இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட வரலாறு தெரியுமா?

0 0
Spread the love
Read Time:4 Minute, 54 Second

1947 ஆகஸ்டு 15ல் நாம் சுதந்திரம் பெற்றோம் எப்படி?

மௌன்ட் பேட்டன், ஜவஹர்லால் நேருவை அழைத்து, உங்கள் இந்தியா விற்குச் சுதந்திரம் கொடுக்கப் போகிறோம். அதை எப்படிக் கொடுப்பது என்று கேட்டார்.

நேருவுக்குக் குழப்பமாக இருந்தது. எதை அடையாளமாக வைத்து சுதந்திரத் தைப் பெறுவது? (பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியது என்பதற்கு எந்த சாசனமும் இல்லை).

உடனே நேருஜி மூதறிஞர் ராஜாஜியை அணுகி, “எனக்கு இந்த நடை முறைகள் தெரியாது. அதனால் தாங்கள்தான் தீர்வு கூற வேண்டும்” என்று கூறினார்.

உடனே ராஜாஜி “கவலை வேண்டாம், எங்கள் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, ராஜகுருவாக இருப்பவர், செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வர். நாமும் அதுபோல் அன்னிய ஆங்கிலேயனின் கையால் சுதந்திரம் பெறுவதைவிட, நம் நாட்டின் குருமகானின் கையால் செங்கோலைப் பெற்று ஆட்சி செய்யலாம்”, என்றார்.

நேருவும் “நேரம் குறைவாக உள்ளது. உடனே ஏற்பாட்டை செய்யுங்கள்”, என்று கேட்டுக்கொண்டார்.

ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்புகொண்டு தகவலைச் சொன்னார்.

அப்போது கடும் காய்ச்சலில் இருந்த ஆதீனம், உடனே முறையாக செங்கோல் ஒன்றைத் தயாரித்து, தங்க முலாம் பூசி, இளைய ஆதீனம் தம்பிரான் சுவாமி களிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார்.கூடவே ஓதுவார் மூர்த்திகளையும் உடன் அனுப்பி வைத்தார். (தேவாரத்தில் இருந்து கோளறு பதிகம் பதினோரு பாடல்களை குறித்துக் கொடுத்தார்- இந்தப் பாடல்களை அப்போது ஓதுவார் மூர்த்திகள் பாட வேண்டும்).

ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில் அவர்கள் செங்கோலுடன் தில்லி போய் சேர்ந்தனர். அப்போது ஆயிரம் ஆண்டு அடிமைத் தளையில் இருந்து, இந்தியாவின் விடுதலை பெறும் விழாவிற்காக எல்லோரும் காத்திருந்தனர்.

அந்தச் சுதந்திர தின விழாவில் மௌன்ட் பேட்டனிடம் செங்கோலைக் கொடுத்து குருமகா சன்னிதானம் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் பெற்று, செங்கோலுக்குப் புனிதநீர் தெளித்து, ஓதுவார் மூர்த்திகள், ‘வேயுறு தோளிபங்கன்’ என்று தொடங்குகிற தேவாரத் திருப்பதிகத்தைப் பாட, பதினோராவது பாடலின் கடைசி வரி,

“அடியார்கள் வானில் அரசு ஆள்வர் ஆணை நமதே” என்கிற இந்த வரியைப் பாடி முடிக்கும்போதுதான், சுவாமிகள் செங்கோலை நேருவிடத்தில் கொடுத் தார். அந்த நிகழ்வைத்தான் நாம் சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறோம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தகவலை நம் பாடப் புத்தகத்தில் வெளியிட்டு, நாடறியச் செய்யாமல் செய்யப்பட்டது.

நண்பர்களே இவ்வளவு பெருமை வாய்ந்த செய்தியை நாம் நாடறியச் செய்வோம்.

திருவாவடுதுறை ஆதீன மடத்தில், இந்தச் செங்கோல் அளித்த நிகழ்வு, கருப்பு வெள்ளைப் புகைப்படமாக உள்ளது.

புகைப்படத்தில் நேரு, கையில் செங்கோலுடன் இருப்பதையும், தம்பிரான் சுவாமிகள் அருகில் உள்ளதையும் காணுங்கள். நேருவுக்கு, தமிழ்பாட்டு ஓதுவார் திருமுறைப் பாடல் பாட “அரசு ஆள்வர் ஆணை நமதே” என்ற பாடல் வரிகள் வரும்போது திருவாவடுதுறை ஆதீனத் தம்பிரான் சுவாமிகள் செங்கோல் கொடுத்து வாழ்த்திய காட்சி…வரலாற்றுச் சான்று…வாழ்க நம் திருமுறைகள்!

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!