ஸ்மார்த்த பிராமணர்கள் (பார்ப்பான்) வேதங்களின் சனாதன வர்ணாசிரம கொள்கைகளில் வாழ்பவர்கள். வீரசைவர்கள் சிவ ஆகம முறைப்படி சாதி வேறுபாடின்றி வாழ்பவர்கள்.
சிவலாயங்களில் சிவதீட்சை பெற்ற வீரசைவ சிவாச்சாரியர்களே பூசை செய்ய வேண்டும் என்பது ஆகம விதி. வந்தேறி திருமலை நாயக்கன் காலம் வரையில், சிவதீட்சை பெற்ற அபிசேக பண்டாரங்கள் அல்லது லிங்கத்தார் (எ) லிங்கம் கட்டி பண்டாரங்களே சிவாச்சாரியார்களாக சிவாலயங்களில் பணி செய்து வந்துள்ளனர். வடமாநிலங்களில் இந்த அபிசேக பண்டாரங்களை ஆராத்ய பிராமணர் என்று அழைப்பார்கள். வீரசைவத்தைச் சார்ந்த இந்த ஆராத்ய பிராமணர்கள்தான் வட மாநில சிவாலயங்களில் இன்றும் பூசைத் தொழில் செய்பவர்கள். ஆனால் தமிழ்நாட்டில் பல சிவாலயங்களில் வீரசைவர்கள் வெளியேற்றப்பட்டு ஸ்மார்த்த பார்ப்பான்கள் பூசை செய்கின்றனர்.
தமிழகத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் வகையாறக்களான இந்த ஸ்மார்த்த பார்ப்பான்கள் ஆலயங்களில் வேள்விகள் செய்ய மட்டுமே தகுதியுடையவர்கள். கோவிலின் கெடிக்கம்பத்தைத் தாண்டி கருவறைக்குள் சென்று பூசை செய்ய எந்த விதியும் ஆகமத்திலும் குறிப்பிடப்படவில்லை.
ஆகம முறைப்படி கட்டப்பட்ட சிவாலயங்களில், எந்த ஒரு சிவ தீட்சையும் பெறாமல், ஆகமத்திற்கு எதிராக வேதத்தை ஓதி இந்த ஸ்மார்த்த பார்ப்பானர் பூசை தொழிலை செய்வது எவ்வளவு முறைகேடான செயல் என்பதை வீரசைவர்கள் நன்கு உணர வேண்டும்.
தமிழகத்தில் வீரசைவர்களைக் கடந்த 400 ஆண்டுகளாக வந்தேறி நாயக்கர் மன்னர்களின் காலத்திலிருந்து ஒடுக்கப்பட்டு, பண்டாரம் என்றால் கேலியான பெயராக மாற்றி, வீரசைவர்களைத் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கச் செய்திருக்கின்றனர்.
பழநியில் போகர் செய்துவைத்த தண்டாயுதபாணி முருகன் சிலையைத் தொட்டு பூசை செய்யத் தகுதியானவர்கள் அவருடைய சீடரான நம் முப்பாட்டன் புலிப்பாணி சித்தரும் அவருடைய சந்ததியினரும்தான் என்று போகர் சித்தரே அந்தப் பொறுப்பை வீரசைவர்களான பண்டாரங்களுக்குக் கொடுத்துவிட்டு முக்தியடைந்தார். ஆனால் வந்தேறி திருமலை நாயக்கன் ஆதரவுடன் பழநி கோவிலிலிருந்து பண்டாரங்களை வெளியேற்றிவிட்டு பார்ப்பானர்கள் 400 ஆண்டுகளாக சித்தர்கள் ஏற்காத தமிழ்க் கடவுளான முருகனுக்கு சமஸ்கிருதத்தில் பூசை செய்கின்றனர்.
1623ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிளிக்கூண்டு கோபுரத்தையும் மண்டபத்தையும் கட்டியவர் அபிசேக பண்டாரம்.
1659ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பேச்சியக்காள் கோபுரத்தையும் மண்டபத்தையும் கட்டியவர் பிட்டு சொக்க பண்டாரம்.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வாழும் வீரசைவர்கள் சொக்கர்-மீனாட்சி சின்னத்தையே தாலியாகக் கட்டுகின்றனர்.
மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அபிஷேக சிவதீட்சை பெற்ற அபிசேக பண்டாரங்களே பூசை மற்றும் தம்பிரான் பணிகள் செய்து வந்தனர். ஆனால் அதே வந்தேறி திருமலை நாயக்கன் ஆதரவுடன் வீரசைவ சிவாச்சாரியார் வெளியேற்றப்பட்டு ஆகம விதிக்கு எதிராக எந்தவொரு சிவ தீட்சையும் பெறாமல் பார்ப்பானர்கள் கடந்த 400 வருசமாக மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் பூசை செய்து வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களிலும் சிவ தீட்சை பெற்ற வீரசைவ ஜங்கமர்களே சிவாச்சாரியார்களாக உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் ஜோதிர்லிங்கமான இராமேஸ்வரத்தில் மட்டும் வீரசைவர்கள் வெளியேற்றப்பட்டு பார்ப்பானர் பூசை செய்கின்றனர். நம் முப்பாட்டன் இலங்கையை ஆண்ட மாமன்னர் பரராசசேகர பண்டாரம் திருகோணமலையிலிருந்து கற்களைக் கொண்டுவந்து கட்டிய இராமேஸ்வரம் கோவிலில் வீரசைவர்களான பண்டாரங்களுக்கு இடமில்லை என்பது எவ்வளவு பெரிய அடக்குமுறை என்பதை வீரசைவர்கள் நன்கு உணரவேண்டும்.
தமிழ்நாட்டில் வீரசைவ பண்டாரங்களுக்கு எதிராகக் காட்டிய குள்ளநரித் தனத்தை ஆந்திர மாநிலத்தின் வீரசைவர்களிடம் பார்ப்பனர்கள் காட்டியிருக்கிறார்கள். அதாவது ஜோதிர்லிங்கமான காளகஸ்தி கோவிலில் காலங்காலமாக பூசை செய்துவருவது வீரசைவத்தின் ஜங்கமர்கள். பிராமண சனாதன தர்மத்தின்படி ஜங்ககமர்கள் தாழ்தத்தப்பட்டவர்கள், தீண்டதகாதவர்கள். அதனால் அந்த ஆலயத்தை பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஆனால் நீதிமன்றம் பிராமணர்களைவிட வீரசைவ சிவாச்சாரியார்கள் உயர்ந்த நிலையில் வாழும் சிவனடியார்கள், எனவே வீரசைவ சிவாச்சரியார்களே கோவிலில் பூசை செய்வது சரியானது என்று தீர்ப்பைக் கொடுத்து பார்ப்பனர்களின் முகத்தில் கரியை பூசியது.
இப்போதாவது புரிகிறதா வீரசைவர்களே..!
பார்ப்பானரும் அவர்களுடைய சனாதன தர்ம வர்ணாசிரம குள்ளநரித்தனமும்.
இந்து மதம் என்ற போர்வையில் தங்களுடைய சனாதன வர்ணாசிரம கொள்கைகளைப் புகுத்தி, பண்டாரம் என்ற சொல்லையே இழிவான சொல்லாக மாற்றி, வீரசைவர்களின் பல வேலை வாய்ப்புகளைப் பறித்துக்கொண்டு, பார்ப்பன குடும்பங்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள். வீரசைவத்திற்கென்று தனி ஆகமங்கள் கோட்பாடுகள் இருக்கும்போது, பார்ப்பனனின் சனாதன வர்ணாசிரம கொள்கைகளை நாம் உயரத்திப் பிடிக்கவேண்டிய அவசியம் நமக்கு இல்லை.
இந்து மதம் என்ற போர்வையில் பார்ப்பனரின் சனாதான தர்மத்தின் கேவலமான செயல்களை வீரசைவர்கள் இனியாவது உணர வேண்டும். நாம் இந்துவாக இருப்பதைவிட வீரசைவர்களாக இருப்பதே ஆயிரம் மடங்கு நல்லது என்று எப்போது நமது வீரசைவ மக்கள் உணர்கிறார்களோ, அன்றுதான் நமக்கான விடிவுகாலம் பிறக்கும்.
