Read Time:34 Second
தேசிய நெடுஞ்சாலை
இமயம் முதல்
குமரி வரை
சலசலப்பு இல்லாமல்
ஓடி வரும்
கடலில் கலக்காத
கருப்பு ஆறு.
மின் கம்பங்கள்
மின்சார வாரியத்தால்
மண் மீது நடப்பட்ட
வேரற்ற மரங்கள்.
விடியல் பறவைகள்
விளக்கக் கூட்டம் போடும்
விவாத மேடைகள்.
பனித்துளி
ஊரெல்லாம்
குளிரில் நடுங்க
புல்லுக்கு மட்டும் வியர்த்தது.
கவிஞர் பொன்.பனகல் பொன்னையா