எம்.எல்.ஏ.வான முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கவேண்டும். அவரை அமைச்சராக்கவேண்டும் என்று பல மாதங்களாகப் பேச்சு வார்த்தையும் ஆதரவுக்குரல்களும் ஒலித்துக்கொண்டிருந்தது. அமைச்சரவையில் இளைஞர் நலத்துறையுடன் வேறு எந்தத் துறையை ஒதுக்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டிருந்தது. மூத்த அமைச்சர்களிடம் இருந்து துறைகளைப் பிடுங்கினால் பிரச்னை ஏற்படும் என்பதால், முதல்வர் தீவிரமாகஆலோசித்து வந்தார். அது ஒருவழியாகத் தீர ஆராயப்பட்டு ஒரு முடிவுக்கு வந்து இலாகா உறுதி செய்யப்பட்டது. புதிய அமைச்சருக்கான அறை, கோட்டையில், தயாராகி விட்டது. உதயநிதி விரைவில் அமைச்சராகப் பதவி ஏற்க உள்ளதாக அதிகாரபூர்வமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தற்போதைய அமைச்சரவையில் 33 பேர் உள்ளனர். உதயநிதி அமைச்சராவதால் முதல்வரைத் தவிர்த்து அமைச்சர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்கிறது.
தமிழகத்தில், 2021ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க. அரிதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. தி.மு.க. இளைஞர் அணிச் செயலரும், முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் அமோக வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் அவரின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. அதனால் அமைச்சரவையில் அவருக்குப் பதவி வழங்கவேண்டும் என்று கோரிக்கை பல தரப்பினரிடமிருந்து எழுந்தது. அதைத் தொடர்ந்து தி.மு.க. மந்திரி சபை மாற்றி அமைக்கும்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.
ஆனால் உதயநிதிக்கு இலாகா ஒதுக்கும்போது பெரிய தலைகளிடமிருந்து ‘பிடுங்கினால்’ பிரச்னை பெரியதாகிவிடும் என்று ஆலோசிக்கப்பட்டது. அதனால் இளைஞர் நலத்துறையுடன் வேறு எந்த துறையை ஒதுக்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டு தீர்ந்து, இலாகா உறுதியானது. புதிய அமைச்சருக்கான அறை, கோட்டையில், தயாராகி அமைச்சராகப் பதவி ஏற்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின். இதற்கான கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஒப்புதல் வழங்கிவிட்டார்.
டிசம்பர் 14ஆம் தேதி ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் பதவியேற்பு விழா நடைபெறும். இந்த விழாவில் 400 பேருக்கு மட்டும் அனுமதிப்படுவார்கள் என ராஜ்பவன் வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.
அமைச்சரவை மாற்றத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும்,
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த கே.ஆர்.பெரிய கருப்பன் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும்,
வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் சுற்றுலாத்துறை அமைச்சராகவும்,
சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் வனத்துறை அமைச்சராகவும் இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இரண்டாம் தளத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கான அறை வேக வேகமாகத் தயாராகிவிட்டது.
கலைஞர் குடும்பத்தில் இன்னொரு வாரிசு அமைச்சராகிறார் என்பது பலருக்கு வயிற்றெரிச்சை ஏற்படுத்துகிறதா? அல்லது அதை வைத்து அரசியல் செய்ய வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்களா என்பது சிறிது நாளில் தெரிந்துவிடும்.