தமிழன் அன்றும் இன்றும்!  | – கவிஞர் இரா.இரவி     

1 0
Spread the love
Read Time:4 Minute, 29 Second

குளிரால் நடுங்கிய மயிலுக்கு இரக்கக்

குணத்துடன் போர்வை வழங்கிய பேகன் ஒரு தமிழன்!

முல்லைக் கொடிப் படர, பயணித்தத் தேரை 

மனம் உவந்து வழங்கிய பாரி ஒரு தமிழன்!

ஆராய்ச்சி மணி அடித்த பசுவுக்கு

அன்புடன் நீதி வழங்கிய மனுநீதிச் சோழன் ஒரு தமிழன்!

சந்தோசம் இழந்து தவித்த புறாவிற்குச்

சதையை அறுத்துத் தந்த சிபிசக்கரவர்த்தி ஒரு தமிழன்!

தமிழ், தமிழர் என்ற சொற்களின்றியே உலகப்பொதுமறையாக்கி

தமிழுக்குப் பெருமை சேர்த்த திருவள்ளுவர் ஒரு தமிழன்!

நூற்றாண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கும் கல்லணை

நிறுவி இன்றும் நிலைத்து நின்ற கரிகாலன் ஒரு தமிழன்!

உலகம் வியக்கும் வண்ணம் சிற்பங்களுடன் மதுரையில்

உன்னத மீனாட்சி கோவில் கட்டிய பாண்டியன் ஒரு தமிழன்!

கோபுரத்தின் நிழல் விழாமல் பெரிய கோவிலைக்

கட்டி எழுப்பிய இராஜராஜ சோழன் ஒரு தமிழன்!

தவறான நீதி கோவலனுக்கு வழங்கியதற்காக

தன் உயிரையே மாய்த்த பாண்டியன் ஒரு தமிழன்!

முரசுக்கட்டிலில் அயர்ந்து உறங்கிய புலவர்க்கு

மன்னன் சாமரம் வீசிக் காற்று வழங்கியது ஒரு தமிழன்!

நடிகைக்குக் கோவில் கட்டி மோசமான வரலாறு படைத்து 

நாட்டிற்குத் தலைக்குனிவைத் தந்தவன் ஒரு தமிழன்!

அரிதாரம் பூசும் நடிகரை எல்லாம் கடவுள் என்றும்

அவதாரப் புருசன் என்றும் அழைப்பவன் ஒரு தமிழன்!

நடிகரின் கட்அவுட்டிற்கு பாலபிசேகம் செய்து மகிழும்

ரசிகனும் இன்றைய ஒரு தமிழன்!

திரையரங்கில், பிடித்த நடிகரின் திரைப்படம் பார்க்கும்போது

திரையரங்கிலேயே சூடம் ஏற்றிக் காட்டுபவனும் ஒரு தமிழன்!

பிடித்த நடிகரின் திரைப்படம் வெளிவராததற்காகப்

பிடித்த உயிரையே மாய்த்தவன் இன்றைய ஒரு தமிழன்!

தொல்லைக்காட்சியாகிவிட்ட தொலைக்காட்சியில் நேரத்தைத்

தொலைத்துவிட்டு வாடி நிற்பவனும் ஒரு தமிழன்!

மதுக்கடையில் மதுக் குடித்து மயங்கி

மண்ணில் விழுந்தக் கிடப்பவனும் ஒரு தமிழன்!

ஆங்கிலவழிக் கல்வியில் பயின்று முடித்துவிட்டு

அன்னைத் தமிழில் பேச வராது என்பவனும் ஒரு தமிழன்!

தந்தையின் பெயரான முன்எழுத்தை  ஆங்கிலத்திலும்

தன் பெயரைத் தமிழிலும் எழுதுபவன் ஒரு தமிழன்!

பேசுகின்ற பேச்சில் ஆங்கிலச் சொற்களைக்  கலந்து

பைந்தமிழைக் கொலை செய்து வருபவனும் ஒரு தமிழன்!

தாய்மொழி தமிழில் பேசத் தெரிந்தும் அரைகுறையாகத்

தமிழர்களிடையே ஆங்கிலத்தில் பேசுபவனும் ஒரு தமிழன்!

தன்னம்பிக்கையின்றி மூடநம்பிக்கையான சோதிடத்தை நம்பி

தன்மானம் இழந்து ஏமாந்து வருபவனும் ஒரு தமிழன்!

பித்தலாட்டக்காரன் என்று தெரிந்தே சாமியாரிடம்

பணத்தைப் பறிகொடுப்பவனும் ஒரு தமிழன்!

வந்தவர்களை எல்லாம் வலமாக வாழ வைத்துவிட்டு

வாழ்க்கையைத் தேடிப் புலம்பெயர்பவனும் ஒரு தமிழன்!

பசித்திருக்கும் தாய் தந்தை மறந்து கோவிலில்

பணத்தைப் போடுபவனும் ஒரு தமிழன்!

தமிழினத்தை ஈழத்தில் படுகொலைகள் செய்தபோதும் 

தமிழகத்தில் வேடிக்கைப் பார்த்தவனும் ஒரு தமிழன்!

தமிழனின் நிலையை அன்றும் இன்றும் பாருங்கள்

தமிழா உன் நிலையை மாற்று! தமிழரின் பெருமையை நிலைநிறுத்து! 

கவிஞர் இரா.இரவி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “தமிழன் அன்றும் இன்றும்!  | – கவிஞர் இரா.இரவி     

  1. I was pretty pleased to find this great site. I want to to thank you for ones time just for this fantastic read!! I definitely really liked every little bit of it and I have you book-marked to see new stuff in your blog.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!