ஹைதராபாத் பயணம் : 6வது நாள் – சிங்கம், புலி, சிறுத்தை – த்ரில் அனுபவம் 

1 0
Spread the love
Read Time:10 Minute, 1 Second

நண்பர்களே, 6-வது நாளாக நாங்கள் ஹைதராபாத்தில் எங்கள் அறையை காலி செய்து கொண்டு வாகனத்தில்  வழக்கம்போல் காலையில் கேட்டு 8.40 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம். 

முதலாவதாக டேங்க் பண்ட்  என்கிற இடத்துக்குச் சென்று பார்த்தோம். அது வேறு எங்கும் இல்லை. லும்பினி பார்க் பகுதியில்  உள்ள புத்தர் சிலை சொல்கிறோம் அல்லவா அந்த ரோடுதான் TANK  பண்ட்   என்று அழைக்கப்படுகிறது.

மிகப்பெரிய ஆற்றின் நடுவே பாலம்  அமைந்துள்ளது.  நாங்களும் சென்று அது வழியாக பலமுறை சென்றுள்ளோம். இருந்தாலும் இப்போதுதுதான் நின்று ரசித்து அதனைப் பார்த்துவிட்டு வந்தோம். அதனருகில் மிகுந்த அளவில் புறாக்கள் அங்கே காணப்படுகிறது. அங்கே நடை பயில்வோர் பலரும் உணவு தானியங்களை வழங்குகிறார்கள்.

நாங்கள் அடுத்ததாக ஐமேக்ஸ் தியேட்டருக்குச் சென்றோம். ஐமேக்ஸ்  பிரசாந்த் ஸ்டுடியோ என்று அழைக்கப்படுகின்றது. அங்கே மாலும் உள்ளது. அதனையும் நாங்கள் பார்த்துவிட்டு அங்கிருந்து நேரு மிருகக்காட்சி சாலை நோக்கி சென்றோம். மிகவும் பெரியதாக உள்ளது.

நாங்கள் முன்பாகவே பேட்டரி காரில் டிக்கெட் எடுத்துக் கொண்டோம். ஒரு நபருக்கு 100 ரூபாய் பெற்றுக் கொள்கிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை எண்பத்து  ஐந்து ரூபாயும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 100 ரூபாயும் வசூலிக்கிறார்கள். அதிலுள்ள டிரைவர் சில இடங்களை நமக்குக் கூறுகிறார்.

முதலாவதாக பட்டர்பிளை பார்க்கை  காண்பித்துவிட்டு வாகனத்திலேயே அமர்ந்தவாறு அங்கிருந்து அடுத்ததாக நம்மை மிருகங்கள் வசிக்கும் பகுதி இருக்கும் பகுதிக்கு கொண்டு செல்கின்றனர்.

அதுதான் முதலாவதாக உள்ள இடம். அந்த இடத்திலிருந்து நாம் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்கினங்களை மிக எளிதாக சற்றுத்தள்ளி காணும் வகையில் நம்மால் முடிகின்றது. வேற எந்த சூழலிலும் பார்க்க முடியாதவை. அருகமையில் நாம் மிக எளிதாக சிங்கம், சிறுத்தை, புலி போன்றவற்றை பார்க்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளார்கள்.

அங்கிருந்து நாம் 150 மீட்டர் நடந்தோம் என்றால் இரண்டாவது இடத்திற்கு நம்மளை அழைத்துச் செல்கின்றார் . யானை சவாரி செல்லும் என்ற என்று காண்பிக்கிறார்கள். ஆனால் அங்கு  யானை மட்டும் தான் இருக்கின்றது. சவாரி கிடையாது.

மீண்டும் அங்கிருந்து நம்மை மூன்றாவது இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். வாகனம் தொடந்து வந்து கொண்டே உள்ளது. ஒரு இடத்தில் இறக்கி விடும் வண்டி சென்றாலும், அடுத்து வரும் வண்டியில் டிக்கெட் காண்பித்து ஏறிக் கொள்ளலாம். டிக்கெட்டை கடைசி வரை கையில் வைத்து கொள்ள வேண்டும்.

மூன்றாவது இடமானது ஜங்கிள் சபாரி செல்லும் வகையில் உள்ளது.  நான் ஏ.சி. வண்டி 75 ரூபாயும், ஏசி வண்டி 120 ரூபாய் வாங்குகிறார்கள். சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஏனென்றால் 2 ஏ.சி. வண்டிகளும், 2 நான்  வண்டிகளும் செயல்படுகின்றன.

