
Read Time:50 Second

மழைக்காலக்
காளான்கள்,
சிறகு முளைத்த
ஈசல்கள்!

உபதேசம்,
மரம் நடுவோம்
மழை பெறுவோம் என்று
நாலு மணி நேரம் சொற்பொழிவு ஆற்றினார்
விறகு கடை வியாபாரி!

பூமி,
கடல் அகழிகையால்
சூழப்பட்ட
நில அரண்மனை!

தென்னை,
வேருக்கு
நீரூற்றிய விவசாயிக்கு
நன்றிக்கடன் செலுத்தியது
இளநீர்!

நிற்கும் மின்விசிறி,
மின்சாரம் தொட்டதால்
கூட்டுக்குள்
சிறகடிக்கும் பறவை!

வெங்காயம்,
மனித வாழ்வின்
தத்துவ வெளிப்பாடு!

அலைகள்,
கடல் மணலை
கரை சேர்க்கும்
ஓய்வறியா உழைப்பாளிகள்!

-கவிஞர் பொன். பனகல் பொன்னையா
Post Views:
844
கடல் அகலிகையால் சூழப்பட்ட நில அரண்மனை என்று பூமி என்ற தலைப்பிலான கவிதை எமக்கு புரியவில்லை
அகலிகை என்றால் என்ன அர்த்தம்
விளக்கம் சொல்லவும்
Peaceful to read
Peaceful to read