இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவுபெண்களுக்கு 16.5 g/dl மீறிய அளவு மற்றும் ஆண்களுக்கு 17 g/dl மீறிய அளவு கொண்ட நிலைக்கு பாலிசைத்தீமியா (POLYCYTHEMIA) என்று பெயர்.
பொதுவாகவே ஆண்களுக்கு இந்த ஹீமோகுளோபின் அளவு கூடுதலான நிலை பரம்பரைத் தன்மை காரணமாக ஏற்படலாம். JAK2 மரபணுக்கள் மாற்றம் காரணம் என்றும் ஒரு ஆராய்ச்சி முடிவு சொல்கிறது.
புகைப்பழக்கம் கொண்டவர்கள் மற்றும் மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு இந்த பாலிசைத்தீமியா ஏற்படலாம் என்கின்றர்.
சிலருக்கு மண்ணீரல் என்று சொல்லும் spleenல் இரத்த செல்களின் உற்பத்தித் திறன் அதிகமாக இருக்கும் நிலை உண்டு.
polycythemia vera என்ற புற்றுநோய் செல்களை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் செல்களின் binding capacity என்று சொல்லக்கூடிய ஒன்றுகூடும் தன்மை அதிகமாக இருப்பதால் ரத்தக்கட்டு என்று சொல்லும் blood clots ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இதனால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.
நீங்கள் முதலில் ஒரு MD general medicine மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும். பாலிசைத்தீமியா ஏற்படுவதற்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
வேறேதும் உடல் உபாதைகள் இல்லை என்றால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்வது இந்த பாலீசைத்தீமியா நிலைப்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும். புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உண்டெனில் அவற்றை அடியோடு நிறுத்திவிட்டு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.