நாட்டின் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீர்ராகத் திகழ்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். அன்னாரது நினைவு நாள் இன்று. அவரது பிறந்த நாளை ஒட்டி மேற்கு வங்காளம், கொல்கத்தாவில் உள்ள சகித் மினார் மைதானத்தில் நடக்கிற விழாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தலைவர் மோகன் பகவத் கலந்துகொள்கிறார். அதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சுபாஷ் சந்திரபோசுக்கு விழா கொண்டாட இருக்கிறது.
இதையொட்டி ஜெர்மனியில் உள்ள நோதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மகள் அனிதா போஸ், தொலைபேசி வழியாகச் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். அதில் “அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்கிற நேதாஜியின் போதனையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பா.ஜ.க.வும் பிரதிபலிக்கவில்லை. நேதாஜி பக்தியான இந்துவாக இருந்தபோதிலும் பிற மதங்களை மதிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். பல்வேறு பதங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில் அபூர்வமான ஒத்துழைப்புக்கு அவர் ஆதரவாக இருந்தார். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வும் வலதுசாரிகள், நோதாஜி ஒரு இடதுசாரி. இரு கொள்கை மதிப்புகளும் ஒத்துப்போகாது.
நேதாஜியின் கொள்கைகளையும் லட்சியங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. விரும்பினால் அது நிச்சயம் நல்லதுதான். நேதாஜியின் பிறந்த நாளை பல தரப்பினரும் பல்வேறு விதமாகக் கொண்டாட விரும்புகிறார்கள். அவர்களில் பலரும் அவரது கருத்துக்கள் மற்றும் கொள்கைகளுடன் உடன்படுகிறார்கள்.
நேதாஜி இன்று உயிருடன் இருந்திருந்தால் அவர் மத்திய அரசின் மீதான பார்வையில் இருந்து மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தால் பா.ஜ.க. அவரை கௌரவித்திருக்காது. எனவே இந்த விஷயத்தில் அவர்களின் நலன்தான் நிறைவேறும். சித்தாந்தம் என்று பார்த்தால் நாட்டில் உள்ள வேறு எந்தக் கட்சியையும்விட காங்கிரஸ் கட்சிக்குத்தான் நேதாஜியுடன் நிறைய ஒற்றுமைகள் உள்ளன” என்றார் நேதாஜியின் மகள்.
நேதாஜி பிறப்பும் சேவையும்
1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் நாள் வங்காள மாநிலத்தில் பிறந்த சுபாஷ் சந்திர போஸ், தனது 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறி துறவற பாதையில் செல்ல விரும்பினார். பின்னர், ஞான மார்க்கத்திற்கு ஏற்ற குரு கிடைக்காததால் தந்தையின் வேண்டுகோளை ஏற்று, 1915 ஆண்டு கொல்கத்தா மாநில கல்லூரியில் சேர்ந்தார். அங்கு ஆங்கில வரலாற்று ஆசிரியர் ஓட்டனுடனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சுபாஷ் மற்றும் அவரது நண்பர்கள் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.
1917 ஆம் ஆண்டு இசுக்காட்டிய சர்ச் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின் 1920-ல் இந்திய குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால் தன் நாட்டை அடிமைப்படுத்தி ஆட்சி செய்யும் ஆங்கிலேயரிடம் வேலை பார்க்கக் கூடாது என தனது பதவியை ஏற்க மறுத்திவிட்டார்.
1921ஆம் ஆண்டு இந்தியவுக்குத் திரும்பிய பின் காந்தியைச் சந்தித்தார். பின் சி.ஆர்.தாஸுடன் சேர்ந்து பாணியாற்றத் தொடங்கினார். 1922ஆம் ஆண்டு ஆங்கிலேய இளவரசர் வேல்ஸ் இந்தியாவுக்கு வருகையையொட்டி சுபாஷ் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.
ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்தபோது, போராட்டத்தை காந்தி பாதியில் நிறுத்தியதால் சித்தரஞ்சன் தாஸ், போஸ் உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனால் புதிதாக சுயாட்சி கட்சியை தாஸ் உருவாக்கினார். ஜாலியன் வாலாபாக படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரை உத்தம் சிங் கொன்றதற்கு, காந்தி கண்டித்தார். ஆனால் இனப் படுகொலையை பாராட்டி சுபாஷ் சந்திர போஸ் கடிதம் அனுப்பினார். இச்சம்பவம் காந்தி மற்றும் போஸ் இடையே இருந்து விரிசலை அதிகபடுத்தியது.
