சென்னை பகுதி தொடங்கி 383 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ‘சென்னை தினம்’ என்கிற பெயரில் புகைப்படக் கண்காட்சியை சென்னை எழும்பூரில் உள்ள ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகமான மெட்ராஸ் லிட்ரரி சொஸைட்டியில் அமைத்திருக்கிறார்கள் மெட்ராஸ் லோக்கல் இஸ்ட்ரி முகநூல் குழு.
வெள்ளைக்காரர்கள் 1639ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார்கள். அதிலிருந்து 250 ஆண்டுகால அரியதான 60 படங்களைச் சேகரித்து இங்கே காட்சிப்படுத்தியிருந்தார்கள். ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 3 வரை இந்தக் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியில் பல்லக்குத் தூக்குபவர்கள், ஆயாக்கள், சிப்பாய், பங்கா (துணி விசிறி) இழுப்பவர்கள், சமையல்காரர்கள், தண்ணீர் கொண்டுவருபவர்கள், இஸ்திரி போடுபவர்கள், போஸ்ட்மேன் வெள்ளைக்காரர்களுக்குச் சேவகம் செய்த எளிய மக்களின் அரிதான ஓவியம் மற்றும் போட்டோக்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அத்தனை படங்களும் நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச்சென்று விடுகிறது. இந்தக் கண்காட்சியை நடத்தும் வெங்கடேஷ் ராமகிருஷ்ணனிடம் பேசினோம்.
இந்தக் கண்காட்சியின் நோக்கம் என்ன?
கடந்த ஐந்து வருடங்களாக மெட்ராஸ் சரித்திரத்தைப் பற்றி ஆய்வு செய்து வருகிறேன். போஸ்ட் கார்டில் இடம் பெற்ற படங்கள், பத்திரிகைகளில் வந்த படங்கள், இந்தியாவைப் பற்றி எழுதிய புத்தகங்களில் வந்த படங்களைச் சேகரித்து இந்தக் கண்காட்சியில் வைத்துள்ளோம். அன்றைய சென்னை மக்களின் எளிய வாழ்க்கையை வரலாற்று ரீதியாகப் பதிவு செய்யும் நோக்கம்தான் இது.
அன்றைய சென்னையின் பெரும்பகுதி வேளச்சேரி, மைலாப்பூர், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகள் கிராமங்களாகவே இருந்திருக்கின்றன. வெள்ளைக்காரர்களுக்கு மெட்ராஸ் புது இடம். அதனால் அவர்களுக்கு இந்த ஊர் மக்களின் உதவி ரொம்பவே தேவைப்பட்டது. முக்கியமாக வெள்ளைக்காரர்கள் ஆடைகள் வாங்க வந்தவர்கள். அதனால் நெசவாளர்களுடன்தான் முதலில் தொடர்பு ஏற்பட்டது. அப்புறம் சிப்பாய்களைக் கொண்டுவந்து தங்கள் பாதுகாப்புக்காகச் சிறிய போர் படையை ஆரம்பித்தார்கள். இன்னும் வேலை செய்ய மெட்ராஸ் ஆட்கள் தேவைப்பட்டார்கள். அந்தக் காலத்தில் கரண்ட் இல்லை. போக்குவரத்துக்கு கார் வசதி இல்லை. அதனால் கொஞ்சம் சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட வெள்ளையர்கள் மெட்ராஸ் மக்களை சேவகம் செய்யப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
வெள்ளைக்காரர்கள் வாழ்ந்த இடம் குளிர்ப்பிரதேசம். சென்னை வெப்பமான பகுதி. அதனால் பங்கா என்கிற துணியால் விசுறுகின்ற (பேனை) விசிறியை மெட்ராஸ் மக்களைக்கொண்டு விசிற வைத்தார்கள். மேல்தளத்தில் ஒரு பெரிய கனமாக துணியைக் கட்டிவிட்டு அதை அங்கும் இங்கும் இழுப்பார்கள். இரவு முழுக்கத் தூங்காமல் இருவர் மாறி மாறி இழுப்பார்கள். கை வலியெடுத்தால் காலிலும், கால் வலியெடுத்தால் கையிலும் இழுப்பார் கள். அதிலிருந்து ஏற்படும் காற்றின் சுகத்தில் வெள்ளைக்காரர்கள் நன்றாகத் தூங்குவார்கள்.
வெள்ளைக்காரர்களின் குழந்தைகளைப் பராமரிக்க நம்மூர் ஆயாக்களை வேலைக்கு அமர்த் தினார்கள். சில அதிகாரிகள் இங்கிலாந்துக்கு மாற்றலாகிப் போகும்போது இந்த ஆயாக்களை யும் கூடவே கூட்டிக்கொண்டு போய்விடுவார்கள். அவர்கள் அத்தோடு அவ்வளவுதான். திரும்பி வருவதற்கு வாய்ப்பில்லை. திருப்பி அனுப்ப இயலாது என்பதால் இங்கிலாந்திலேயே ‘ஆயாஸ் ஹோம்’ நடத்தினார்கள் என்கிற தகவல் உள்ளது. வெள்ளைக் காரர்களுக்குச் சேவகம் செய்ய மெட்ராஸ் மட்டுமின்றி தமிழகத்தின் மற்ற மாவட்டங்களி லிருந்தும் கூலியாட்கள் மெட்ராஸுக்கு வந்து தங்கியிருக்கிறார்கள் என்கிற தகவலும் கிடைக்கிறது” என்றார்.
Right here is the perfect blog for anyone who really wants to understand this topic. You know so much its almost hard to argue with you (not that I really will need toÖHaHa). You certainly put a new spin on a topic which has been written about for ages. Great stuff, just wonderful!