மத்திய அரசு சமீபத்தில் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட பிரபல திரைப்படப் பின்னணி பாடகி வாணி ஜெயராம் சந்தேகத்துக்கு உரிய முறையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 78.
பூட்டிய நிலையில் இருந்த வீட்டில் இறந்துள்ளார். அவர் வீட்டுப் பணிப்பெண் பிற்பகல் வந்து பார்த்தபோது கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. போன் செய்தும் எடுக்கப்படாமலும் இருந்துள்ளது.
காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டு கதவைத் திறந்து பார்த்தபோது அவர் கட்டிலிலிருந்து விழுந்த நிலையில் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. வாணி ஜெயராமன் தலையிலும் காயம் பட்டு ரத்தம் சிந்திய நிலையில் இருந்துள்ளதாக அவர் பணிப்பெண் தெரிவித்தார்.
வேலூரில் 1945ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பிறந்தவர், வாணிஜெயராம் ராணிமேரி கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த கையோடு, பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றினார். அவருடைய இசைத் திறமையை அறிந்த கணவர் ஜெயராம்தான், வாணியை முழுநேரப் பாடகியாக்கினார்.
வாணி ஜெயராம் இந்தியாவிலுள்ள பலமொழிகளிலும் சேர்த்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அபூர்வராகங்கள், சங்கராபரணம் (தெலுங்கு), சுவாதிகிரணம் (தெலுங்கு) முதலான படங்களில் பாடிய சிறந்த பாடல்களுக்காக, மூன்று தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்குப் பாடகியாக அறிமுகமானவர்,
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட விருது சம்பந்தமாகப் பலரது பாராட்டுகளுக்கு செல்போன் மூலம் நன்றி தெரிவித்து வந்திருக்கிறார் வாணி ஜெயராம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஒரு விழவுக்கு சென்று பரிசு பெற்று வந்திருக்கிறார். ஆரோக்கியமான நிலையில் இருந்தவர் திடீரென வீட்டில் யாருமற்ற நிலையில் சென்னை வீட்டில் இறந்து கிடந்தது காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1971-ம் வருடப் புத்தாண்டில் வெளிவந்த ‘குட்டி’ (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசையில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் வாணி ஜெயராம். இவரது முதல் பாடலே அமோக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, பல இசையமைப்பாளர்கள் படங்களில் பாடி முன்னணிப் பாடகியாக உருவெடுத்தார். ஹிந்தியை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குஜராத்தி, ஓடியா, பெங்காலி என 19க்கும் மேற்பட்ட மொழி பாடல்களை பாடி பிரபலமானார்.
‘வீட்டுக்கு வந்த மருமகள்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ முதலான படங்களில் பாடியிருந்தாலும், ‘தீர்க்க சுமங்கலி’ படத்தில் ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ என்ற படமே முதலில் வந்ததால், அதுவே முதல் பாடலானது. மாடர்ன், கர்நாடக இசை, கஜல், பாப், நாட்டுப்புற இசை உள்ளிட்ட பலவிதமான பாடல்களைப் பாடிய பாடகி வாணிஜெயராம் இயற்பெயர் கலைவாணி. ‘பாலைவனச்சோலை’ படத்தில் இவர் பாடிய ‘மேகமே! மேகமே!’ பாடல், இன்றளவும் கேட்பவர்கள் மனதை நெகிழவைக்கக் கூடியது. ‘புனித அந்தோனியார்’ படத்தில் ‘மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்’, ‘தங்கப் பதக்க’த்தில் ‘தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு, இப்படி அவர் பாடிய பாடல்களின் பட்டியல் மிகப் பெரிது.
புட்டபர்த்தி சாய் பாபாவின் தீவிர பக்தையான வாணி ஜெயராமின் திடீர் இறப்பு, மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளது.
அவரது இறப்புச் செய்தியைக் கேட்டு ரசிகர்களும் திரைத்துறையினரும் ஆழ்ந்து வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.