காந்தியுடனான மோதல் போக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து சுபாஸ் சந்திரபோசும் நேருவும் இணைந்து விடுதலை சங்கம் என்ற இயக்கத்தை நடத்தினர். மேலும் பார்வர்ட் என்னும் இதழில் விடுதலை உணர்ச்சிகள் குறித்து எழுத ஆரம்பித்தார். பின் சில காலங்களுக்கு பின் சுயராஜ்ஜிய கட்சியை காங்கிரசுடன் இணைத்து பிரச்னைகளை காந்தி முடித்து வைத்தார்,
இரண்டாவது உலகப் போரின்போது, இந்திய மக்களின் ஒத்துழைப்பை ஆங்கிலே அரசு கோரியது. ஆனால் நேதாஜி ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மக்களை திரட்டியதன் காரணமாக கைது செய்யப்பட்டார். முதல் உலகப்போரில் பிரட்டனுக்குப் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பிரிட்டனுக்கு எதிரான நாடுகளை ஒன்று திரட்டி இந்தியாவை விடுவிக்க நினைத்தார் போஸ். அதற்கு சிறையிலிருந்து வெளியே வர வேண்டும் என கருதி உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
சுபாஷுக்கு ஏதேனும் ஏற்பட்டால், பெரும் விளைவுகள் வரும் என அஞ்சி ஆங்கிலேய அரசு விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட பின்
1941ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாள் மாற்று வேடத்தில் தப்பி சென்றார். ஜெர்மனியில் உள்ள ஹிட்லரை சந்தித்தார். அப்போது ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி கொடுத்தார்.
அங்கிருந்து ஜப்பான் சென்று, உதவியைப் பெற்றார். பின் ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு செயல்படாமல் இருந்த இந்திய ராணுவத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தார். பின்னர் சிங்கப்பூர் சென்று
1943ஆம் ஆண்டில் பர்மா வழியாகப் படையைத் திரட்டி வந்தார். அப்போது ஆங்கிலேயர்களின் தாக்கியதில் கொத்து கொத்தாக இந்தியர்கள் சாய்ந்தனர். மேலும் ஜப்பான் சரணடைந்ததால் போரை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைக்கு போஸ் தள்ளப்பட்டார்.
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி போஸ் தைவானில், விமான விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டதாகச் செய்தி வெளியானது. ஆனால் தைவானில் அன்று விமான விபத்து ஏதும் நடக்கவில்லை என தைவான் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய ஆவணங்கள்
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி விமான விபத்தில் இறந்ததாகத் தெரிவிக்கிறது. ஆனாலும் இன்று வரை சுபாஷ் சந்திர் போஷின் மரணம் மர்மமாகவே உள்ளது.
சந்தேகங்கள்
சபாஷ் சந்திரபோஸ் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், ரஷ்யாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.
நேதாஜி விமான விபத்தில் இறந்ததாகக் கூறப்பட்ட போதும் அறுபதாண்டுக்குப் பிறகும் நேதாஜி இறப்பின் மர்மம் விலகவில்லை.
நேதாஜி பிழைத்திருந்ததற்கான சாத்தியங்கள், சாட்சியங்கள் தவிர்க்க முடியாதவை.
ஆனால் மக்கள் தங்கள் அன்புக்குரிய தலைவர் விமான விபத்தில் இறந்து விட்டதாகக் கூறப்பட்டதை நம்பவில்லை. “Back from Dead”, “India’s biggest cover up” என்ற நூல்களின் ஆசிரியரான அனுஜ் தர், “இந்தியா சுதந்திரம் பெற்றதில் முக்கிய பங்கு வகித்த நேதாஜி இறப்பின் மர்மம் குறித்துக் கண்டறிவது இந்திய அரசின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது ஒருபோதும் செய்யப்படவில்லை. மக்களின் வற்புறுத்தலுக்காக கமிஷன்கள் போடப்பட்டன” என்று கூறுகிறார்.
நேதாஜி இறந்துவிட்டதாக ஜப்பான் வானொலியும் அரசாங்கமும் அறிவித்தது. நேச நாடுகள் இதை ஒரு தந்திரமாகத்தான் கருதின, நம்பவில்லை. அப்போதைய இந்திய வைஸ்ராய் அர்ச்சிபால்டு வாவெல் தனது டைரியில்
“அவர் மறைந்து கொள்வதற்காக இந்தச் செய்தி கொடுக்கப்படுகிறது என்று சந்தேகிக்கிறேன்” என்று எழுதியுள்ளார்.
அப்போதிருந்த பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் நேதாஜி இறப்பை உறுதி செய்ய மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
நேதாஜியின் உறவினரான போஸ் (Grand nephew) ஜெர்மனியில் 1972லிருந்து வசித்து வருகிறார். நேதாஜியின் மனைவி ஆனதால் அவரது உறவினரான (Great aunt) எமிலி செனகல், நேதாஜி உயிருடன் இருப்பது தனக்குத் தெரியும் என்று 1973-ல் கூறினாராம். எப்படியென்றால் நேதாஜி 1945க்குப் பிறகு ரஷ்யாவில் இருந்ததாக ராய்முண்ட் செனகல் என்ற ஜெர்மனி பத்திரிகையாளர் 1950 ஆரம்பத்தில் எமிலி செனகலிடம் கூறினாராம்.
அவரது மறைவு மர்மமானதுதான். ஆனால் அவர் உண்மையான தலைவர்தான். வீரமான தலைவர்தான். அவரது இந்நாளைப் போற்றுபோம்.