5G சேவையின் வளர்ச்சியும் எதிர்காலப் பயன்பாடும்

1 0
Spread the love
Read Time:8 Minute, 45 Second

இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு வெகு வேகமாக அதிகரித்து தற்போது 70 கோடி பயனாளர்கள் உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் செல்போன் வாயிலாக இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப்பெரும் ஆன்லைன் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. எனினும் இந்தியாவில் இன்டர்நெட்டின் தரம் மற்றும் கட்டமைப்பு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என பிரபல ஆன்லைன் நிறுவனமான சர்ப்ஷார்க் தெரிவித்துள்ளது.

உலகளவில் முதலிடத்தை டென்மார்க் பிடித்திருப்பதாகவும், ஆசியாவில் ஜப்பானும், அமெரிக்க கண்டத்தில் கனடாவும், ஆப்பிரிக்க கண்டத்தில் தென்னாப்பிரிக்காவும் இன்டர்நெட் சேவைத் தரத்தில் முதலிடத்தில் இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்டர்நெட் சேவையின் வேகம், மந்தமாகவும், சீரற்றதாகவும் இருப்பதாலேயே தரவரிசைப்பட்டியலில் கடைசி படிக்குத் தள்ளப்பட்டிருப்பதாக சர்ஃப் ஷார்க் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், மக்களுக்கு குறைந்த விலையில் இன்டர்நெட்டை வழங்குவதில் உலகில் 9வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இவ்விஷயத்தில் அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிாந்து போன்ற பல நாடுகளை இந்தியா பின்னுக்குத் தள்ளி யிருப்பது குறிப்பிடத்தக்கது.  செல்போன் சேவை வழங்கும் ஜியோ போன்ற நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு இன்டர்நெட் கட்டணம் சரிவடைந்தது மிக முக்கிய காரணமாகும்.  தற்போது ஜியோ நிறுவனம் சோதனை அடிப்படையில் மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில்  இந்த மாதம் 5ஆம் தேதி முதல் 5ஜி சேவையை சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளது. அடுத்து படிப்படியாக அனைத்து நகரங்களிலும் தொடங்கவுள்ளது. அதனால் G சேவைகளைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

5G சேவை வந்துவிட்டது.‌ 2G,3G ,4G ,5G என்றால் என்ன? இவைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன? பார்ப்போம்.

G என்பது GENERATION என்கிற ஆங்கிச் சொல்லைக் குறிக்கும். அதாவது தலைமுறை! முதன்முதலாக அறிமுகமான  தொலைத்தொடர்பு சேவைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தலைமுறை தொலைத்தொடர்பு சேவையும் தனித்தனிப் பெயரிடப்பட்டுக் குறிக்கப்பட்டன.

1G சேவை :

G என்கிற ஆங்கில எழுத்தைக் கண்டதும் அனைவரும் அது இன்டர்நெட் வசதியைக் குறிக்கிறது என்றே நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அது அவ்வாறு இல்லை. முதன்முதலில் வர்த்தகரீதியாகப் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் சேவைதான் 1G சேவை. 1980-களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சேவையானது அனலாக் சிக்னல்கள் மூலம் ஒருவருடன் ஒருவர் ஒயர் இல்லாமல் பேசும் வசதியை மட்டுமே உருவாக்கிக் கொடுத்தது.

அமெரிக்காவில் இந்தச் சேவை அறிமுகமானபோது 2.4 முதல் 14.4 kbps வேகத்தை மட்டுமே கொண்டதாக இருந்தது. அன்று இந்த 1G சேவையைப் பயன்படுத்திய அலைபேசிகள் அளவில் மிகப் பெரியதாகவும், குறைந்த பேட்டரி சேமிப்புத் திறனை மட்டுமே கொண்டதாக இருந்தன.

2G சேவை :

பின்லாந்து நாட்டில் 1991-ம் ஆண்டுதான் முதன்முதலாக 2G சேவை தொடங் கப்பட்டது. முதன்முதலில் ஒயர் இல்லாமல் இன்டர்நெட் வசதியைப் பயன் படுத்திய சேவை இதுதான். இதில் போனில் தொடர்புகொண்டு பேசவும் செய்யலாம்.

