பொங்கல் ரிலிஸ் படங்களில் விஜய்யின் ‘வாரிசு’ படத்துகு பல எதிர்பார்ப்புகள் இருந்தது. சனிக்கிழமை வாரிசு ஆடியோ ரிலீஸ் வெளியிடப்பட்டது. அதில் விஜய் ரஞ்சிதமே ரஞ்சிதமே என்கிற பாடலைப் பாடினார். படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா விஜய்யை உற்சாகப்படுத்தினார்.
விஜய் வித்தியாசமான கதையில் வித்தியாசமான ரோலில் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார். வாரிசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வாரசுடு என்று வெளியாகிறது. அதன் ஆடியோ வெளியீட்டு விழா சனிக்கிழமை
(24-12-2022) இரவு சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. ஆடியோ வெளியீட்டு விழாவில் வாரிசு படத்தின் பாடலான ‘ரஞ்சிதாமே ரஞ்சிதமே’ பாடலை விஜய் பாடியதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். அது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், விஜய் ஒருங்கிணைத்து செல்பி எடுப்பதையும், அதற்கு ராஷ்மிகா மந்தனாவும் புன்னகைத்து அவரை உற்சாகப்படுத்தியதைக் காணலாம்.
அதேபோல் விஜய் கூட்டத்தை வீடியோ எடுக்கும் மற்றொரு வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிகழ்ச்சியில் பிரகாஷ் ராஜ், ஷாம், பாடலாசிரியர் விவேக், ஷங்கர் மகாதேவன், சரத்குமார், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விஜய் ஆலிவ் பச்சை நிற சட்டையும், வெள்ளை நிற பேண்ட்டும் அணிந்திருந்தார். விழாவில் தனது உற்சாகமூட்டும் பேச்சின் மூலம் ரசிகர்களை உற்சாகமூட்டினார். விஜய் பேசிய புத்திசாலித்தனமான வார்த்தைகள் சினிமா துறையைத் தாண்டிய புத்திசாலித்தனத்தை தெளிவாகக் காட்டியது. அதனால் விஜய் பேச்சை உலகமே வியந்து பார்த்துக்கொண்டிருந்தது.
என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள் நன்றி என்று தொடங்கிய விஜய், இந்தப் படத்தில் உடன் நடித்த பிரகாஷ்ராஜ், சரத்குமார், மந்தனா பற்றியெல்லாம் பாராட்டி நன்றி கூறியவர் யோகிபாபு ஆரம்பத்தில் ஒரு படத்தில் கொஞ்சமாவது நடித்திடுவோமோ என்று எதிர்பார்த்தவர், தற்போது யோகபாபு நம்ம படத்தில் கொஞ்ச காட்சியாவது நடித்துவிடுவாரோ என்று எதிர்பார்க்க வைத்துவிட்டார் என்று யோகிபாபுவைப் புகழ்ந்து தள்ளினார்.
ஒவ்வொரு படத்திலும் உங்களுக்கு (ரசிகர்களுக்கு) ஒரு விதமாக முத்தம் தருவேன். இந்தப் படத்தில் இப்படி தருகிறேன் என்று உள்ளங்கைகையத் தொட்டு ரசிகர்களுக்கு முத்தம் தந்தார். ரசிகர்களின் பக்கமிருந்து பெருத்த சத்தம் வந்தது.
ஒரு குட்டிக் கதையும் சொன்னார் விஜய், ‘அண்ணன் தங்கை இருந்தார்கள். அவர்களின் அப்பா சாக்லேட் கொடுத்தார். அண்ணன் அதை ஒரு இடத்தில் மறைத்து வைத்தார். ஆனால் தங்கை அண்ணனின் சாக்லேட்டையும் எடுத்து சாப்பிட்டுவிட்டார். அதை அண்ணன் தெரிந்துகொண்டு சும்மா இருந்துவிட்டார். காரணம் அண்ணன், தங்கை சாப்பிட்டுவிட்டதை ஏற்கெனவே அறிந்திருந்தார். காரணம் அன்புதான். அன்புதான் நம்மை எல்லாம் காப்பாற்றுவது. என்றவர்,
தான் ரத்த தானம் செய்வதற்கு தனியாக ஒரு ஆப்பைத் தொடங்கியிருப்பதை ரசிகர்களுக்கு நினைவூட்டினார். நான் ஏன் ரத்த தானத்தை ஊக்குவிக்கிறேன் என்றால் ரத்தத்தில்தான் ஜாதி மதம் இல்லை என்று பன்ச் வைத்தார் விஜய்.
அடுத்து ஹைலைட் விஜய் தன்னம்பிக்கை பேச்சு, “உனக்கு ஒரு பிரச்னை வருதுன்னா கவலைப்படாதே. இப்பதான் நீ வளர்றேன்னு அர்த்தம், வெற்றி பெறப்போகிறாய் என்று நினைத்துக்கொள்’ என்று பேசி அரங்கத்தை அதிரவைத்தார் விஜய்.
அவ்வப்போது ரசிகர்கள் விஜய்யைப் புகழ்ந்து முழக்கங்களை எழுப்பினார்கள்.
அதோடு ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் ரஞ்சிதமே பாடலுடன் சேர்ந்து பாடினர். ஸ்டேடியம் முழுவதும் மின்விளக்குகளால் ஒளிரச் செய்ததால் இது ஒரு வகையான வெகுஜன கொண்டாட்டமாக இருந்தது.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு இவ்வளவு பெரிய கூட்டத்தில் விஜய் பேசுவது இதுவே முதன்முறை என்பதால், மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
‘பீஸ்ட் அண்ட் மாஸ்டர்’ பட வெளியீட்டின்போது தொற்றுநோய் காரணமாக இந்த அளவிலான விளம்பரங்களை விஜய்யால் நடத்த முடியவில்லை.
நிகழ்ச்சி நடந்த நேரு ஸ்டேடியத்தில் ரசிகர்கள் அடித்துப்பிடித்து ஓடியதில் காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது.
இந்தப் பொங்கல் பண்டிகையில் அஜித்தின் ‘துணிவு’ படத்துடன் விஜய்யின் ‘வாரிசு’ படம் மோதுகிறது. வரவிருக்கும் பாக்ஸ் ஆபிஸ் மோதலைப் பற்றி விஜய் கருத்துச் சொல்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.