பண்டாரம் பூசாரி்கள் (வீரசைவர்கள்)
பண்டாரம் பிரிவினர் தமிழர்கள்தான். தமிழர்களில் இருந்து உருவான ஒரு இனக்குழு என்றே சொல்லலாம்.
பண்டாரம் பூசாரிகளை ஆலயங்களில் இருந்து வெளியேற்றுதல் என்பது ராஜராஜன் காலத்திலே ஆரம்பித்துவிட்டது.
சைவ சமயத்தைப் பொறுத்தவரை ஆகமம் தாந்த்ரீகம் என்று இருபிரிவுகள் இருந்தது. ஆரம்ப காலங்களில் தாந்த்ரீக வழிபாடுகள் மட்டுமே பெரும்பான்மையாக இருந்தது. இந்த வழிபாடுகளில் விலங்கு பலியிடுதல் என்பது முக்கிய அம்சமாக இருந்தது. இதன் பூசாரிகள் பைரவ வழிபாடுகள் செய்யும் கபாலிகா, காளாமுக, மஹாவிரத போன்ற சைவ பிரிவினராக இருந்தனர்.
பைரவர் என்பது கொற்றவையின் ஆண் வடிவம் என்றும் அழைப்பார்கள். பலியிடும் வழக்கம் கொண்டிருந்த தாந்த்ரீக வழிபாட்டை ஆகமவழி மக்கள் வெறுத்து ஒதுக்கவே, ஆகம சைவத்திற்கு மக்கள் ஆதரவு கொடுக்க ஆரம்பித்தனர். ராஜராஜன், காந்தளூர் சாலையை அழித்து, பல பெருங்கோவில்களை தாந்த்ரீக வழிபாடுகளில் இருந்து ஆகம வழிபாடுகளுக்குக் கொண்டுவந்தார். அவர் கட்டிய தஞ்சை பெரிய கோவிலும் பாசுபத சைவத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட ஆகம கோவில்களாகும். இதற்குக் காரணம் ராஜராஜனின் ராஜகுருவாக இருந்த லகுலீச சிவன் பண்டிதர் ஆவார். இவர் ஒரு பாசுபத சைவர். பிராமணர் கிடையாது. இந்தக் கோவிலில் பூசாரிகளாகப் பிராமணர்களை நியமித்தார். அதற்கு முன்னர் பூசை செய்த பண்டாரங்களை தேவாரம், திருவாசகம் பாடும் ஓதுவார்களாகவும், கோவிலை நிர்வாகம் செய்யும் தம்பிரான்களாவும் (தர்மகர்த்தாக்கள்), ஆதீனங்களாகவும் நியமித்தார். இதனால் சைவ சமயத்தில் பண்டாரங்களின் செல்வாக்கு மேலும் கூடியதே தவிர குறையவில்லை. மேலும் சோழர்களின் காலத்தில், பலியிடுதல் அறவே இல்லாத, தாந்த்ரீகம் அடிப்படையிலான சில காபாலிகப் பெருங்ககோவில்கள் கட்டியுள்ளனர். (உதாரணம் – சென்னையின் கபாலீஸ்வரர் கோவில், சென்னை பாடியில் உள்ள திருவலிதாயம் கோவில்)
பின்னர் நாயக்கர் ஆட்சிக் காலங்களில், பழனி மட்டும் அல்ல, பல தாந்த்ரீக அடிப்படையிலான பெருங்கோவில்களில் இருந்தும் பண்டாரம் வெளியேற்றப்பட்டு, பிராமணர்களை நியமித்தனர். நாயக்கர் ஆட்சி காலம் வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களில் பூசை / நிர்வாகம் செய்து வந்தவர்கள் அபிஷேக பண்டாரம் என்ற பிரிவினர்தான். திருமலை நாயக்கன், மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து அபிஷேக பண்டாரங்களை வெளியேற்றிவிட்டு பிராமணர்களை பூசர்களாகவும், வைஷ்ணவரான தன்னையே கோவில் தர்மகர்த்தாவாகவும் நியமித்துக்கொண்டார். இதற்கு சைவர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்ப்பும் கொடுத்தனர். இதற்கான சான்று பெரியார் ஈ.வெ.ரா. நடத்திய ‘குடியரசு’ இதழில் வௌயாகி உள்ளது.