‘ஆத்தா உன் சேலை அந்த ஆகாயத்தைப்போல’ என்ற தாயின் பாசத்தைச் சொல்லும் மில்லியன் கணக்கான ரசிகர்கள் கேட்ட பாடலை எழுதியவர் கவிஞர் ஏகாதசி.
இவர் பல திரைப்படங்களுக்கு நிறைய பாடல்களை எழுதியிருக்கிறார். அதோடு திரைப்படமும் இயக்கியிருக்கிறார். இவரைச் சந்திக்க அவரது ரசிகர்கள் சிலர் வந்திருந்தனர். அப்போது இலக்கியம், கவிதை, திரைப்பாடல்கள் குறித்த விவாதம் நடந்தது. அவர்கள் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி இங்கே.
கவிதைகளில் விருப்பமுள்ளவர்கள் கவிதைகளை எப்படி திரைப்படப் பாடலாக்குவது, நகரச் சூழலில் இருக்கும் கவிஞர்கள், கிராமச் சூழலை எப்படிப் பாடாலாக்குவது என்பன போன்ற கேள்விகளோடு உரையாடல் தொடங்கியது.
அப்போது கவிஞர் ஏகாதசி, கவிதைகளைப் பாடலாக்கும் யுக்திகளை எளிதாக்கி, புரியும்படி கூறினார்.
கவிதையும் கதையும் தன்னியில்பில் சொற்களை வைத்துக்கொள்கின்றன.
பாடல்கள், இசைச் சொற்களைத் தன் மாலையின் கண்ணிகளாக கோர்க்கின்றன என்று சொன்ன ஏகாதசி,
சாமனியர்களிடமும் இசைச் சொற்கள் இருக்கின்றன என்பதை,
“ஆடு வயித்துக்கு மேஞ்சிருக்கு
மாடும் வயித்துக்கு மேஞ்சிருக்கு
ஆட்டையும் மாட்டையும் மேய்ச்சவென் வயிறு
ஆல எல போல காஞ்சிருக்கு”
என்கிற நாட்டுப்புறப் பாடலை எடுத்துக் கூறி விளக்கினார்.
இதில்
கவிஞர் கு.பீக்கையா,
சிவா, தீனா, சண்முகம், கார்த்திகேயன், சசிகுமார், அருண்குமார், லட்சுமி நரசிம்மன், சாந்திப்ரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் நிறைவாக த.மு.எ.க.ச. வடபழனி கிளை கவிஞர்களின் கூட்டுத் தொகுப்பான ‘வனமல்லி’ எனும் கவிதை நூல் வெளியிடப்பட்டது.
நல்ல முயற்சி புதியவர்களுக்கு வழிகாட்டும் தங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்.