தனியார் துப்பறிவாளர்களுக்கான சட்ட அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு துப்பறிவாளர்கள் மற்றும் தனியார் விசாரணையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாடு துப்பறிவாளர்கள் மற்றும் தனியார் விசாரணையாளர்கள் சங்கத்தின் தொடக்க விழா சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
தொடக்க விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் டாக்டர் மது “சட்டம் மற்றும் குற்றவியல் தடையவியல் பட்டதாரி மாணவர்களுக்குத் துப்பறிவு நிறுவனங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். ஓய்வு பெற்ற தகுதி வாய்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் மூலம் பொது மக்களுக்கு குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய டாக்டர் மது தமிழக காவல்துறை, பத்திரிகைத் துறை, குற்றவியல் துறை மற்றும் தடயவியல் துறையில் சிறப்பாக செயல்படும் அதிகாரிகளை கண்டறிந்து அவர்களின் சேவையை கவுரவ படித்த வேண்டும் மாநில சட்ட அமைச்சகம் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் மூலம் துப்பறிவாளர்கள் மற்றும் தனியார் விற்பனையாளர்களுக்கு என ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் மற்றும் தனியார் துப்பறிவாளர்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தனியார் துப்பறிவாளர்களுக்கான சட்ட அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு துப்பறிவாளர்கள் மற்றும் தனியார் விசாரணையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் கலந்துகொண்டு பேசினார்.