கோபுரம் ஃபிலிம்ஸின் உரிமையாளர் மதுரை அன்புச்செழியன். வெள்ளைக்கார துரை, தங்கமகன், மருது உள்ளிட்ட திரைப்படங்களை இவர் தயாரித்தவர். வலிமை, ப்ரின்ஸ் படங்களை வினியோகம் செய்தவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியன். இவரது மகள் சுஷ்மிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
அன்புச்செழியன் மகள் சுஷ்மிதா 50க்கும் மேற்பட்ட கோபுரம் சினிமாஸ் திரையரங்குகளை நிர்வகித்து வருகிறார்.
ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்.சின் மகன் சரண். இவருக்கும் சுஷ்மிதாவுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடந்தது.
இவர்களது அழகான வாழ்க்கையில் நேற்று (26-12-2022) சுஷ்மிதாவுக்கு சென்னை போரூரில் உள்ள ஶ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாத்தாவான அன்புச்செழியனுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் சன் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர்களில் ஒருவரான ராஜேந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளனர். அன்புச் செழியனின் இல்லம் புதிய வரவால் ஆனந்தக் களிப்பில் இருக்கிறார் அன்புச்செழியன்.