத்தை மக்களுக்குப் போட்டுக் காட்டினார்கள், இங்கே இதைப் பார்த்துதான் பால்கே அசந்து போனார். படம் எடுக்க வேண்டும் என்று மனிதருக்கு ஆர்வம் பற்றிக்கொண்டது.

அந்தப் படத்தைப் போல படமெடுக்க வேண்டும் என சினிமா கொட்டகை யில் வேலை பார்த்து பல படங்களைப் பார்த்தார். படங்கள் பெரும்பாலும் மவுனம்தான்; இடையிடையே அலுக்காமல் இருக்க நாடகக் கலைஞர்கள், இசை வல்லுநர்கள் ஆகியோர் உதவுவார்கள். கதையை விளக்கி சொல்வார் கள். அப்படித்தான் போய்க்கொண்டு இருந்தது.

சின்னச் சின்னப் படங்கள் எடுத்து பழகிய பின், இவர் இங்கிலாந்துக்கு கப்ப லேறி வால்டன் ஸ்டூடியோவில் சினிமா கற்றுக்கொண்டு திரும்பினார்; அதோடு நில்லாமல் வில்லியம்சன் கேமரா ஒன்றை வாங்கிக்கொண்டு வந்தார்.

இன்றைக்குப் போல அன்றைக்குத் திரைப்படம் எடுப்பது சுலபமான காரிய மில்லை. படத்தில் நடிப்பதைப் பலர் பாவம் என எண்ணினார்கள். மக்கள் பெரும்பாலும் நாடகங்களில் மூழ்கி இருந்த காலம் அது. பெண்கள் நாடகங்களில் பெரும்பாலும் நடிக்க அனுமதிக்கப்படாமல் இருந்தார்கள். இவர் படம் பார்த்துப் பார்த்துப் பார்வை மங்கி இந்தியா வந்திருந்தார். இவர் பயன்படுத்திய சாமான்களை விற்று ‘ராஜா ஹரிச்சந்திரா’ படம் எடுக்க ஆரம்பித்தார். நடிகர்கள் பஞ்சம் உண்டானது; பெண் வேடத்திற்கு ஆண் களைப் பிடித்தார். நடிக்க பலர் வீட்டில் பிள்ளைகளை அனுப்ப மறுத்தார்கள். ஆகவேதான் நடிப்பு பேக்டரி நடத்துவதாகச் சொல்லி அவர்களைக் கூட்டி வந்தார். ஒரே ஆளாக எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம், காஸ்ட்யூம், விநியோகம் எல்லாமே இவர்தான்.

தனது ஹிந்துஸ்தான் பிலிம் கம்பெனி மூலம் பால்கே 75 படங்களைத் தயாரித்தார். பேசும் படங்கள் வந்ததும் இவரால் தாக்குப்பிடிக்க முடிய வில்லை; நொடிந்து போனார்.

வறுமையில் நாசிக்கில் கவனிப்பு இன்றி மறைந்து போனார். அவர் உருவாக்கிய இந்திய சினிமாதான் உலகிலேயே மிகப்பெரியது. அவரைத் தான் இந்தியத் திரைப்படத்துறையின் தந்தை என்கிறோம். அவரின் முதல் படம் வந்து நூறாண்டுகள் ஆகிவிட்டது. அவரின் பெயரால்தான் இந்தியா வின் மிக உயரிய திரைப்பட விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!