கவிதைகளில் விருப்பமுள்ளவர்கள் கவிதைகளை எப்படி திரைப்பட பாடலாக்குவது, நகரச் சூழலில் இருக்கும் கவிஞர்கள், கிராமச் சூழலை எப்படி பாடாலாக்குவது என்பன போன்ற கேள்விகளோடு பாடலாசிரியர் ஏகாதசியை சந்தித்தனர்.
அவர்களோடு சந்தித்து உரையாடிய ஏகாதசி, கவிதைகளை பாடலாக்கும் யுக்திகளை எளிதாக்கி புரியும்படி கூறினார்.
கவிதையும் கதையும் தன்னியில்பில் சொற்களை வைத்துக்கொள்கின்றன.
பாடல்கள், இசைச் சொற்களை தன் மாலையின் கண்ணிகளாக கோருகின்றன என்று சொன்ன ஏகாதசி,
சாமனியர்களிடமும் இசைச் சொற்கள் இருக்கின்றன என்பதை,
“ஆடு வயித்துக்கு மேஞ்சிருக்கு
மாடும் வயித்துக்கு மேஞ்சிருக்கு
ஆட்டையும் மாட்டையும் மேய்ச்சவென் வயிறு
ஆல எல போல காஞ்சிருக்கு”
என்கிற நாட்டுப்புறப்பாடலை எடுத்துக் கூறி விளக்கினார்.

இதில்
கவிஞர் கு.பீக்கையா,
சிவா,தீனா,சண்முகம்,கார்த்திகேயன்,சசிகுமார், அருண்குமார், லட்சுமிநரசிம்மன், சாந்திப்ரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் நிறைவாக த.மு.எ.க.ச.வடபழனி கிளை கவிஞர்களின் கூட்டுத் தொகுப்பான ‘வனமல்லி’ எனும் கவிதை நூல் வெளியிடப்பட்டது.
