மகாபாரதப் போர் சக்கரவியூகத்தின் பின்னால் மறைந்துள்ள கணிதம்

1 0
Spread the love
Read Time:4 Minute, 30 Second

பாண்டவர்கள் தரப்பில் துருபதன் மற்றும் அர்ஜுனனுக்கு மட்டுமே சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே செல்லவும், வெளியே வரவும் தெரியும்.

ஏனெனில் துரோணரும், துருபதனும் ஒரே குருகுலத்தில் சக்கர வியூகத்தைப் பற்றிப் படித்தவர்கள். ஆனால் ஜயத்ரதன் துருபதனை மூர்ச்சையாக்கிவிட, சக்கர வியூகம் தங்கள் படையை நாசமாக்குவதைக் கண்ட அபிமன்யு சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே செல்ல முடிவெடுத்தான்.

அவனைத் தொடர்ந்து பீமனும் தர்மனும் உள்ளே சென்று அவனை பாதுகாப்பதாக முடிவெடுத்தார்கள்.

சக்கர வியூகத்தில் அபிமன்யு

தான் கர்ப்பத்தில் இருந்தபோது கற்ற சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே செல்லும் வித்தையைப் பயன்படுத்தி சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே சென்றான் அபிமன்யு.

மற்றவர்கள் அவனைத் தொடர்வதற்குள் ஜயத்ரதன் வந்து அவர்களைத் தடுத்தான்.

சிவபெருமானின் வரத்தால் அவனை எவராலும் வெல்ல இயலவில்லை,

அதேசமயம் சக்கர வியூகமும் மூடிக்கொண்டது.

வியூகத்தின் உள்ளே சென்ற அபிமன்யு வழியில் இருந்த அனைத்து வீரர் களையும் கொன்றுகொண்டே முன்னேறினான். அதில் துரியோதனனின் மகனும் ஒருவன். இதனால் ஆத்திரமடைந்த துரியோதனன் துரோணர், கர்ணன், துச்சாதனன் அனைவர்க்கும் அபிமன்யுவைக் கொல்ல உத்தர விட்டான். இறுதியில் கர்ணன் அபிமன்யுவின் உயிரை எடுத்தான்.

சக்கர வியூகத்தின் இரகசியம்

சக்கர வியூகத்தில் மிகப்பெரிய கணிதம் ஒன்று ஒளிந்துள்ளது. அதனை அறிந் தால்தான் அதனை முறியடிக்க முடியும்.  அதனை அர்ஜுனன் துருபதனுடன் நடந்த மகாபாரதப் போரில் சிறப்பாய் செய்திருப்பார்.

அதவாது சக்கர வியூகத்தில் மொத்தம் ஏழு அடுக்குகள் இருக்கும். எனவே அதனை உடைக்கும்போது 1/7 என்ற அளவீட்டில் கணக்கிட வேண்டும்.

இந்தக் கணக்கின்படி 1/7 = 0.142857142857142857 என்று அளவிடும்போது 142857 என்ற எண் திரும்பத் திரும்ப வரும்.

இதுதான் சக்கர வியூகத்தின் ரகசிய தந்திரம்

ஒவ்வொரு சக்கரமும் உடையும்போது அந்த இடத்திற்கு வேறு வீரர்கள் வந்துவிடுவதால் இந்தச் சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும். ஒவ்வொரு அடுக்கையும் கடக்கும்போது ஒரு எண்ணை அதிகரிக்க வேண்டும்.

இறுதியாக கடைசி சக்கரத்தில் நுழையும்போது ஏழு மடங்கு ஆற்றலுடன் போர் புரிய வேண்டும். அப்பொழுதுதான் சக்கர வியூகத்தை உடைக்கஇயலும்.

இந்த 0.142857-ஐ 7 உடன் பெருக்கும்போது தான் இந்த எண் சுழல் உடையும்.

0.142857142857142857*2 = 0.2857142285714285714, 0.142857142857142857*3 = 0.42857142857144285714 இப்படி நீண்டு கொண்டே இருக்கும்.

இந்த எண்ணை 7-ஆல் பெருக்கும்போது மட்டும்தான் இந்தச் சுழல் எண் மாறும்.

0.142857142857142857*7 = 0.99999999999999 இப்படித்தான் சக்கர வியூகத்தை உடைக்க முடியும்.

இதனை அறிந்துதான் மகாபாரதப் போரில் துருபதனை அர்ஜுனன் வீழ்த்தி யிருப்பார்.

ஆன்மிகமும் அறிவியலும் இரட்டைக் குழந்தைகள் போல என்பதை நிரூபிப்ப தற்கான உதாரணம்தான்.

இந்தச் சக்கர வியூகம் மஹாபாரதத்தில் பலவிதமான சக்கரவியூகத்தை அமைக்கும் யுக்தியையும் அதை உடைக்கும் யுக்தியையும் போதித்தவர் மயன் வம்சத்தவராகிய தேவப்ராமண விஸ்வகர்மா ஆச்சாரியர்களே…

சிவதினேஷ் விஸ்வரூபன் முகநூல் பதிவு!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!