வரதட்சணை, மகப்பேறின்மை, பெண்களின் பொருளாதார சுதந்திரம், விருப்பமில்லாத திருமணங்கள், திருமணத்துக்கு வெளியே உறவு வைத்துக் கொள்வது போன்ற விவாகரத்துக் கோருவதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
அயல் நாடுகளில்தான் விவாகரத்து கோரும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்துவந்த நிலையில், மும்பை,பெங்களூரு போன்ற பெருநகரங்களிலும் விவாகரத்துக் கோருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் “ஒரு பொருளைப் பயன்படுத்திய பின் வீசி எறியும் ‘யூஸ் அன்ட் த்ரோ’ பழக்கம் திருமண வாழ்க்கையிலும் வந்துவிட்டது வேதனையானது. சிறிய காரணங்களுக்குக்கூட விவாகரத்து கோருவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது” என்று கேரள உயர் நீதிமன்றம் வேதனையுடன் கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் யூஸ் அண்ட் த்ரோ கான்சப்ட் அதிகரித்துவருகிறது. சிங்கிள் மதர்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.
சிங்கிள் மதர் என்பது தந்தை இல்லாமல் தாய் மட்டும் குழந்தையை வளர்ப்பது. பொதுவாக இதனை சிங்கிள் பேரண்ட் என்றும் சொல்லுவார்கள்.
இன்றைய காலத்தில் பெண்ணுக்கு சமஉரிமை இருந்தாலும் பல விஷயங்களில் பெண்கள் தனித்து நின்று செயல்படுவதில் பல சிக்கலைகளைச் சந்திக் கிறார்கள். அதிலும் முக்கியமாக சிங்கிள் மதர் விஷயத்தில் குழந்தைகளைத் தனி ஆளாக வளர்ப்பதோடு, குடும்பத்திற்கான செலவுகளோடு குழந்தை வளர்ப்புக்கான செலவுகளையும் அவர்கள் ஈடு செய்ய வேண்டியிருக்கிறது. சிங்கிள் தாய்மார்கள் ஒரே நேரத்தில் இரண்டு பொறுப்புகளை சுமக்கிறார்கள். வேலை மற்றும் வீட்டு வேலைகளையும் செய்கிறார்கள்.
காரணங்கள்
இந்திய கலாச்சாரத்தின் அடிநாதமே கூட்டுக்குடும்ப கலாச்சாரம்தான். இன்று உலகே ஆச்சர்யமுடன் நோக்கும் இத்தகைய கலாச்சாரத்துக்கு சொந்த மான நாட்டில் இன்று விவாகரத்துகள் அதிகரித்து, உறவுகளை கேள்விக்குறிக்குள்ளாவதுதான் வேதனையின் உச்சக்கட்டம்.
விவாகரத்து, பிரிதல், கைவிடுதல், விதவையாக மாறுதல், குடும்ப வன்முறை, கற்பழிப்பு, ஒரு நபரால் பிரசவம் அல்லது தனி நபர் தத்தெடுப்பு ஆகியவை ஒற்றைப் பெற்றோராக மாறுவதற்கான காரணங்கள்.
2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி, இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 7 லட்சத்து 13 ஆயிரத்து 511 விவாகரத்து வழக்குகள் நிலு வையில் இருப்பதாகவும், தமிழகத்தில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 1200 விவாகரத்து வழக்குகள் புதிதாக பதிவாகி வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, விவாகரத்துக் கேட்டு காத்திருப்பவர்களும் இருக்கின்றனர்.
தீர்க்கும் வழிகள்
ஒவ்வொரு பெற்றோரும் மற்றவரை மதிக்க வேண்டும், குறைந்தபட்சம் குழந்தையின் முன்னிலையில், பெற்றோர் வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளாத அல்லது பிரிந்து செல்லாதபோது, முதன்மை பாதுகாவலர் ஆண் அல்லது பெண் குழந்தைக்கு ஆதரவை வழங்குவேண்டும். பிரிக்கப்பட்ட பெற்றோர்களிடையே உள்ள சிவில் நடத்தை, குழந்தைகளின் சூழ்நிலையை எவ்வாறு சமாளிக்கிறது என்பதில் நேரடி விளைவைக் கொண்டிருக்கிறது. இது குறிப்பாக தங்கள் அம்மா அப்பா பிரிவை இன்னும் புரிந்துகொள்ளாத இளைய குழந்தைகளிடம் காணப்படுகிறது, பெற்றோர்கள் இருவரும் தங்கள் குழந்தையை வளர்ப்பதற்கு ஆதரவான நட்பை ஏற்படுத்த வேண்டும். வரலாற்றுரீதியாக, ஒரு தாய் அல்லது தந்தையின் மரணம் ஒற்றைப் பெற்றோருக்கு பொதுவான காரணமாகும்.
பல திருமணத்திற்கு அப்பாற்பட்ட பிறப்புகள் தற்செயலானவை. திருமணத்திற்குப் புறம்பான பிறப்புகள் பெரும்பாலும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை, மேலும் அவை பெரும்பாலும் ஒற்றைப் பெற்றோரை உருவாக்குகின்றன. ஒரு ஆணோ, பெண்ணோ குழந்தையை வளர்க்கும் பொறுப்பைத் தட்டிக்கழிக்க விரும்புவதால் அவர் வெளியேறலாம். இது குழந்தைக்குத் தீங்கை விளைவிக்கும்.
யுனைடெட் ஸ்டேட்ஸில், திருமணமானவர்களைவிட திருமணமாகாத தம்பதிகளிடையே திட்டமிடப்படாத கர்ப்பத்தின் விகிதம் அதிகமாக உள்ளது. அந்தக் கலாசாரம் தற்போது இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் அதிகரித்து வருவது வேதனைக்குரியது.
திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்வது, பார்ட்டிகளில் விரும்பியவர்களுடன் சேர்ந்து குடித்து கும்மாளமிடுவது போன்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன.
ஐ.டி. கம்பெனிகளின் வருகை, இரவு நேரப் பணி, டீம் ஒர்க், வெளிநாட்டுப் பணி போன்ற சூழ்நிலைகளாலும் சிங்கிள் பேரண்ட் உருவாகின்றனர் என்று விவரம் தெரிகிறது.
பெண்கள் ஆண்களைவிட அதிகமாகச் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டனர், பெண் உரிமை பேசப்படுகிறது. யாரையும் எதற்கும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. நான், தனது என உரிமைக் குரல் எழுப்பியதன் விளைவும் சிங்கிள் பேரன்ட்டுக்கு வழிவகுக்கலாம். பெற்றோர் பிரிந்திருக்கும் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளின் மனநிலையில் குடும்ப ஒற்றுமை உணர்வு மறைய வாய்ப்புள்ளதாக மனநல டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
எதிர்காலத்தில் விவாகரத்து என்பதும் துணையைப் பிரிந்து வாழ்தல் என்பதும் சாதாரண விஷயமாகவே குழந்தைகள் மனதில் பதிந்துவிடும். தவிர்க்க முடியாத காரணத்தால், விவாகரத்து பெற்றவர்கள் அவர்களது குழந்தைகளுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். துணையைப் பிரிந்து வாழ்பவர்கள் சேர்ந்து வாழ முயலவேண்டும்.