மாட்டுவண்டியின் விஞ்ஞானத் தொழில்நுட்பம் பற்றித் தெரியுமா?

2 0
Spread the love
Read Time:6 Minute, 46 Second

வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடியான தொழில்நுட்பம் கொண்டது மாட்டுவண்டி. வண்டியை மாடு இழுக்க மட்டுமே சக்தியைச் செலவழித்தால் போதும். பாரத்தை வண்டியே சுமந்து கொள்ளும். உயிரினங்களை வதைக்காமல் மனிதன் அதைப் பயன்படுத்தவேண்டும். இப்படி யோசித்த நமது முன்னோர்களின் அறிவுத்திறனையும், நேசத்தையும்  வியக்காமல் இருக்க முடியவில்லை.

நமது முன்னோர்கள் அதை எப்படியெல்லாம்  சாத்தியப்படுத்தினார்கள்  என்பதை பார்க்க லாம். குறிப்பாக, தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் பாரவண்டி வடிவமைப்பு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கோரமண்டல் கடற்கரை பகுதி என்று குறிப்பிடப்படும் ஒரிசா வரை ஒரே மாதிரி இருக்கிறது.  மாட்டு வண்டிகளின் சக்கரத்தின் உயரம் 5¼ அடி என்று தரப்படுத்தப்பட் டிருக்கிறது. இந்தத் தரப்படுத்தல் என்பது ஏன் என்று சற்று பார்ப்போம்.

பொதுவாக ஒரு நபரை நெட்டையான ஆள் என்றோ, குட்டையான ஆள் என்றோ அடை யாளப்படுத்துவது நம்மிடையே இருந்துவரும் ஒரு பழக்கம். இந்தக் குட்டை நெட்டைக்கான அடிப்படை (Reference point) என்று ஒன்று இருக்க வேண்டும் தானே. அதாவது சராசரி உயரம் என்பதாக. நம்மைப் பொறுத்தவரை நம் ஊரில் மனிதனின் சராசரி உயரம் என்பது 5½ அடி.

இந்தச் சராசரி உயரத்தின்  ¾ பங்கு என்பது அதாவது எண் சாண் உடம்பு என்று சொல் வோமே அதில்  ¾  பங்கான 6 சாண் என்பது  4 1/8  (நாலே அரைக்கால்) அடி ஆகும். இது மனிதனின் நெஞ்சுப் பகுதி வரை உள்ள உயரம்.

மாட்டு வண்டியின் நீளமான பகுதியின் பெயர்  ‘போல்’  என்பதாகும். இந்த போலின்  முனை யில்தான் மாடுகளைப் பூட்டப் பயன்படும் நுகத்தடியைப் பொருத்திக் கட்டுவார்கள். 5¼   அடி  விட்டம் கொண்ட  வண்டிச் சக்கரத்தின் ஆரம் 2 5/8 (இரண்டே அரையே அரைக்கால்) அடி. சக்கரத்தின் மையத்தில் அச்சு சொருகப்பட்டிருக்கும். இரு சக்கரங்களையும் இணைக்கும் இந்த அச்சின் மேல்தான் பாரம் தாங்கியாகச் (Load bearing) செயல்படும் தெப்பக்கட்டை அமர்த் தப்பட்டிருக்கும். இந்தத் தெப்பக்கட்டையின் மேல்தான் ‘போல்’ என்னும் நுகம் கட்டும் நீளக் கட்டை பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் போல் மற்றும் தெப்பக்கட்டையும் சேர்ந்து 1½  அடி உயரம் இருக்கும்.

ஆக ஒரு வண்டியைப் படுக்கை மட்டத்தில் சமன் (Balance) பண்ணினால் வண்டியின் உயரம் 41/8 அடியாக இருக்கும். அதாவது சக்கரத்தின் ஆரத்தின் அளவும் தெப்பக்கட்டையின் உயர மும் (25/8 + 1½ ) சேர்ந்து உயரம்    4 1/8  அடியாகும். ஒரு மாட்டின் கழுத்து வரை உள்ள உயரம் சராசரியாக 4 1/8 அடி. இத்தனை சராசரி உயரங்களின் அடிப்படையில்தான் நமது மாட்டுவண்டியினை வடிவமைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

அவர்களால் இவ்வளவு நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ள மாட்டு வண்டியை 4 1/8  அடி உயரத்தில் விரல் தொடலில் வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாத படி நொடிப்பொழுதில்  சமன் (Feather touch balance) செய்ய முடியும்.  இத்தனை துல்லிய  அளவு தொழில்நுட்ப ஒருங்கிணைவே மாட்டுவண்டி.

மாட்டுவண்டியின் ஒவ்வொரு பாகத்தையும் செய்ய இன்னின்ன மரவகையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று வரையறுத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். அந்த வரையறை யில் சில இங்கே.

சட்டம்          – வாகைமரம்

குறியது         – வாகைமரம்

ஆரக்கால்       – உன்னி

அலகு               – தேக்கு

குடம்           – வைமரம்

தெப்பக்கட்டை   – வேங்கை

போல்                – பாலோடி (அ) வேங்கை

நுகம்           – கொன்றை (அ) மஞ்சணத்தி (அ) புன்னை

நோக்காகுச்சு    – வைமரம்

தாங்குக்கட்டை  – வைமரம்

பிள்ளைச்சட்டம்  – வாகை

குரங்குகம்பு           – கல்மூங்கில்

ஊனிகம்பு       – விடத்தலை

அளி            – மூங்கில்பட்டியல்

பார வண்டியின் பாகங்களைச் செய்யப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மர வகைகளின் சிறப்புத் தன்மையைச் சிறிது பார்ப்போம்.

வண்டிச்சக்கரத்தின் அலகுக்குப் பயன்படுத்தும் தேக்கு மரம் வலுவானது. நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டது.

வண்டியின் நுகத்தடிக்கு மஞ்சனத்தி மர கம்பைப் பயன்படுத்துவதன் நோக்கம் அந்த மரத்திலுள்ள மஞ்சள் தன்மையின் மருத்துவ குணம் மாட்டின் கழுத்து உராய்வினால் ஏற்படும் புண்ணுக்கு மருந்தாகவும் பயன்படும் என்பதனாலேயே.

எடை குறைவு மற்றும் வலிமை தன்மையும் கொண்ட மூங்கிலை அளி பலகைக்கு பயன்படுத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

நன்றி : வெள்உவன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!