உலகிலேயே நீண்ட தூரம் பறக்கும் பயணிகள் விமான சேவை வரிசையில் முதலிடத்தைப் பிடித்து, உலகிலேயே மிக நீண்ட தொலைவிற்கான 18 மணி நேரங்கள் 50 நிமிடங்களில் கடக்கும் விமான சேவை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விளங்குகிறது. சிங்கப்பூர் – நியூயார்க் இடையேயான 15,348 கி.மீ. தூரத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் ஏ350 விமானம் 18 மணி நேரங்கள் 50 நிமிடங்களில் கடக்கிறது.
உலகின் 2வது நீண்ட விமான வழித்தடத்தையும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் ஏ350 விமானம் தான் கடக்கிறது. சிங்கப்பூர் – அமெரிக்காவில் உள்ள நெவார்க் நகரம் வரையிலான இந்த விமானப் பயணமானது மொத்தம் 15,325 கி.மீ. தொலைவைக் கொண்டதாக உள்ளது. இதனை சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் ஏ350 விமானம் 18 மணிநேரங்கள் 45 நிமிடங்களில் கடக்கிறது.
உலகின் 3வது நீண்ட விமான சேவை ஆஸ்திரேலியாவின் பெர்த் – இங்கிலாந்தின் லண்டன் இடையிலானது ஆகும். இந்த விமான வழித்தடத்தின் மொத்த தொலைவு 14,500 கி.மீ. இந்த தொலைவினை குவாண்டாஸ் ஏர்வேஸின் போயிங் 787 விமானம் 17 மணிநேரங்கள் 15 நிமிடங்களில் நிறைவு செய்கிறது.
உலகின் நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் – அமெரிக்கா வின் டல்லாஸ் வரையிலான விமான பயணம் இணைய உள்ளது. இந்த விமான சேவையை குவாண்டாஸ் ஏர்வேஸ் தனது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் மூலம் வருகிற 2022 டிசம்பர் மாதம் முதல் மேற்கொள்ள உள்ளது. இந்த பயணத்தில் மொத்தம் 14,471 கிமீ தொலைவை குவாண்டாஸ் ஏர்வேஸின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் ஏறக்குறைய 17 மணிநேரங்கள் 35 நிமிடங்களில் கடந்துவிடுமாம்.
உலகின் ஐந்தாவது விமான சேவையை நியூசிலாந்தின் ஆக்லாந்து – நியூயார்க் வரையிலான விமான சேவையை ஏர் நியூசிலாந்து ஏர்லைன் நிறுவனம் அடுத்த 2022 செப்டம்பர் 17ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்தப் பயணம் மொத்தம் 14,207 கி.மீ. தொலைவைக் கொண்டதாக இருக்கும். இந்தத் தொலைவை ஏர் நியூசிலாந்து ஏர்லைன் தனது போயிங் 787 விமானம் மூலமாக 17 மணிநேரங்கள் 50 நிமிடங்களில் நிறைவு செய்ய திட்டமிட் டுள்ளது.
ஆறாவது உலகின் நீண்டதூர விமான சேவையாக எமிரேட்ஸ் ஏர்லைன் நிறுவனம் துபாய் – ஆக்லாந்து இடையேயான பயணத்தைத் தொடங்கவுள் ளது. இந்த விமானப் பயணம் ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த நிலை யில், கொரோனா வைரஸ் பரவலால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது மீண்டும் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. மொத்தம் 14,200 கி.மீ. தூரம் கொண்டதாக உள்ள இந்த விமானப் பயணத்தில் போயிங் 777 விமானத்தை எமிரேட்ஸ் ஏர்லைன் பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விமானம் 14,200 கி.மீ. தூரத்தை 17 மணிநேரங்கள் 10 நிமிடங்களில் கடந்துவிடுமாம்.
ஏழாவது உலகின் அதிக தூரம் பரக்கு விமான சேவையை சிங்கப்பூர் – லாஸ் ஏஞ்சல்ஸ் இடையேயான 14,113 கி.மீ. தொலைவு விமான சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது ஏர்பஸ் ஏ350 விமானத்தின் மூலமாக மேற்கொண்டு வருகிறது. இத்தகைய தொலைவை சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் ஏ350 விமானம் ஏறக்குறைய 17 மணிநேரங்கள் 40 நிமிடங்களில் கடக்கிறது.
எட்டாவது இடத்தில். பெங்களூரு – சான் பிரான்ஸிஸ்கோ வரையிலான 14,003 கி.மீ. பயணத்தை ஏர் இந்தியா ஏர்லைன் நிறுவனம் போயிங் 777 விமானத் தின் மூலமாக மேற்கொள்கிறது. இத்தகைய தொலைவை கடக்க போயிங் 777 விமானத்திற்கு 17 மணிநேரங்கள் 40 நிமிடங்கள் தேவைப்படுகிறது.
ஒன்பதாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் டர்வின் – லண்டன் வரையிலான குவாண்டாஸ் ஏர்வேஸின் விமான சேவை உள்ளது. டர்வின் – லண்டன் இடையிலான 13,872 கி.மீ. தொலைவை இந்த விமானம் 17 மணிநேரங்கள் 55 நிமிடங்களில் கடக்கிறது.
பத்தாவது இடத்தை அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஹூஸ்டன் – ஆஸ்திரேலியாவின் சிட்னி வரையிலான யுனிடெட் ஏர்லைன்ஸின் விமான சேவை பிடித்துள்ளது. மொத்தம் 13,790 கிமீ தொலைவிலான இந்த விமானப் பயணத்தில் போயிங் 787 விமானத்தை யுனிடெட் ஏர்லைன்ஸ் அக்டோபர் 28ஆம் தேதி முதல் ஏற்படுத்தவுள்ளது. ஆனால் தற்போதைக்கு இந்தச் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.