விஜய்யின் மாறுபட்ட நடிப்பில் குடும்பக் கதையில் நடித்து பொங்கல் வெளியீடாக வரவிருக்கிறது வாரிசு. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சம்யுக்தா, சங்கீதா என பலர் நடித்துள்ளனர். நடிகர் விஜய்யின் 66ஆவது படம்.
வாரிசு திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்க, தமன் இசையமைக்க, தெலுங்குத் திரையுலக முன்னனி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்துள்ளார்.
தமிழகத்தில் தயாரிப்பாளர் லலித்தின் ‘7 ஸ்கிரீன் ஸ்டூடியோ’ மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம்’ இணைந்து விநியோகம் செய்துள்ளது.
கிட்டத்தட்ட 200 கோடி பொருட்செலவில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக உருவாகும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்துள்ளார். வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வெளியாகிறது.
சமீபத்தில் இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. ஆடியோ வெளியீட்டு விழாவில் ‘ரஞ்சிதாமே ரஞ்சிதமே’ பாடலை விஜய் பாடியதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
விழாவில் தனது உற்சாகமூட்டும் பேச்சின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். விஜய் பேச்சை உலகமே வியந்து பார்த்துக்கொண்டிருந்தது. ‘என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள் நன்றி’ என்று தொடங்கிய விஜய், “உனக்கு ஒரு பிரச்னை வருதுன்னா கவலைப்படாதே. இப்பதான் நீ வளர்றேன்னு அர்த்தம். வெற்றி பெறப்போகிறாய் என்று நினைத்துக்கொள்” என்று பேசி அரங்கத்தை அதிரவைத்தார் விஜய்.
காரணம் ‘வாரிசு’க்கு தியேட்டர்கள் அதிகப்படியாக ஒதுக்காததற்கு வருத்தத்தில் இருந்தார் அப்போது.
தற்போது வாரிசுக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் அதிக தியேட்டர்கள் ஒதுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ‘வாரிசு’. தற்போது உற்சாகத்தில் இருக்கிறார் விஜய். வரும் தைப்பொங்கலை துணிவுடன் எதிர்கொள்ளத் தயாராகிவிட்டார் விஜய்.