2019-ஆம் ஆண்டில் மட்டுமே யோகி பாபு 30 படங்களில் நடித்து கோலிவுட்டையே அதிர வைத்துள்ளார். ஹீரோவாகவும் அவர் சில படங்களில் நடித்த நிலையில் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.
‘யோகி’ படம் திரைக்கு வந்து இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புத் தளத்தில், கேக் வெட்டி எளிய முறையில் கொண்டாடினார் யோகி பாபு.
மேலும் தன்னை இவ்வளவு தூரம் கொண்டுசேர்த்த திரைத்துறையினர் மற்றும் மீடியாக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
தன்னை ‘யோகி’ படத்தில் அறிமுகம் செய்த இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, இப்படத்தின் ஹீரோ மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோருக்கும், சின்னத் திரையில் ஆரம்பகாலத்தில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் தன் திறமைகளை வெளிக்கொண்டுவந்த இயக்குநர் ராம் பாலா அவர்களுக்கும், தனக்கு வழிகாட்டியாக இருந்த இயக்குநர் சுந்தர்.சி அவர்களுக்கும் இந்த நேரத்தில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் யோகி பாபு.
வடிவேலுவுக்கு அடுத்தபடியாக, வசனங்கள் பேசும் முன்பாகவே பாடி லேங்குவேஜால் ரசிகர்களைச் சிரிக்க வைக்கும் திறமை யோகிபாபுவுக்கு உள்ளது.
2009ல் வெளியான படம் ‘யோகி’. சுப்ரமணியம் சிவா இயக்கிய இப்படத்தில் இயக்குநர் அமீர் நாயகனாக நடிக்க, அவரின் சிநேகிதரான யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். இந்தப் படத்தின் மூலம் யோகி பாபு அறிமுகம் ஆனார். அதன்பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும், 2014-ல் வெளியான வீரம், மான் கராத்தே, அரண்மனை உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. அது முதற்கொண்டு யோகி பாபுவுக்குப் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
ஹீரோவாகவும் அவர் சில படங்களில் நடித்த நிலையில் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.
அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை கடந்த 2016-ல் வெளியான ‘வில் அம்பு’ திரைப்படத்தை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம் இயக்கவுள்ளார். யோகிபாபு இன்னும் வளர வாழ்த்துகிறோம்.