தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குநர் வம்சி பைடிபள்ளி விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தை இயக்குகிறார். படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள்.
இயக்குநர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடிகர் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.
அஜித் நடிக்கும் ‘துணிவு’ திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னரே விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகும். ‘துணிவு’ உடனான நேரடி மோதலைத் தவிர்க்க இது ஒரு சிறந்த வழி என்று கருதப்படுகிறது.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடித்தானது தெலுங்கானாவில் தொடங்கியது. தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் வியாபாரம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
விஜய்யின் சம்பளமே 120 கோடி என்றும், படத்தின் செலவு எல்லாம் சேர்த்து மொத்தம் படத்தின் பட்ஜெட் 200 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
படத்தின் தமிழக உரிமை, மற்ற மாநில உரிமை என 200 கோடி பேசப்பட்டிருக்கிறது. ஓடிடி உரிமை 60 கோடி, சாட்டிலைட் உரிமை 50 கோடி, இந்தி உரிமை 25 கோடி, வெளிநாட்டு உரிமை 50 கோடி, படத்தின் இசை உரிமை 10 கோடி என சுமார் 400 கோடி வரை வாரிசு படத்தின் வியாபாரம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
வாரிசு 2023 ஜனவரி பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து வாரிசு விஜய்யின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
வாரிசு விஜய் பர்ஸ்ட் லுக் போஸ்டர் OTTO விளம்பரப் பட ஸ்டில் வைத்து வெளியிட்டது சர்ச்சையானது.
அடுத்து சில ஸ்டில்ஸ் வெளியானது.
சமீபத்தில் கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் அவர்கள் ரசிகர்களைப் பார்த்து கை அசைத்துவிட்டு சென்றார். அப்போது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதேபோல் ‘வாரிசு’ படத்தின் சில எக்ஸ்குளூசிவ் புகைப்படங்களை படக்குழு தற்போது வெளியிட்டிருக்கிறது.