கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலத்திற்குப் பிறகு முற்றிலும் குறைந்த கொரோனா தொற்று காலமாக இந்த ஆண்டு 2022 தீபாவளி அமைந்திருந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. பொதுமக்களும் வழக்கமான உற்சாகத்துடன் இந்தத் தீபாவளியைக் கொண்டாடினார்கள்.
அதேபோல் தமிழ் நடிகை, நடிகர்களும் இந்த ஆண்டு தீபாவளியை உற்சாகக் கொண்டாட்டத்துடன் கொண்டாடினார்கள்.
காலையிலே ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்திருந்த ரசிகர்கள் அவருக்குத் தீபாவளி வாழ்த்தைச் சொல்லி மகிழ்ந்தார்கள். ரஜினிகாந்தும் ரசிகர்களுக்குக் கையசைத்து தீபாவளி வாழ்த்துக்களை வாய்விட்டுச் சொல்லி மகிழ்ந்தார்.
அன்று தன் மகள் ஐஸ்வர்யா வீட்டு வாசலில் பூந்தொட்டியை வெடித்து மகிழ்ந்தார். அடுத்து தன் மகன்களுடன் கால்களில் மஞ்சள் பூசி மகிழ்ந்தார்.மற்றும் பேரப் பிள்ளைகளுடன் தீபாவளியைக் கொண்டாடினார் ரஜினி. அந்த போட்டோக்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா பகிர்ந்துகொண்டார். அது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்ததாக ரசிகர்கள் பகிர்ந்துகொண்டனர்.
சூர்யா வீட்டில் தீபாவளிக் கொண்டாட்டம் களை கட்டியது. சிவகுமார் அவருடன் ராதிகா மற்றும் சூர்யா, கார்த்தி மற்றும் குடும்பமே குதூகலத்துடன் ஆடிப்பாடிக் கொண்டாடியது பார்த்த அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியது.
அதேபோல் கிண்டியில் உள்ள நடிகர் அருண்விஜய் இல்லத்தில் தீபாவளிக் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக வீதியில் இறங்கிப் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினார். சிலுக்கு ஜிப்பாவை அணிந்துகொண்டு தன் மகனுடன் சேர்ந்து பட்டாசு வெடிக்கும் போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களைப் பரவசப்படுத்தியது.
இந்தத் தீபாவளியில் விசேஷமான விஷயம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடியதுதான். வாடகைத்தாய் விவகாரம் மூலம் குழந்தை பெற்றது தொடர்பாக நயன்தாரா மேல் பல சர்ச்சைகள் எழுந்தவண்ணம் இருந்தாலும் அதைப் பற்றி எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்தாலும் இந்தத் தீபாவளியைத் தன் இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாகப் போஸ் கொடுத்து விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதி குழந்தைகளைக் கைகளில் ஏந்திக் கொண்டாடியது ரசிகர்களை ஆனந்தத்தில் தள்ளியது.
ஆக இந்தத் தீபாவளி திரை நட்சத்திர தீபவாளிதான்.