உதயநிதி அமைச்சராவது மக்களுக்கு பாதிப்பு இல்லை. || அமீர் கருத்து

1 0
Spread the love
Read Time:7 Minute, 24 Second

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. ‘மாநாடு’ என்கிற மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் உயிர் தமிழுக்கு படத்தை வெளியிடுகிறார்.

கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணிய சிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இசை வித்யாசாகர் வித்தியாசமான பின்னணியிலும் பாடல்களிலும் பட்டையைக் கிளப்பியுள்ளார்.

படம் விரைவில் ரிலீசுக்குத் தயாராகி வரும் நிலையில் உயிர் தமிழுக்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இயக்குநர் அமீர், மௌனம் பேசியதே படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்து 20 வருடங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவரை கவுரவிக்கும் விதமாக படக்குழுவினரால் அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.

இயக்குநர் ஆதம்பாவா பேசும்போது, “வெளி கம்பெனி படமொன்றில் அமீர் நடிப்பது இதுவே முதல் தடவை. பெரும்பாலும் அவரை கதையின் நாயகன் என்று சொல்கிறார்கள். அவர் கதையின் நாயகன் அல்ல.. கதாநாயகன் தான்.. படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுவதன் மூலம் இன்னும் பெரிய அளவிற்கு இந்தப் படம் பேசப்படும். ஆக்சன், காமெடி என அனைத்துப் பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கின்றன.. நடிகர் ஆனந்தராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்” என்று கூறினார்.

நடிகரும் இயக்குநருமான சரவணசக்தி பேசும்போது, “நான் முதன்முதலாக இயக்கிய ‘நாயகன்’ படத்தில் ஆதம்பாவா இணை இயக்குநராகப் பணியாற்றினார். இன்று அவர் இயக்குநராக மாறி இருப்பதும் அவரது டைரக்சனில் நான் நடித்திருப்பதும் சந்தோஷம் அளிக்கிறது” என்று கூறினார்.

நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது, “இந்த படத்தில் ஒரு சண்டைக்காட்சியை மூன்று நாட்கள் படமாக்கியபோது அமீர் ஒரு பேருந்துக்குள் வசமாக சிக்கிக்கொண்டு பட்ட அவஸ்தைகள், அந்த சமயத்தில் அவருடன் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்வுகள் எல்லாமே இனிமையானவை.

இயக்குநரும் நடிகருமான அமீர் பேசும்போது, “தமிழ் திரையுலகில் மௌனம் பேசியதே படம் மூலம் அடி எடுத்து வைத்து இருபது வருஷம் ஆகிவிட்டது. திரையுலகில் 20 ஆண்டுகள் இருப்பதே ஒரு சாதனைதான். எனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பயந்து பயந்து பேசியது இப்போதும் ஞாபகம் இருக்கிறது. துணிச்சலாக பேசுங்கள் என்று கூறியபோது, நான் பேசிய விஷயங்களால் அந்த படத்தின் நாயகன் சூர்யா என் மீது கோபப்பட்டு கொஞ்ச நாள் என்னிடம் பேசாமல் இருந்தார்.

நான் கரை வேட்டி கட்டிய அரசியலைப் படமாக இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்தச் சமயத்தில்தான் இந்தக் கதை என்னிடம் வந்தது. ஆனால் என்னிடம் இருக்கும் கதைக்கும் இதற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.

சிவகார்த்திகேயன், சூரி கூட்டணி போல எனக்கும் இமான் அண்ணாச்சிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. இது வெற்றி பெற்றால் அடுத்த படங்களில் இருந்து இந்தக் கூட்டணி தொடரும். இளையராஜாவுக்குப் பிறகு, நான் வியந்து பார்த்த இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்தப் படத்திற்காக மெனக்கெட்டதை மறக்க முடியாது. படத்தில் எம்.ஜி.ஆர். பாடல் உள்ளிட்ட நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் என் மீதுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு படமாக மட்டும் பாருங்கள்..  இந்தப் படம் மொழியை பற்றி பேசும் படமே தவிர மொழிப் பிரச்சினையை பற்றியது அல்ல. சமீப காலமாக இந்தித் திணிப்பு, வட மாநில மக்களின் வருகை என தமிழ் மொழிக்கு எதிரான அநீதிகள் நடப்பதால் இந்தத் தலைப்பு தற்போது அவசியமாகிறது. நேரடி அரசியலுக்கு வரும் தகுதியை நான் இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை. அதே சமயம் அரசியல் பேசிக்கிட்டே இருக்கணும். உதயநிதி அமைச்சர் ஆகிறார் என்றால் அதனால் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்றால் இல்லை..

பான் இந்தியா என்கிற கலாச்சாரம் இப்போது வருவதற்கு முன்பே மணிரத்னத்தின் ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் அதை சாதித்து காட்டிவிட்டன. இந்தியில் இருந்தும் ஷோலே, ஹம் ஆப் கே  போன்ற படங்கள் எல்லாம் இங்கே ஒரு வருடம் ஓடின. கிழக்கு சீமையிலே, ஆட்டோகிராப், பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் படங்கள் எல்லாம் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ற படம்.. அதனால் பான் இந்தியாவுக்கு என ஒரு படம் எடுப்போம் என்பதே ஒரு பைத்தியக்காரத்தனம் தான்..

விரைவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நான் ஒரு படம் இயக்க உள்ளேன்.. ஏற்கனவே இறைவன் மிகப் பெரியவன் மற்றும் இன்னொரு படம் கைவசம் இருக்கிறது.. அதை முடித்துவிட்டு இந்தப் படத்தை இயக்குவேன்” என்று கூறினார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!