உலகிலேயே கனடாவில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். ஆண்டுதோறும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன் காரணமாக தமிழர்களின் நெருக்கமும் உறவும் அதிகரித்து கலாச்சாரங்கள் வளர்ந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழர்களின் கலாச்சாரம், அதன் பாரம்பரியச் செயல்பாடுகள் மற்றும் சுவையான தமிழ் உணவை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதன் மூலம் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் அளவில் மிகப்பெரிய அளவில் ‘டொராண்டோ தமிழர் திருவிழா 2022’வை கடனா தமிழர் பேரவை ஆகஸ்ட் 27, 28ஆம் தேதிகளில் நடத்தியது.
இந்தியாவுக்கு வெளியில் தமிழர்களுக்காக நடத்தப்படுகிறது மிகப்பெரிய விழா. இந்த விழாவை கனடா தமிழர் பேரவை அமைப்பினர் ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக நடத்தப்படவில்லை. அதனால் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆகஸ்ட் 27 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரையும், ஆகஸ்ட் 28ஆம் தேதி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் மெக்னிகோல் அவே மற்றும் பாஸ்மோர் ஏவ் இடையே மார்க்கம் சாலையில் நடைபெற்றது!
இந்த விழாவில் கடனா அரசு சார்பில் சிறப்புப் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். இந்திய வம்சாவளியினர் சட்ட அமைச்சர் அனிதா ஆனந்த் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கனடா மேயர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த அமைச்சர்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.
அங்கு அமைத்திருந்த மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வீதி அரங்குகளில் சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ளதைப்போலவே பெண்கள் அணிமணிகளான சிறிய அரங்கு காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. குழந்தைகளுக்காக சிறப்புக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. ரெடிமேட் ஆடைகளுக்கான கடைகளும் பெரிய அளவில் இருந்தது. அதோடு தமிழர்களின் கலாசாரமான உணவுச் சந்தையும் இடம்பெற்று அந்தப் பகுதி எங்கும் அருமையான வாசனை உணர்வை ஏற்படுத்தியது.
ஏன் இந்த விழாவை நடத்துகிறார்கள்?
கனடாவில் உள்ள தமிழ் சமூகம் மற்றும் ஏனைய சமூகங்களுக்கு இடையில் ஒரு நல்லுணர்வை வளர்ப்பதை கனடா தமிழ் பேரவை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தச் சிறப்புமிக்க ‘தமிழ் விழா’ கடந்த ஏழு ஆண்டுகளாக வெற்றிகரமாக இங்கு நடைபெற்று வருகிறது, 2015ஆம் ஆண்டில் நடந்த முதல் திருவிழாவில் இரண்டு நாட்களில் 90,000க்கும் மேற்பட்ட மக்களைக் கலந்துகொண்டனர்.
அந்தக் காலம் தொட்டு இன்று வரை உலகம் முழுவதிலுமிருந்து 250,000க்கும் மேற்பட்ட மக்கள் தமிழ் விழாவிற்கு வருகை தந்துள்ளனர். கிழக்கு டொராண்டோ வரலாற்றில் இது மிகப்பெரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
கனடாவில் உள்ள மொத்த தமிழ் குடும்பமும் இரண்டு நாட்களும் கொண்டாட்டம், கும்மாளம், பொழுதுபோக்கு என ஒன்று சேர்ந்தனர்.
இந்த விழாவில் உள்ளூர் மற்றும் சர்வதேசக் கலைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இந்தக் கலை நிகழ்ச்சியில் எல்லா வயதினரும் பங்கெடுத்தனர்.
பரதநாட்டியம், தமிழிசை, பாட்டு, நடனம் என அனைத்தையும் ரசிக்கலாம். உலகின் மிகப் பழமையான இசைக்கருவிகளில் ஒன்றான ‘பறை’யை ரசித்து இசைத்தனர்.
சுமார் 19 உணவு விற்பனையாளர்கள் பல்வேறு சுவையான தமிழ் உணவுகளை விற்பனை செய்தனர். இனிப்பு மற்றும் காரமான உணவுகள் வரை அனைத்தையும் வகைப்படுத்தப்பட்டு பரபரப்பான விற்பனை ஆனது.. இந்த நிகழ்வில் பல ஐஸ்கிரீம் விற்பனையாளர்களும் கலந்துகொண்டனர்.
தமிழ் காட்சிகள் மற்றும் கண்காட்சிகளில் பாரம்பரிய கைவினைப்பொருட்கயும் நகைகளை விற்பனையாளர்களிடமிருந்து பார்வையாளர்கள் வாங்கினார்கள். அவர்கள் குழந்தைகளுக்கான பல விளையாட்டுகளையும் ஏற்பாடு செய்திருந்தது சிறப்பாக இருந்தது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கியூபெக்கின் முன்னாள் பிரதமர், மேயர்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்கள் மற்றும் பல செல்வாக்கு மிக்க பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.