தென்காசியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக ரயில் பயணம் மேற்கொண்டார். இதற்காக நேற்று எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு பொதிகை ரயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில் பயணம் செய்தார்.
அந்தப் பெட்டியில் இரு படுக்கறை அறைகள், அட்டாச்சிடு பாத்ரூம் சுடு நீர், முழுவதுமான குளீர்சாதன வசதிகள கொண்ட கோச் அது.
ஒரு வரவேற்பறை, ஒரு டைனிங் ரூம், ஒரு கிச்சன், பர்னிச்சர்ஸ், டி.வி, ப்ரிட்ஜ் ஆகிய வசதிகளும் உள்ளன.
இந்தக் கோச்சில் ஆறு பேர் முதல், 12 பேர் வரை பயணிக்கலாம். இந்திய ரயில்வேயில் இது போன்ற 336 கோச்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றின் பெயர் Inspection Car. இத்தனை வசதிகள் கொண்ட கோச்கள், ரயில்வே உயர் அதிகாரிகளின் போக்குவரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன.ஆனால் 2018ஆம் ஆண்ட முதல் இந்த வகை கோச்கள் பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டது.
முதல் வகுப்பு குளிர்சாதனை வசதிகொண்ட கோச்சின் டிக்கெட் விலையில் 18 மடங்கு செலுத்தினால், எந்த ஊருக்கும் இந்த கோச்சில் பயணம் செய்யலாம்.
பயண தூரத்தைப் பொறுத்து INR 50,000 முதல் 2 லட்சம் வரை ஆகலாம்.
30 நாட்களுக்கு முன்பாக புக் செய்ய வேண்டும். 48 மணி நேரம் முன்பாக, முழு தொகையையும் செலுத்த வேண்டும், பயணத்தை கேன்சல் செய்தால் தொகை திருப்பித் தரப்பட மாட்டாது ஆகியவைதான் இதன் கண்டிஷன்.
சமையல் பொருட்கள் மற்றும் சமையல்காரர் செலவுகள் தனி.
‘நகரும் வீடு’ என்று என்று அழைக்கப்படும் இந்த மினி மீட்டிங் ஹால், டைட்னிங் ஹால் என சகல வசதிகளும் இருக்கிறது. இது ரயிலில் கடைசி பெட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதேபோல் தனிப்பெட்டியைக் கொண்ட ரயிலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன, நீங்களும் புதிவு செய்து பயணத்தைத் தொடங்குகிறீர்களா?