பாண்டிய மன்னர் மரபு வழிவந்த சிவகிரி பாளையத்தின் எட்டாவது ஜமீன்தாராக ஆட்சி புரிந்தவர் ராணி வீரம்மாள் நாச்சியார். இவர்தம் முன்னோர் வரகுணராம பாண்டிய வன்னியனார் ஆவார்.
கி.பி 1760 – 1767 காலகட்ட பகுதியில் பெரும்பாலான ஜமீன்தார்கள் தாங்கள் முன்னர் ஒப்புக்கொண்ட கப்பங்களைச் செலுத்த மறுத்திருக்கின்றனர். அங்ஙனம் மறுத்த ஜமீன்தார்களில் சிவகிரி ஜமீன்தார்கள் முதன்மையானவர்களாக விளங்கி இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சி பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்முலு நாயுடு கப்பம் கட்ட மறுத்த நிகழ்ச்சிக்கு முன்னதாக நடைபெற்றதாகும்”.
கட்ட பொம்முலுவின் முன்னோர் 7 வயது சிறுவனான வீர பாண்டியன் மகனைக் கொன்றதன் பின் தங்கள் பெயருக்குமுன் சூடி கொண்ட அற்ப வரலாறே நாம் விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு என்பதை இங்கே குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன்.
“ஆதலால் சிவகிரி பாளையக்காரர்கள் தமிழக சுதந்திர போராட்ட வரலாற்றில் வரிக்கொடா இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்து இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்”.
வீரமிக்க 8000 படை வீரர்களை உள்ளடக்கிய சிவகிரி ஜமீனானது வெள்ளையர்களுக்கு மட்டுமல்ல, வெள்ளையர்களை ஆதரித்து வந்த அண்டைய ஜமீன்களுக்கும் பெரும் பாடம் புகட்டியுள்ளது வரலாறு.
சிவகிரி கோட்டை எந்தளவுக்கு வலிமையாக இருந்தது என்பதை ஐரோப்பிய இராணுவக் கருத்து பரிமாற்றங்கள் (Military Consultation) தொகுதி 26-பி பக்கம் 417-418 ஆகியவற்றிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
“இந்திய நாட்டில் நிகழ்ந்த படையெடுப்பு நிகழ்ச்சிகளிலேயே சிவகிரியில் எதிர்கொண்ட எதிர்த் தாக்குதல் போன்று நான் வேறு எங்கும் அனுபவதித்தது இல்லை” என்று ஐரோப்பிய படைத் தளபதி கேனேல் ஃபுல்லர்டின்
கி.பி 1785-யில் தாம் எழுதியுள்ள “இந்தியாவில் ஐரோப்பியரின் ஆர்வத்தின் மீது ஒரு நோக்கு” என்ற நூலில் சிவகிரி பாளைய தாக்குதலில், தாம் பெற்ற அனுபவங்களை விவரித்திருக்கிறான்.
ஆர்வமுள்ளோர் எந்தவொரு வரலாற்றையும் சுயமாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
பள்ளிப் புத்தகங்களில் மிகை உணர்வோடு செருகப்பட்ட திணிப்புகள் மட்டுமே வரலாறு அல்ல என்பதை உணர விழையுங்கள்.