தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கே வந்து தமிழ்நாடு கிராம வங்கியின் தேவகோட்டை கிளை மேலாளர் வங்கி;க கணக்குப் புத்தகங்களைக் கொடுத்து அசத்தினார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வங்கிக் கணக்குப் புத்தகம் இளம் வயது மாணவர்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். முன்னதாக ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். தமிழ்நாடு கிராம வங்கியின் தேவகோட்டை கிளை மேலாளர் பிரசாத் மாணவர்களுக்கு வங்கிக் கணக்குப் புத்தகத்தைக் கொடுத்து சேமிப்பு மற்றும் இளம் வயதில் பின்பற்ற வேண்டிய பணத்தின் அருமை தொடர்பான பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விரிவாக விளக்கினார்.
மாணவர்களையும் பெற்றோர்களையும் வங்கிக்கு அலையவிடாமல் வங்கியிலிருந்து பள்ளிக்கே வந்து அனைத்து விவரங்களையும் பெற்று ஒரே நாளில் கணக்குத் தொடங்கிக் கொடுத்து வங்கிக் கணக்குப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவதற்கு தமிழ்நாடு கிராம வங்கியின் துணை மேலாளர் சுவாமிநாதன் ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து அசத்தினார்.
இளம் வயது மாணவ, மாணவியர் குறிப்பாக முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் தங்களது கைகளில் வங்கிப் புத்தகம் தங்களது புகைப்படத்துடன் கொடுக்கப்பட்டதைப் பார்த்து ஆச்சரியத்தில் அசந்து போனார்கள். வங்கியின் இந்தச் செயல்பாட்டுக்குப் பெற்றோர்களும், மாணவர்களும் நன்றி தெரிவித்துக்கொண்டனர். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.