2G சேவையில்தான் குறுஞ்செய்திகளை அனுப்பும் SMS வசதி, படங்கள் மற்றும் காணொளியை அனுப்பும் MMS வசதி எனப் பல சிறப்பம்சங்கள் அறிமுகமாகின.

இன்று நாம் பயன்படுத்தும் அதிவேகமான இன்டர்நெட் சேவைகளுக்கு விதை போட்டது இந்த 2Gதான். இதில்தான் முதன்முதலாக சிம் கார்டுகள் பயன் படுத்தப்பட்டன. இப்போதிருக்கும் இன்டர்நெட் வேகத்தோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்த இன்டர்நெட் வேகத்தைக் கொண்டு விளங்கியது 2G சேவை.

3G சேவை :

2G சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமானதையடுத்து, அதிக இன்டர்நெட் வேகத்தின் தேவை அதிகமானது. இதன் காரணமாக சிக்னல்களைச் சிறு கூறுகளாகப் பிரித்து அனுப்பும் ‘பாக்கெட் ஸ்விட்சிங் முறை’ அறிமுகப்படுத்தப்பட்டு, 3G சேவை உருவானது.

3G சேவையிலும் பல சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் இன்டர் நெட் வேகம் இன்னும் அதிகமாக இருந்தது. நம் இந்திய நாட்டுக்கு மிகத் தாமதமாகத்தான் 3G வந்து சேர்ந்தது என்றாலும், ஜப்பான் நாட்டில் 2001-ம் ஆண்டே இந்தச் சேவை அறிமுகமானது.

வீடியோ கான்ஃப்ரன்ஸ் வசதி, ஜி.பி.எஸ். வசதி ஆகியவை இதற்குப் பிறகு தான் சாத்தியமானது. ஒயர் இல்லாத வேகமான இன்டர்நெட் சேவையை உலகம் கண்டது 3G மூலமாகத்தான்.

4G சேவை :

3G சேவையைவிட அதிக இன்டர்நெட் வேகம் கொண்டதாக மேம்படுத்தப்பட்டு 4G சேவை உருவானது. முதன்முதலாக 2009-ம் ஆண்டு தென்கொரியாவில் இது அறிமுகமானது.

அதிவேக இன்டர்நெட் வசதி, துல்லியமான வீடியோ கால்கள், நொடிப்பொழு தில் மெயில் அனுப்புவது எனத் தொலைத்தொடர்பு உலகத்தையே மாற்றி அமைத்தது 4G சேவை.

ஒரு நொடிக்கு 100 மெகா பைட் வேகம் வரை 4G சேவைகள் இன்று இயங்கி வருகின்றன. லைவ் ஸ்ட்ரீமிங், மொபைல் டி.வி. என இன்டர்நெட் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத சேவைகளை அளித்தது 4G சேவை.

5G சேவை :

4G சேவைதான் வந்துவிட்டதே, இனி இன்டர்நெட் உலகில் சாதிக்க என்ன இருக்கின்றது என்று எண்ணுபவர்களுக்குப் பல ஆச்சரியங்களுடன் வந்திருக் கிறது 5G சேவை.

இச்சேவை அறிமுகமான பிறகு, இன்டர்நெட் மூலம் நடக்கும் தகவல் பரிமாற்றத்தில் எழுபது விழுக்காட்டிற்கு மேல் வீடியோவால் தான் நடக்கு மாம்.

மேலும், அனைத்துத் தகவல்களும் கிளவுட் வசதியில் சேமிக்கப்படும். எனவே, மெமரி கார்டு, பென் டிரைவ் போன்ற சாதனங்கள் தேவையற்றுப் போகும். மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு என்பது சில நொடிகளில் நடந்து முடியும். சமீபத்தில் நடந்துமுடிந்த உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G சேவை அறிமுகமாகியிருக்கிறது. இதன்மூலம் தகவல் தொலைத்தொடர்பில் ஒரு புதிய சாதனையே நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
100 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!