என்றும் வாழ்வார் வாலி || கவிஞர் இரா.இரவி

0 0
Spread the love
Read Time:2 Minute, 50 Second

ஓவியம் வரையும்  ரங்கராஜன் என்ற பெயரை

ஓவியர் மாலிபோல வரைய வாலியானார்!

ஓவியத்தில் உயர் புகழ் அடையாவிட்டாலும்

கவிதையில் ராஜனாக உயர்ந்தார் வாலி! 

திருப்பராய்த்துறை பிறந்து திருவை அடைந்த வாலி

திருவரங்கத்திற்குப் பெருமைகள் சேர்த்த வாலி!

மயக்கமா கலக்கமா கவியரசு பாடல் கேட்டு வாலி 

மறுபரிசீலனை செய்து சென்னை தங்கிய வாலி! 

சொல் விளையாட்டில் வார்த்தைச் சித்தர் வாலி!

சொக்க வைக்கும் பாடல்களின் ஆசிரியர் வாலி!

பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிக் குவித்த வாலி!

பல்லாண்டுகளாய் திரையில் நிலைத்த நின்ற வாலி!

வாலிபனைப் போலவே என்றும் எழுதிய வாலி!

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆர்.!

உன் பெயர் பெயர் இடம் பெறாது என்றதும் வாலி

உலகம் சுற்றும் பன் என்று பெயர் மாற்றவேண்டும்!

உங்களுக்குச் சம்மதமா என்று கேட்ட வாலி

உடன் சிரித்து  ரசித்த உயர்ந்த மனிதர் எம்.ஜி.ஆர்.

எம் .ஜி .ஆருக்கு நான் ஆணையிட்டால் என்று  எழுதி

எம்.ஜி.ஆரை ஆணையிடும் பதவிக்கு வர வைத்த வாலி!

மல்லிகை என் மன்னனை  மயக்கும் என்று  எழுதி

மதுரை மல்லிக்கு மங்காப் புகழ் சேர்த்த வாலி!

தனி ஈழத்திற்காகவும் கவிதைகள் வடித்த வாலி

தனிக் கவிதைகளிலும் முத்திரைப் பதித்த வாலி! 

பாடல் கவிதை கதை கட்டுரை வடித்த  கவிஞர் வாலி

படைப்புகளில் என்றும் வாழ்வார் மரணம் இல்லை!

ஓய்வறியா உழைப்பாளி உரத்த சிந்தனையாளர் வாலி!

ஒப்பற்ற கவிதைளை வடித்துத்  தந்தவர் வாலி!

கவியரங்கங்களில்  தலைமை வகித்தவர் வாலி!

கை தட்டல்களைப் பரிசாகப்  பெற்றவர் வாலி!

கண்ணதாசனை தாடி இல்லா தாகூர் என்றார் வாலி!

கற்பனைக் கவியால் தாடி உள்ள  தாகூர் ஆனார் வாலி!

கண்ணதாசனை  மீசை இல்லா பாரதி என்றார் வாலி!

கற்கண்டுக் கவியால் மீசை உள்ள பாரதியானார் வாலி! 

படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி 

மரணம் இல்லை! மரணம் இல்லை! மரணம் இல்லை!

கவிஞர் இரா.இரவி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!