ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு

3 0
Spread the love
Read Time:6 Minute, 35 Second

ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு, ஸ்காட்லாந்து பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று இரவு 11:05 மணிக்கு ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக பகிங் ஹாம் அரண்மனை அறிவித்தது. 70 ஆண்டுகாலம் முடியாட் சியை நடத்திவந்த  ராணி இரண்டாம் எலிசபெத், தனது 96 வயதில் கால மானார்.

1926 ஏப்ரல் 21 அன்று இரண்டாம் எலிசபெத் பிறந்தார். இளவரசர் பதவியை துறந்து விட்டு பிரிட்டன் குடியுரிமை பெற்ற பிலிப்பை,  இரண்டாம் எலிசபெத் ராணி திருமணம் செய்து கொண்டார். எலிசபெத் ராணிக்கு 13 வயது இருக்கும்போதே அப்போது 18 வயதாக இருந்த இளவரசர் பிலிப்பை சந்தித்தார். இருவரும் நட்பாகப் பழக பின்னாளில் இருவருக்குமிடையில் காதல் மலர்ந்தது. பதின் பருவத்தில் முளைத்த அவர்களின் காதல் 7 தசாப்தங்களுக்கும் மேலாக நிலைத்திருந்தது.

இவர்களுக்கு சார்லஸ், ஆன்ட்ரூ, எட்வர்டு ஆகிய மூன்று மகன்களும், ஆன்னே என்ற ஒரு மகளும் உள்ளனர். 1953 ஜூன் 2ஆம் தேதி பிரிட்டன் ராணியாக முடி சூடினார்.  அரியணைக்கு வந்த ராணி, தனது ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய சமூக மாற்றத்தைத் தன் வாழ்நாளில் செய்துள்ளார். ராணியின் மறைவை அடுத்து, முன்னாள் வேல்ஸ் இளவரசரான ராணியின் மூத்த மகன் சார்லஸ், புதிய அரசராக வழி நடத்துவார் எனக் கூறப்பட்டுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

1926ல் எலிசபெத் பிறந்தபோது தான் பின்னாளில் பிரிட்டனின் ராணியாவோம் என எண்ணியிருக்க மாட்டார். ஏனெனில், அப்போது ஆட்சி புரிந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் இரண்டாவது மகன் தான் எலிசபெத்தின் தந்தை. மூத்தவருக்குத் தான் மன்னராக முடிசூட்டப்படுவது வழக்கம். ஆனால் 1936ல் ஐந்தாம் ஜார்ஜ் மறைவுக்குப்பின் மூத்த மகன் எட்டாம் எட்வர்ட் மன்னர் ஆனார். ஆனால் அதே ஆண்டில் தான் காதலித்த பெண்ணை கைப்பிடிப்பதற்காக மன்னர் பதவியைத் தியாகம் செய்து விட்டார்.

பிரிட்டன் அரசுரிமையைத் தன் தம்பியும், எலிசபெத்தின் தந்தையுமான இளவரசர் ஆல்பர்ட்டிற்கு கொடுத்துவிட்டார். இதனால் ஆல்பர்ட் ஆறாம் ஜார்ஜ் என்ற பெயருடன் அவர் பிரிட்டன் மன்னர் ஆனார். அவரது மறைவுக்குப்பின் மூத்த மகள் எலிசபெத், தன் 25 வயதில் 1953 ஜூன் 2ல் பிரிட்டன் ராணியாக முடிசூடினார். வின்ஸ்டன் சர்ச்சில் முதல், லிஸ் டிரஸ் என 15 பிரதமர்களை நியமித்துள்ள பெருமை பெற்றவர் ராணி இரண்டாம் எலிசபெத்.

ராணி இரண்டாம் எலிபெத்திடம் பதவிக்குரிய பண்பு, ஒழுக்கம், பண்பாடு, செயல்பாடு இருந்தது. பொதுவாக அரச குடும்பங்களில் எழும் எந்த முறை கேடுகளும், இவர் மீது கூறமுடியாது. முறைப்படி வருமான வரி செலுத்தினார். இவருக்கு முன் ஆட்சிபுரிந்த எவரும் வரி செலுத்தியதில்லை. 52 நாடுகளைக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் தலைவராகவும் இருந்தார். மிக அதிகமாக வெளிநாடு சென்ற பிரிட்டன் ராணி இவரே.

உலகில் நீண்டகாலம் அரச பதவி வகித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றார் ராணி இரண்டாம் எலிசபெத். அதாவது, 70 ஆண்டு, 214 நாட்கள் ராணியாக இருந்தார்

துயரச் சம்பவங்கள்

கடந்த 2021ம் ஆண்டு இளவரசர் பிலிப் மரணமடைந்தார். இளவரசரின் மரணம் ராணியை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியது.

இவரது மூத்த மகனும் இளவரசருமான சார்லஸ் – டயானா திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இது ராணி எலிசபெத்துக்கு வேதனையளித்த விஷயம். அதேபோல் சமீபத்தில் சார்லஸ், டயானா தம்பதியரின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி – மேகன் தம்பதி பிரிட்டன் அரச குடும்பத்தை விட்டு வெளியேறியதும் இவரை வருத்தத்துக்கு உள்ளாக்கியது.

இந்தியாவுக்கு வருகை

இரண்டாம் எலிசபெத், இந்தியாவிற்கு மூன்று முறை (1961, 1983, 1997) வருகை தந்துள்ளார். முதன்முறை வந்தோ டில்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் ஆக்ரா, மும்பை, வாரணாசி, உதய்பூர், ஜெய்ப்பூர், கோல்கட்டா, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களுக்கும் வந்திருந்தார்.

இரண்டாவது முறையாக (1983) இந்தியப் பயணத்தின்போது அன்னை தெரசாவைச் சந்தித்து, அவரது சேவையைப் பாராட்டினார்.

கடைசியாக 1997ல் இந்தியாவின் 50வது பொன்விழா சுதந்திர தினத்தை யொட்டி வருகை புரிந்தார். இப்பயணத்தின் ஒருபகுதியாக, நடிகர் கமலின் மருதநாயகம் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

அடிமைத் தளையிலிருந்து உலக நாடுகள் மக்களை விடுவித்த பின்னரும் ராணி, ராஜா என்கிற அரச குடும்ப ஆட்சி பிரிட்டனில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!