மணம் புரிதல் எவ்வளவு எளிதில்லையோ, அதே போல மனம் பிரிதலும் அவ்வளவு எளிதில்லை. சொல்லப்போனால் முன்னதில் கனவுகள், ஏகத்திற்குமான எதிர்பார்ப்புகள் தானாகவே தோன்றுவது இயல்பு. அவ்வனைத்தும் அடியோடு அழியும்போது ஏமாற்றத்தின் வலி, உயிர் பிரியும் வலியே பரவாயில்லை என்பது போல்தான்.
இங்கே வேண்டுமென்றே வாழ்நாளெல்லாம் வலி சுமக்க விரும்பி எவ்வொன்றையும் யாரும் ஏற்பார்களா? அல்லது தீதானவொன்றே தன் இணையாக, துணையாக வேண்டு மென்று வேண்டுதல்தான் செய்வார்களா?
ஒரு திருமண வாழ்வென்பது ஏகத்துக்கும் எதிர்மறையானது. அதாவது இதுதான், இவ்வளவுதான் என்று இரு மனங்களை ஒரே வழியில் கட்டிவைத்து, போதாததற்கு அம்மா, அப்பா, மாமனார், மாமியார், மச்சினன், கொழுந்தன், நாத்தனார் குழந்தைகள், வரு மானம், ஆசை, அவசியம், அத்தியாவசியம், அத்தனை பேக்கேஜ்களையும் வாழ் நாளெல் லாம் இரண்டே இரண்டு நபர்களும் தங்களுக்குள் முரண்பட்டாலும் முட்டிப் பிரியாமல் ஒன்றாக ஒரே அளவாகச் சுமக்க வேண்டும்.
அக்காலம் போலவே எக்காலமும் நாமிருவர் நமக்கிருவர் என்றோ, விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போக மாட்டார்கள் என்றோ, இது நம் பங்கு, இது நம் குடும்பத்தின் பங்கு என்றோ, நாளைய நம் குழந்தைகளுக்கான எதிர்காலத்திற்காக என்றோ, இக்காலத்தினரால் சிந்திக்க முடியாததை எவ்வயதினருமே ஏற்றுக்கொள்ளவும் தயாராகவே இல்லை.
தன் தாயைப் போலவே தனக்கொரு மனைவியை எதிர்பார்க்கும் ஆண்கள்… தன் தாயைப் போல தானும் குடும்பச் சங்கிலியில் சிக்கிக்கொள்ளக் கூடாது என நினைக்கும் பெண்கள்.. இயல்பாகப் பொறுப்புகளை ஏற்க விரும்புவதில்லை… இருபாலருமே..
பெற்றோர்களின் வற்புறுத்தலினால் ஏற்க நேரும் போதும் விரைவிலேயே வெறுத்து அதி லிருந்து வெளியேறுகிறார்கள். தனக்கென்று வாழவும்… தனக்கு முடியும்போது முடிந்ததை செய்துகொள்ள நினைக்கும் மனநிலையிலேயே இருவருமே இருக்கிறார்கள். எனவே விரைவாக விடுதலை பெறவோ, அல்லது ஒரு அவசர மருத்துவ முத்தத்திற்கோ தன் வாழ்வைத் தெரிந்தே மாற்றிக்கொள்ள நினைக்கிறார்கள். அது அவர்கள் வலி. ஆற அமர அவர்கள் தீர்மானித்துக்கொள்ளட்டும்.
போதும் அவர்கள் வாழ்வை அவர்கள் வாழட்டும்… அவர்கள் வெளியேற வேண்டும், ஒரு வர் மீது ஒருவர் குறை சொல்லி, தூற்றிக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எப்போதும் ஏங்கிக்கொண்டே இருப்பது நியாயமாமாரே.. ஒரு வாழ்வு பிரிவது உங்களுக்கு அவ்வளவு மகிழ்வானதாகவா இருக்கிறது?
குதர்க்கமும், குரோதமும், குற்றமும், கொலையும், தற்கொலையும், தர்க்கமும் வாழ் நாளெல்லாம் தண்டனை என்று உணர்ந்து, அதைத் தவிர்க்க இரு பாலரும் இணைந்து பேசி மற்றெவருக்கும் வேதனை தராமல், வருத்தம் மிக ஏற்படுத்தாமல் சுமூகமாகப் பிரிவது அவர்களின் அழகிய தெளிவான முடிவல்லவா?
இருவரின் இல்லறத்தில் இதமாக இருங்கள்… நன்நட்பில் நலம் பேணுங்கள்.. முக்கியமாக இங்கிதம் உணருங்கள்… உங்களால் அவர்கள் மேலும் துன்பப்பட நேராமல்… இணக்கமாகப் புரிந்து ஒத்துழைப்பு செய்யுங்கள்…
அவர்கள் கதவு திறந்து தங்கள் பிரிவை அறிவிக்க வரும்போது இதோ இதோ என்று காத்துக்கொண்டிருந்து, கல்லெறியாதீர்கள்…. கல்லைத் தூக்கிக் கடாசிவிட்டு உங்கள் கூட்டின் பொறுப்பாளியாக உங்கள் கதவை சரி செய்யுங்கள்.
அந்தரங்கம் புனிதமானதல்ல….
ஆகப் புதிரானது… ஒட்டுக்கேட்காமல் ஒதுங்கி ஒத்துழைப்பு தாருங்கள்….
- அனு பரமி Anu Parami Chennai முகநூல் பக்கத்திலிருந்து…