எம்.ஜி.ஆர். என்னும் விந்தை மனிதர்

1 0
Spread the love
Read Time:8 Minute, 34 Second

இன்று எம்.ஜி.ஆர். நினைவு நாள்! நாற்பது வருட பத்திரிகையாள நினைவுகள் இன்று என்னுள் சுனாமியாக பொங்குகின்றன.

அம்மா கமலா சடகோபன் மங்கையர் மலரின் இணை ஆசிரியராக பணியாற்றிய போது அவருக்காக, நான் பல இடங்களுக்கு நிருபராக சென்று இருக்கிறேன். அந்த அனுபவத்தை கொண்டு, ஓர் அரசியல் பத்திரிகையில் சேர முடிவு செய்து, துக்ளக்கில் இருந்து வெளிவந்திருந்த விசிட்டர் அனந்த் அவர்கள் விசிட்டர் என்கிற பத்திரிக்கையை தொடங்க போவதாக அறிந்து நான் அதற்கு விண்ணப்பித்தேன்.

என்னை இண்டெர்வியூ செய்த விசிட்டர் அனந்த், அப்போதே ஒரு கட்டுரை எழுதி காட்டு என்று சொல்ல, போபோர்ஸ் ஊழலை குறித்து ஓர் கட்டுரையை நகைச்சுவையாக எழுதினேன். கூடவே, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் எழுதியிருந்தேன்.

விசிட்டர் அனந்த் கட்டுரையை சிலாகித்து என்னை விசிட்டரின் துணை ஆசிரியராக நியமித்தார்.

அதற்கு முன்பாகத்தான்,அக்டோபரில், எம்ஜிஆர் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியிருந்தார்.

இந்திரா காந்தியின் மரணத்தின்போது ஜனாதிபதியாக இருந்த ஜெயில் சிங்கிற்கும், ராஜீவ் காந்திக்கும் அப்போது பிரச்சனைகள் இருந்தன. சீக்கிய பிரச்னையால், அவரை இந்திரா ஜனாதிபதியாக நியமித்திருந்தார். ஆனால் அவருக்கும், ராஜீவ் காந்திக்கும் உறவு பாதிக்க, அந்த முறை ஜனாதிபதியாக தமிழ்நாட்டில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ராஜீவ் தீர்மானித்தார்.

அப்போது அமெரிக்காவில் இருந்து வந்திருந்த எம்ஜிஆர் மிகவும் பலவீனமாக இருந்தார். கட்சியில் வேறு, ஜெயலலிதா அணிக்கும், ஆர் எம் வீரப்பன் அணிக்கும் கடும் போட்டி இருந்தது.

சென்னையை தாக்கிய புயல் நிவாரண நிதிக்காக சென்னை வந்த ராஜீவை வரவேற்க பெரும் மக்கள் கூட்டம்.

மறைமலை அடிகள் நகரில், மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் பிரம்மாண்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை கூட்டியிருந்தது. இந்திரா காந்தி மரணம், எம்ஜிஆர் உடல்நிலை கருதி அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு அமோக அனுதாப அலை தமிழ்நாட்டில் வீசிக்கொண்டிருந்த நேரம்.

கலைஞர் கருணாநிதி, இந்த அலையில் நாம் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று 1984 தேர்தலில் போட்டியிடவே இல்லை. 1984 தொடங்கி, 1988 வரை காலகட்டத்தில் திமுக, சுறுசுப்பாகவே செயல்படவில்லை.

ராஜிவ் ஓர் தடாலடி திட்டத்தை, நிறைவேற்ற நினைத்தார். எம்ஜிஆர் உடல்நிலை சரியில்லாத காரணத்தை காட்டி, அவரை ஜனாதிபதியாக உட்கார வைத்துவிட்டு, தமிழ்நாட்டில் மூப்பனார் தலைமையில் காங்கிரஸ்-அதிமுக கூட்டணி ஆட்சியை ஏற்படுத்த நினைத்தார். எம்ஜிஆருக்கு இந்த யோசனை பிடித்திருந்தது. ஆனால் கட்சியில் அதற்கு சம்மதம் கிடைக்காது என்று யோசித்தார். இருந்தாலும், ராஜிவ் காந்திக்கு ரகசியமாக பச்சைக்கொடி காட்டிவிட்டார். அதன் மூலம், தனது கட்சியில் உள்ள உட்கட்சி சண்டையும் அடங்கும் என்று தோன்றியது.

