நேற்றோடு நிறைவுபெற்ற சென்னைப் புத்தகத் திருவிழாவில் மின்னங்காடி அரங்கில் என்னுடைய ‘நிலவறை மஞ்சனம்’ என்கிற கவிதை நூல் வெளியிடப்பட்டது.
தமிழ்ப் படைப்பாளிகள் பேரியகத்தின் செயலாளர் கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்கள் நூலை வெளியிட, எழுத்தாளர் தமிழ்மகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து நடுநாட்டு எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்கள், கவிஞர் ஆசு, ஊடகவியலாளர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி, காயத்திரி ஆகியோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.
புத்தகம் குறித்த அறிமுக உரை மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பை கவிஞர் உழவன் பச்சியப்பன் அவர்கள் மிகச் சிறப்பாகச் செய்தார்.
இந்நிகழ்வில் அச்சரப்பாக்கம் நாகராஜன் ஐயா அவர்கள், தி.மலை லோகேஷ் மற்றும் பெரும்பாக்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மாணவர்களும் பங்கேற்றது பெரும் மகிழ்வு.
மிகக் குறுகிய நேரமே நடைபெற்ற நிகழ்வு என்றாலும் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை உண்டாக்கியது.
கண்மணி குணசேகரன் அவர்கள் பேசியபோது கடைக்கு எதிரே கூடிய கூட்டம் அனைவரையும் வியக்க வைத்தது.
இந்தக் கவிதை நூல் பெற விரும்புபவர்கள் 9786320491 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்.