அவன் நிரந்தரமானவன் அழிவதில்லை || கவிஞர் இரா.இரவி

2 0
Spread the love
Read Time:3 Minute, 51 Second

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து

எட்டாத உயரம் உயர்ந்தவன் நீ

கவியரசு பட்டத்திற்கு முற்றிலும்

குவலயத்தில் பொருத்தமானவன் நீ

நான் நிரந்தரமானவன் என்று அறிவித்து

நிரந்தரமாக மக்கள் மனதில் நிலைத்தவன் நீ

உன் பாடல் ஒலிக்காத வானொலி இல்லை உலகில்

உன் பாடல் ஒலிக்காத வானொலியே இல்லை

ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினரும்

அன்போடு ரசிக்கும் பாடல் உன் பாடல்

எனக்குப் பிடித்த மதம் தாமதம் என்றுரைத்து

சினம் கொண்ட அவையைச் சிரிக்க வைத்தவன் நீ

படைத்தவன் யார் என்பது முக்கியம் அல்ல

படைப்பைப் பாருங்கள் என்று அறிவுறுத்தியவன் நீ

உனக்கு இணையான ஒரு கவிஞன்

உனக்கு அடுத்து யாருமில்லை என்பதே உண்மை

உனக்கு நிகர் நீ மட்டுமேதான்

உன்னை விஞ்சிட எவருமில்லை உலகில்

தொகை குறிப்பிடாத காசோலை தந்தபோதும்

தொகை குறிப்பிட ஆசைப்படாதவன் நீ

பணத்திற்காக ஏங்கும் இந்த உலகில்

பணத்திற்காக ஏங்காத நல்லவன் நீ

செருக்கோடு இருந்த திரை உலகில் பலரின்

செருக்கை அகற்றிய கவிஞன் நீ

கண்ணதாசனே உன் இயற்பெயர் முத்தையா

கற்கண்டென நீ வடித்த பாடல்கள் தமிழின் சொத்து ஐயா

எங்கு நீ கற்றாய் இத்தனை வித்தை

இனிய பாடல்கள் பதிந்து மனதில் விதையாக

காலத்தால் அழியாத கல்வெட்டு வரிகளை

காற்றினில் விதைத்த சகலகலா வல்லவன் நீ

நீ குடித்துவிட்டு எழுதியதாக அறியாதவர்கள் உளறினார்

நீ குடித்துவிட்டு எதையும் எழுதவில்லை அறிந்தவர்கள் சொன்னார்கள்

மகாத்மா காந்தியடிகளின் சத்தியசோதனை போல

மன வாசம் வீசும் ரகசியம் இல்லா வனவாசம் படைத்தாய்

அத்திப் பூத்தது போல அதிசயமாகப் பூத்த கவிஞன்

அன்பில் குழந்தை போல உள்ளம் கொண்டவன் நீ

வானில் இருந்துவந்த தேவ தூதன் நான் என்று சொல்லாதவன்

மண்ணில் இருந்து பிறந்து மண்மக்களுக்காகப் பாடியவன் நீ

மது குடிக்க உரிமம் கேட்டு நீ விண்ணப்பித்தபோது

மறுத்தார் கக்கன்ஜி தமிழ் வாழ வேண்டும் என்பதற்காக

மது மட்டும் நீ குடிக்காமல் வாழ்ந்து இருந்தால்

மதுர கவி இன்னும் பல்லாயிரம் பாடி இருப்பாய்

இயேசு காவியம் எழுதிய காலங்களில் நீ

மிகத் தூய்மையாக இருந்ததாகப் பேராயர் கூறினார்

முன் பாதியில் உனக்கு இணையான நாத்திகன் இல்லை

பின் பாதியில் உனக்கு இணையான ஆத்திகன் இல்லை

சிறு கூடல்பட்டி என்ற சிற்றூரில் பிறந்த நீ

சிகாகோ வரை புகழ் பல பெற்றாய்

உன் பாடல் இல்லை என்று பொய் உரைத்தபோதும்

உன் பாடல்தான் என்று அறுதியிட்டார் மக்கள் திலகம்

உடலால் உலகை விட்டு மறைந்த போதும்

பாடலால் மக்கள் மனங்களில் வாழ்பவன் நீ

உலகம் உள்ளவரை தமிழ் மொழி நிலைக்கும்

தமிழ் மொழி உள்ளவரை உன் புகழ் நிலைக்கும்

கவிஞர் இரா.இரவி

Happy
Happy
50 %
Sad
Sad
0 %
Excited
Excited
50 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!