இலங்கை எழுத்தாளருக்கு புக்கர் விருது வழங்கப்பட்டது!

0 0
Spread the love
Read Time:4 Minute, 17 Second

இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருது புக்கர் விருது ஆகும். இந்த ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலக (47) எழுதிய ‘த செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா’ (The Seven Moons of Maali Almeida) என்ற புத்தகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய இரண்டாவது புதினம் இதுவாகும்.

விடுதலைப் புலிகள்-இலங்கை ராணுவம் இடையே நடந்த போரினால் பாதிக்கப்பட்ட சம்பவங்களை இலங்கையை அடிப்படையாக வைத்து இந்த நாவலைப் புனைகதையான எழுதியதற்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. புக்கர் விருது ஒவ்வொரு ஆண்டும்  ஆங்கிலத்திலேயே எழுதி இங்கிலாந்திலோ, அயர்லாந்திலோ வெளியிடப்படும் புத்தகங்களுக்கு வழங்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் நாவலுக்கும் ஆண்டுதோறும் புக்கர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு புக்கர்  பரிசுக்கு உலகம் முழுவதிலுமிருந்து 169 நாவல்கள் விருதுக்காக அனுப்பிவைக்கப்பட்டன. இதில் இறுதிப் போட்டிக்குத் தேர்வான ஆறு நாவல்களிலிருந்து இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலக எழுதிய ‘தி செவன் மூன்ஸ ஆப் மாலி அல்மெய்டா’ நூலுக்கு புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் புக்கர் பரிசு பெறும் இரண்டாவது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக இவருக்கு 50,000 பவுண்ட் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

இந்த விருது வழங்கும் விழா லண்டனில் உள்ள பிரபல ரவுண்ட்ஹவுஸில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இங்கிலாந்து அரசர் 3-ம் சார்லசின் மனைவியும் ராணியுமான கமீலா கலந்துகொண்டார். 

கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தேமன் கால்கட் என்பவர் “The Promise” என்ற நாவலுக்காக இந்த விருதை பெற்றார். இந்தியாவை சேர்ந்தவர்களில் 2008-ம் ஆண்டு அரவிந்த் அடிகா, 2006-ம் ஆண்டு கிரண் தேசாய், 1997-ம் ஆண்டு அருந்ததி ராய் ஆகியோர் புக்கர் பரிசை வென்றுள்ளனர்.
இந்தப் பரிசுகளுக்கான நோக்கம் பொது நலனுக்காக இலக்கியத்தின் கலை மற்றும் மதிப்பை மேம்படுத்துவதே என்று புக்கர் பரிசுகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புக்கர் பரிசு அறக்கட்டளையால் ஆண்டுதோறும் இரண்டு இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அதில் ஒன்று புக்கர் பரிசு. இன்னொன்று சர்வதேச புக்கர் பரிசு.  ஒரு படைப்பு முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் அந்தப் படைப்புக்கு புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. அதே வேளையில் அந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அதற்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. இந்தப் பரிசுகளுக்கான  நோக்கம்  பொது நலனுக்காக இலக்கியத்தின் கலை மற்றும் மதிப்பை மேம்படுத்துவதே என்று புக்கர் பரிசுகளுக்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!