எனது நண்பன் ஒருவன் பெரிய பதிப்பக நிறுவனத்தின் மகன். அவனுடைய தந்தை, அப்போதைய அமைச்சர் ராஜேஷ் பைலட்-க்கு நெருங்கிய நண்பர். அவர்கள் மூலம், எனக்கு இந்த ரகசிய திட்டம் தெரிய வர, நான் விசிட்டர் அனந்திடம் சொல்ல, ”நல்ல கவர் ஸ்டோரி! நீயே இதை எழுது” என்றார்.

அதுதான் எனது முதல் அரசியல் கவர் ஸ்டோரி. (My article got a big boost when, K.PSunil, Chennai Corresondent of The Illustrated Weekly of India, republished the article in English.)

எங்கள் விசிட்டர் அலுவலகம் லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக அலுவலகம் எதிர்வாடையில் இருந்தது. எனது கட்டுரை வெளியாகி இரண்டு நாள் கழித்து, எம்ஜிஆர் ஆள் அனுப்பி, அந்த கட்டுரையாளரைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார்.

‘பயந்து கொண்டே போனேன்! எனது கல்லூரி மாணவத் தோற்றத்தைப் பார்த்து எம்ஜிஆர் திகைத்தார். ”நீங்களா எழுதினீங்க? ஒரு பெரிய கைதேர்ந்த அரசியல் விமர்சகர் எழுதின மாதிரி வார்த்தை பிரயோகங்கள் இருந்தன. ரகசியமான இந்த விஷயம் உங்களுக்கு எப்படி கிடைச்சுது?” என்றார்.

“எனது புலன்களை நாடு முழுவதும் அனுப்புகிறேன். அவை சேகரித்து வருகின்றன” என்று சொல்லிவிட்டு தகவலை நான் பெற்ற வழியைக் கூறினேன்.

”அரசியல்வாதியா நான் அதற்கு ஆதாரம் இல்லேன்னுதான் சொல்லுவேன். உங்களால ஆதாரத்தைக் கூற முடியாது!” என்றார்.

”சார்! துக்ளக் ஆசிரியர் சோ, உங்களை நேற்று இரவு ரகசியமா சந்திச்சப்ப, நீங்க இந்த விஷயத்தை அவர் கிட்ட சொல்ல, அவர் வேண்டாம்! ராஜீவுக்கு போபோர்ஸ் ஊழல்ல கெட்டப்பேரு! அவரு ரொம்ப நாள் பிரதமரா நீடிக்க மாட்டார். அவரோட கூட்டணி ஆட்சி வச்சா, எலி தவளை கதையாகிடும்னு சோ சொன்னதுகூட, எங்க பத்திரிக்கைக்கு தெரியும்” என்றதும் அசந்து போனார்.

“நீங்க நல்ல வருவீங்க. அரசியல் கட்டுரை நிறைய எழுதுங்க!” என்று வாழ்த்தினார்.

அது செல்போன் இல்லாத காலம். இல்லையென்றால், செல்பி எடுத்துக்கொண்டிருப்பேன். அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போது தோன்றவில்லை

அதற்குப்பின் எனது அப்பா பற்றிய விசாரிப்புகள் எல்லாம் முடிந்து அவரிடம் விடைபெற்றேன்.

எம்ஜிஆர் பின்வாங்கியதால் மட்டுமே, அவருக்குத் தர இருந்த ஜனாதிபதி பதவியை ஆர்.வெங்கட்ராமனுக்கு அளித்தார் ராஜிவ். காந்தி.

(As MGR had wished me, I joined Indian Express and remained there for six years and later had switched over to The Hindu, where I was employed for 30 long years and retired peacefully this year.)

நான் சிறு வயதில் இருந்தே, எந்த பிரமுகரையும் நாடி செல்வதில்லை. அவர்கள் அழைத்தால் மட்டுமே போகிறேன். அந்த வகையில் பெரிய வி.வி.ஐ.பி.க்களை நான் சந்தித்திருக்கிறேன்.

இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற சர்வ வல்லமை படைத்த மனிதர்களைச் சந்தித்துவிட்டதால், இப்போது உள்ள தலைவர்கள் எனக்கு Lilliputians (Small) ஆக தெரிகிறார்கள். I do not even wish to meet them, if given an opportunity.

Kaalachakram Narasimmaa Tan  முகநூல் பக்கத்திலிருந்து

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!