நேற்று (17-2-2023) மாலை, சென்னை, இராயப்பேட்டையில் Modern Essential Education Trust சார்பாக அமைக்கப்பட்டிருக்கும் MEET HALL கூட்ட அரங்கம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கத்தை திறந்து வைத்து கவியரங்கத் தலைமை வகித்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார் முனைவர் கவிஞர் தமிழ் மணவாளன்.
கடவுள் வாழ்த்தாக திருக்குர்ஆன் ஓதி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
சிறப்பாக வாழ்த்துரை வழங்கினார் எழுத்தாளர், கவிஞர் அமிர்தம் சூர்யா. படைப்பு நிறுவனத் தலைவர் ஜின்னா ஆஸ்மி, வானவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முதலாவதாக கவிஞர் சவிதா ஒரு சிறந்த கவிதையை வாசித்தார். கவிஞர் ஆண்டன் பெனி பாடிய மகள் பற்றி கவிதை அரங்கை ஒரு கணம் மனம் கசிய வைத்தது. கவிதை வாசித்து கலகலப்பாக்கினார் கவிஞர் நிமோஷினி விஜயகுமாரன். அவர் பாடிய வயிற்றைக் கட்டி சீட்டு கட்டிய தாய் பற்றிய கவிதை நெகிழ்ச்சி. மூசா பேசி சென்னை பற்றிய குறிப்பில் குஜிலி புத்தகம் பற்றிய பேச்சு அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
சுசித்ரா மாரன் சங்கப் பாடல் பாணியில் பாடி அசத்தினார். ப்ரியா வெங்கடேசன், தஞ்சை தவசி, துரை.நந்தகுமார், தேவசீமா, டாக்டர் நடராஜன், வீரமணி, பவா சமத்துவன் ஆகியோரும் கவிதைகளைப் பாடி அரங்கை சிவராத்திரியாக்கினார்கள். நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார் நல்லு ஆர். லிங்கம். நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு, பிரியாணி வழங்கப்பட்டது.
சென்னை, ராயப்பேட்டை, ஜாம் பஜார் காவல் நிலையம் எதிரில் உள்ள MEET A/c அரங்கம் பயன்பாட்டுக்குத் தயார் நிலையில் உள்ளது. புத்தக வெளியீடுகள், இலக்கிய நிகழ்வுகள், வணிக நிறுவனங்களின் கலந்தாய்வுக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றுக்குச் சிறந்த அரங்கமாக இருக்கும். 80 பேர் வரை அமரும் வசதி கொண்ட இந்த அரங்கில் சிறப்பான ஒலி-ஒளி அமைப்புகளுடன் Projector வசதியும் உள்ளது. வாடகை 5000/-. தொடர்புக்கு: சுவடு மன்சூர் 9791916936