“16,000 புத்தகங்கள் மிகக் குறைவானது” நீதிபதிகள் கருத்து

1 0
Spread the love
Read Time:5 Minute, 56 Second

மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கக் கோரி வழக்குத் தொடுக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த மதுரைக்கிளை நீதிபதிகள்  “மதுரை தமிழ்ச்சங்கத்தில் 16,000 புத்தகங்கள் என்பது மிகக் குறைவான அளவு” என கருத்து தெரித்துள்ளனர்.

தமிழ்ச்சங்கத்தின் துணை இயக்குநர், மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் ஒதுக்கப்படும் நிதி, நடத்தப்படும் நிகழ்வுகள், புத்தக விவரங்கள் உள்ளிட்ட தகவல்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,

“மதுரையில் உலக தமிழ்ச்சங்கம் நூலகம் திறக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும் தமிழ் மொழி வளர்ப்புக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. நூலகத்தில் தரமான நூல்கள் இல்லை. உலக தமிழ்ச்சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துத் தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் குறைவான அளவிலேயே புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழ் ஆராய்ச்சி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு அப்போது அரசுத் தரப்பில், “16,000 புத்தகங்கள் இருப்பதாக”த் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், “தமிழ்ச்சங்கத்தில் 16,000 புத்தகங்கள் என்பது மிகக் குறைவான அளவு.  தமிழ்ச்சங்கத்தின் துணை இயக்குநர் நேரில் ஆஜராகி, ஒதுக்கப்படும் நிதி, நடத்தப்படும் நிகழ்வுகள், புத்தகங்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உலகத் தமிழ்ச் சங்கம் என்பது தமிழ் மொழி வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் தமிழ்நாடு அரசால் மதுரையில் அமைக்கப்பட்டிருக்கும் ஓர் அரசு நிறுவனமாகும். இவ்வளாகத்தைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா 2016, மார்ச் 1 அன்று காணொளிக் காட்சி வாயிலாகச் சென்னையிலிருந்தவாரே திறந்து வைத்தார்.

பன்னாட்டு அளவிலான கருத்தரங்கக் கூடங்கள், ஆய்வரங்கம், நுாலகம், பார்வையாளர் அரங்கம் இதில் இடம் பெற்றுள்ளன. இவ்வளாகச் சுற்றுச் சுவர்களில் 1330 திருக்குறள் பொறிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் “உலகத் தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு குடையின்கீழ் செயல்படும் வகையில் உலகத்தமிழ்ச் சங்கம் இயங்கும்” என 1981ஆம் ஆண்டு மதுரை மாநகரில் நடைபெற்ற 5வது உலகத்தமிழ் மாநாட்டில் அறிவித்தார்.

மதுரையிலுள்ள தல்லாகுளம் பகுதியில் 14.15 ஏக்கர் நிலம் உலகத் தமிழ்ச் சங்கத்திற்கென ஒதுக்கப்பட்டது.

1986ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் முதல் நாள் (14.04.1986) அன்றைய எம்.ஜி.ஆர் உலகத் தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கி வைத்தார்கள்.

இசையரங்கு, ஆடலரங்கு, பாட்டரங்கம், வில்லிசை, இன்னிசை, கருத்தரங்கு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுடன் உலகத் தமிழ்ச் சங்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் நிதிக் கட்டுப்பாட்டு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இச்சங்கத்தின் நிர்வாகப் பணிகளுக்காகத் தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த உலகத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் உலகிலுள்ள தமிழ்ச் சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டன. இச்சங்கத்தில் தமிழ் தொடர்பான 30 துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஓர் அலகாகச் சங்கத் தமிழ் காட்சிக்கூடம், அதனருகே காந்தி அருங்காட்சியகம் எதிரில் செயல்படுகிறது.

Happy
Happy
50 %
Sad
Sad
0 %
Excited
Excited
50 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!