கால்சென்டர் என்கிற பெயரில் தொழில் நடத்துவதாகப் போக்குக் காட்டி இந்தியா முழுவதும் 14 ஆயிரம் பெண்களை நல்ல சம்பளம் தருவதாக ஆசையைக் காட்டி அழைத்துவந்து விபசாரத் தொழில் தள்ளிய கும்பல் வசமாக கால்துறையினரால் மாட்டியுள்ளது.
42 வெளிநாட்டுப் பெண்கள் உட்பட 14 ஆயிரம் இளம் பெண்களை விபசாரத் தொழிலில் அவர்களுக்குத் தெரியாமல் ஈடுபடுத்தி கோடி கோடியாகப் பணம் சம்பாதித்திருக்கிறது ஒரு கும்பல்.
ஏஜென்ட்கள் சில அரசியல் புள்ளிகள் இணைந்து வாட்ஸாப் குழுவை அமைத்து பெங்களூரு மற்றும் அனந்தபூர் நகரத்தில் தலைமையகம் முகவரியை காட்டி பெண்களை அழைத்து இன்டர்வியூ மூலம் வேலைக்கு எடுத்து அங்குதான் கால் சென்டர் நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டு மாதம் 50 ஆயிரம் தருவதாக ஆசை காட்டி வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார்கள்.
பிறகு இவர்களே இந்தியாவில் பல்வேறு இடங்களில் இரவு நேர பார்ட்டி நடத்தி அவர்களும் பார்ட்டிக்கு வருபவர்களுக்கும் போதை பானத்தில் மருந்து கொடுத்து பலவிதமாக போட்டோக்களை எடுத்து பிறகு மிரட்டுகிறார்கள்.
அவர்கள் பணியவில்லை என்றால் கடுமையாக மிரட்டப்படுகிறார்கள். இந்த முறை செய்துவிட்டு அக்ரிமென்ட் முடிந்ததும் அனுப்பிவிடுகிறோம் என்று ஆசை வார்த்தை காட்டி பணியவைக்கிறார்கள்.
இப்படியே இந்தியாவில் மேற்குவங்கம், தில்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து 14 ஆயிரம் இளம் பெண்கள் வேலைக்கு அமர்த்தி விபசாரம் செய்திருக்கிறார்கள். இதில் பாரினிலிருந்த 42 இளம்பெண்களையும் அழைத்து வந்திருக்கிறார்கள். இந்த 14 ஆயிரம் பெண்களுக்கும் போலி ஆதார் கார்டை தயார் செய்து தந்திருக்கிறார்கள். இவர்களுக்கு 30 சதவிகிதம் சம்பளம் மட்டுமே தந்துவிட்டு மீதம் இவர்கள் பாட்கெட்டில் போட்டுக் கொண்டுள்ளார்கள். அதாவது மாதம் 50 ஆயிரம் சம்பளம் தந்துவிட்டு இந்தப் பெண்களை மூன்று ஷிப்ட் வேலை பார்க்கச் செய்திருக்கிறார்கள்.
தெலுங்கானாவின் பேகம் பேட்டையை சேர்ந்தவர் முகமது சல்மான்கான்.. சமீர் என்று இவருக்கு இன்னொரு பெயர் உண்டு.. இவர் முதன்முதலில் ஒரு ஹோட்டலில் சப்ளையராக வேலைக்கு சேர்ந்துள்ளார்..
அப்போதுதான், விபச்சார கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், அதே ஹோட்டலில் தங்குவதை கவனித்து வந்துள்ளார்.. அந்த பெண் சுலபமான வழியில் பணத்தை சம்பாதிப்பதையும் கவனித்துள்ளார்..
இதை பார்த்ததும் சமீருக்கும் பணம் சம்பாதிக்க ஆசை வந்துவிட்டது.. ஏற்கனவே போதைப்பொருள் பழக்கம் உள்ளவர் சமீர்.. இதனால் தினமும் அவருக்கு போதை பொருளும் தேவையாக இருந்தது.. இதற்காகவே, போதைப்பொருள் விற்பனை செய்யும் ஆர்னவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.. இவர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து, சோமாஜி கூடா பகுதியை மையமாக கொண்டு, விபச்சார விடுதியை நடத்து துவங்கி உள்ளனர். பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் இதற்கான பிராஞ்ச்சை ஆரம்பித்தனர்.
இதற்காகவே, ஒரு வாட்ஸ்அப் க்ரூப்பையும் உருவாக்கினார்கள்.. அதில், மொத்தம் 17 பேரை முக்கிய அமைப்பாளர்களாக நியமித்தனர்.. இந்த 17 பேருமே வேறு வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள்.. அந்தந்த மாநிலத்தில், தனித்தனி ‘வாட்ஸ் அப்’ க்ரூப்கள் இந்த 17 பேர் தலைமையில் நடக்கும்.. ஆனால், 17 பேரின் கன்ட்ரோலும் அமீரிடம் இருக்கும்.. அந்த 17 பேரின் வாட்ஸ்அப் குரூப்களில் தலா 300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்… இவர்கள் மூலம் மொத்தம் 14 ஆயிரத்து 190 பெண்கள் இணைந்து விபச்சார விடுதிகளை நடத்தியுள்ளனர்…
இதனால் நாடு முழுவதும் இவர்களது ஹைடெக் விபச்சார தொழில் கொடிகட்டி பறந்துள்ளது.. 14 ஆயிரத்து 190 பெண்களில் பெரும்பாலும், அப்பாவி பெண்கள் மாட்டிக்கொண்டனர்.
இந்தத் தகவல் காவல் துறையின் காதுகளுக்கு ரொம்பத் தாமதமாகவே போயிருக்கிறது. காவல் துறையினர் வேகமாகச் செயல்பட்டு மாறுவேடத்தில் சென்று முதல் கட்டமாக 20 குற்றவாளிகளைக் கைது செய்திருக்கிறார்கள். இன்னும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.
காவல்துறை ஐபிஎஸ் அதிகாரி மு.ரவி இதுபற்றிக் கூறும்போது, “இவர்கள் பெரிய சமூக விரோதிகள். பல ஆண்டுகளாக இரவு நேர விருந்து நடத்துவதாக அங்கீகாரம் வாங்கிக்கொண்டு இப்படி இல்லீகல் செயலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நல்ல சம்பளம் வேலை தருவதாகக் கூறி ஏமாற்றும் சமூக விரோதிகளை பிடித்திருக்கிறோம். இன்னும் இதுபற்றி மேலும் ஆய்வு நடந்து வருகிறது. பாதிப்பட்ட 14 ஆயிரம் பெண்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதனால் சந்தேகம் தரும் நபர்கள் ஊர்விட்டு ஊர் போகும் அறியாத நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்” என்றார்.
பெண்களே இனி வேலை வாய்ப்பு என்றால் முழுவதும் தீர ஆராய்ந்த பின்னே பணியில் சேருங்கள்.