உலக மகளிர் தினம் உருவானது எப்படி?

0 0
Spread the love
Read Time:4 Minute, 47 Second

பெண்களுக்கு ஆண்களுக்கு இணையான ஊதியம் கிடைக்காமலும், சம உரிமை இழந்த காலமும் இருந்தது. அவற்றையெல்லாம் தகர்த்தெறிய பல பெண்கள் போராடினார்கள். அவர்களில் முக்கியமானவர், கிளாரா ஜெட்கின் (Clara Zetkin).

பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராத அந்தக் காலத்திலே பாரிஸ் நகரில் 15 ஆயிரம் பெண்களைத் திரட்டி, பெண்களுக்கு சம உரிமை வழங்கக் கோரியும், ஊதிய உயர்வுக்காகவும், ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்பதை வலியுறுத்தியும் பேரணி நடத்தினார் ஜெர்மனியைச் சேர்ந்த மார்க்சிய தத்துவவாதி கிளாரா ஜெட்கின்.

அவர் பிறந்த 1857-ம் ஆண்டு நியூயார்க்கின் பல இடங்களில் பெண்களின் உரிமைகளுக்காகப் பல போராட்டங்கள் நடந்தன. அது  மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. அதைப் பார்த்து வளர்ந்த கிளாராவுக்கு சிறு வயதிலேயே போராடும் குணம் உருவானது. பெண்களின் உரிமையை நிலைநாட்டும் நோக்கில் படித்து வழக்கறிஞரானார்.  
கிளாரா ஜெட்கின் ஜெர்மனி நாட்டின் சாக்சோனியில் கிளாரா எய்சனர் என்ற விவசாய கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தை காட்பிரைடு எய்சனர் ஒரு பள்ளி ஆசிரியர். அவரது தாயார், ஜோசபின் விட்டேல் எய்சனர். மிகவும் படித்த நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர். கிளாரா ஜெட்கினின் கணவர் பெயர் ஓசிப் ஜெட்கின்.

1874 இல் ஜெர்மனியில் படிப்பை முடித்து ஆசிரியராக இருந்தபோது பெண்கள் இயக்கம் மற்றும் தொழிலாளர் இயக்கங்களிலும் தொடர்பை வளர்த்துக் கொண்டார். 

1907ஆம் ஆண்டு ஜெர்மனியில், ஸ்டட்கார்ட் என்ற நகரில் முதன்முதலாக ‘சோசலிச பெண்கள் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதுமுள்ள பெண்கள் அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கு ஒரு சர்வதேச பெண்கள் அமைப்பு இம்மாநாட்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்குக் கிளாரா ஜெட்கின் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். 1907ல் புதிதாக உருவாக்கப்பட்ட ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்

1911-ம் ஆண்டு மார்ச் 19-ல் கிளாராவால் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1913-ம் ஆண்டு மன்னர்  லூயிஸ் பிளாங்க், பெண்களுக்கு வாக்குரிமையை அளிக்க ஒப்புக்கொண்ட நாளை நினைவுகூரும் வகையில் மகளிர் தினம்  மார்ச் 19-ல் இருந்து மார்ச் 8-க்கு மாற்றப்பட்டாலும் உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக பெண்கள் தினம் அறிவிக்கப்படாமலே இருந்தது.  1917-ம் ஆண்டு, சான் பிரான்சிஸ்கோவில், அலெக்ஸாண்ட்ரா தலைமையில் நடந்த போராட்டத்தின் விளைவாக 1921-ம் ஆண்டு மார்ச் 8 பெண்கள் தினம் கொண்டாட அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தற்போது நாம் பெருமையாகப் பெண்கள் தினம் கொண்டாடும் அதே நேரத்தில், அதற்காகப் பாடுபட்ட ஆளுமைகளையும் நினைவுகூர்ந்து, அவர்கள் விரும்பியவண்ணம் அனைத்துத் துறைகளிலும் காலூன்றி மென்மேலும் வளர்ச்சியடைவதை உறுதி செய்வோம். 

1933ஆம் ஆண்டு ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பின் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அப்போது கிளாரா சோவியத் யூனியனுக்குச் சென்றார்.
1933ஆம் ஆண்ட கிளாரா ஜெட்கின் மாஸ்கோவிற்கு அருகில் தனது 76ஆவது வயதில் மரணமடைந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!