சிவகங்கையின் ராணி, பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராகப் போர் தொடுத்த இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாளில் அவரது திருவுருவ படத்திற்கு ஆளுநர் மரியாதை செலுத்தினார்.
ராணி வேலு நாச்சியார் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை. இவர் 1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாகப் பிறந்தார். இவரை ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். மேலும் இவர் பல மொழிகள் கற்றார் ஆயுதப் பயிற்சி பெற்றார்.
ராணி வேலு நாச்சியார் 1746இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத் தேவருக்கு மனைவியானார். 1772ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி சிவகங்கைப் படைகளை பெஞ்சர் முற்றுகையிட்டார். ராஜா முத்து வடுகநாதர் மற்றும் அவரது பல வீரர்களுடன் அந்த வீரப் போரில் இறந்துவிட்டார். வேலுநாச்சியார் முத்துவடுக நாதரை அடக்கம் செய்துவிட்டு விருப்பாச்சி விரைந்தார்.
தண்டவராயன் பிள்ளை உடன் கைம்பெண் ராணி வேலுநாச்சியார் மற்றும் மகள் வெள்ளச்சி நாச்சியார் திண்டுக்கல்லுக்கு விருப்பாச்சி பாளையம் சென்றனர். பின்னர் ராணி வேலுநாச்சியாரின் பாதுகாவலர்கள் வெள்ளை மருது மற்றும் சின்ன மருது ஆகியோர் இணைந்து கொண்டனர். ராணி வேலு நாச்சியார் மற்றும் அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார் திண்டுக்கல் அருகே விருப்பாச்சிபாளையத்தில் கோயில நாயக்கர் பாதுகாப்பில் கீழ் வசித்து வந்தனர்.
வேலுநாச்சியாரை எதிர்த்துப் போராடுவதால் விரக்தியடைந்த நவாப் வேலுநாச்சியார், அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் சிவகங்கைக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர். மற்றும் நவாபிற்கு கிஷ்தி செலுத்திவிட்டு நாட்டை ஆள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். நிர்வாகத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஒரு உடன்படிக்கையின்படி ராணி வேலு நாச்சியார் சிவகங்கையை ஆட்சிபுரிவதற்கு சின்னமருதுவை நாட்டின் முதல்அமைச்சராகப் பணிபுரிவதற்கும் வெள்ளை மருது நாட்டின் தலைமைத் தளபதியாகப் பணிபுரிவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால் கைம்பெண் ராணி வேலு நாச்சியார் தனது கணவனைத் தொடர்ந்து 1780 வரை சிவகங்கையை ஆட்சி புரிந்தார். இவர் நாட்டை நிர்வகிப்பதற்காக மருது சகோதரர்களுக்கு அதிகாரங்களை வழங்கினார். சில வருடங்களுக்குப் பிறகு ராணி வேலு நாச்சியார் இறந்தார். ஆனால் அவரது இறப்பு குறித்த சரியான தேதி தெரியவில்லை (அது சுமார் 1796ஆக இருக்கலாம்).
திருக்குறளில் உள்ள ஆன்மிக கருத்துகள் மறைக்கப்பட்டு, உள்நோக்கத்துடன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி உள்ளார். தமிழகத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றவுடன் எனக்கு திருக்குறள் புத்தகம் தான் முதலில் வழங்கப்பட்டது, திருக்குறள் நூல் பக்தியுடன் துவங்கி, ஐந்து புலன்களை எப்படி கட்டுப்படுத்துவது அதன் மூலம் எப்படி ஒருவன் தன் வாழ்நாளில் பிறந்தது முதல் இறப்பு வரை எப்படி வாழ முடியும் என்பது குறித்து பேசுகிறது .
குறிப்பாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு. போப் வேண்டுமென்றே இதனை மாற்றி மொழி பெயர்த்துள்ளார். ஆதி பகவன் என்றால் முதன்மை கடவுள் என நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஜி.யு.போப் இதற்கான அர்த்தத்தை புரிந்து இருந்தாலும் PRIMAL DEITY என எழுதியுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார். தமிழக கவர்னர் ரவி தமிழ் தொடர்பான பல கேள்விகளை எழுப்பி பொது நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். தற்போது வேலு நாச்சியார் குறித்து பதிவிட்டிருக்கிறார்.