நாங்கள் 45 நிமிடத்திற்கும்  மேலாக காத்திருந்து நான் ஏசி வண்டியில் ஜங்கிள் சபாரி சென்றோம். நமது  அதிஷ்டத்தை பொருத்துதான் விலங்குகள் தெரியும் என்று கூறுகின்றார்கள். 

 நாங்கள் செல்லும் பொழுது சிங்கம் பார்த்தோம். மான்கள் அதிக அளவில் பார்த்தோம். காட்டுப்பன்றி  பார்த்தோம். ஒரு இருபது நிமிடம் இதனைச் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் ஏறிய  இடத்திற்கே கொண்டுவந்து விட்டுவிடுவார்கள்.

அங்கிருந்து மீண்டும் பேட்டரி கார் மூலமாக அடுத்த இடத்திற்கு சென்றோம். அடுத்த இடத்தில் பல்வேறு வகையான பறவைகள் உள்ளன. பறவைகளுடன் வான்கோழி  மற்றும் பல்வேறு விதமான வாத்துகளையும்  நாம் அங்கே காண இயல்கிறது.

அங்கே உணவகம்  வைத்துள்ளனர்.  நீங்கள் வேண்டியதை வாங்கி உணவு அருந்தலாம். மீண்டும் அங்கிருந்து சிங்கம், புலி மீண்டும் பார்க்க ஒரு பகுதியில் சென்றோம். சிங்கம் மிக இயல்பாக வெளியே வந்து சுற்றி திரிகிறது. அதனையும் நாங்கள் கண்டு ரசித்துவிட்டு மீண்டும் அடுத்த இடத்தை நோக்கிச் சென்றோம்.

ஆனால் இந்தப் பகுதி அனைத்துமே நாம் நடந்து செல்ல வேண்டியதாக இருக்கின்றது. பேட்டரி காரை அதனுள்ளே இயக்கலாம்.  ஆனால் பேட்டரிகளை மிக எளிதாக ரோட்டிலேயே நிறுத்திவிடுகின்றனர். உள்ளே வாகனத்தில் நம்மை  கொண்டு செல்வதற்கு அவர்களுக்கு விருப்பம் இல்லை. மனமும் இல்லை.

சுற்றுலா செல்பவர்களும் சுற்றி பார்த்துவிட்டு வந்து விட்டால் சரி தானா என்று எண்ணுவார்கள். இருந்தபோதிலும் நாங்கள் விடாமல்நடந்து சென்று பார்த்தோம்.சிறுத்தை மிக அருகில் சப்தம் இட்டு கொண்டு சுற்றி வருகிறது.ஆச்சரியம்தான்.

உணவகத்தில் ஒரு பாட்டிலின் தண்ணீர் ரூபாய் 35. ஆனால் தண்ணீரை குடித்து விட்டு மீண்டும் பாட்டிலை கொடுத்து விட்டால் ரூபாய் 10 கொடுத்து விடுகின்றனர்.குடை எடுத்து செல்வது நல்லது.வெய்யிலில் நடப்பது வசதியாக இருக்கும்.

மீண்டும் நாங்கள் அங்கிருந்த இரவு நேரத்தில் இருக்கக்கூடிய விலங்கினங்களை காணும் மிக அருமையான ஒரு குகைக்குள் சென்றோம். அந்த விலங்குகள் அனைத்தும் ஆச்சரியமூட்டும் வகையில் இருந்தது. எங்களுடன் வந்த பலரும் ஆச்சரியத்தில் பயந்து போய் கத்தினார்கள்.

அங்கே  பாம்புகளையும் பார்த்தோம். பல்வேறு விதமான பாம்புகளை மிக அருகாமையில் கண்ணாடி கூண்டுக்குள் பார்த்தபோது எங்களுக்கு அது அந்த பிரமாண்டமாக இருந்தது. இந்த பிரமாண்டங்களை எல்லாம் மிக அழகாக நமக்கு காண்பிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இரவு நேர விலங்கினங்களைப் பார்க்கும் பொழுதுதான் கும்மிருட்டாக இருந்தது. உள்ளே நாம் லைட் வெளிச்சம் லேசாக இருந்தால்தான் இயங்குவதும் அதனை பார்ப்பதும் முடியும். அதையும் முயற்சி  செய்து பார்த்து வந்தோம்.

பிறகு மாலை 3 மணி ஆகிவிட்டதால் எங்களுக்கு 4 45 ட்ரெயின்  என்பதால் மாலை மூன்று ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பி ரயில்வே ஸ்டேஷன் மூன்றே  முக்காலுக்கு அடைந்து ட்ரைனை பிடித்து கிளம்பி எங்களது ஊரை நோக்கி பயணமானோம்.

எனவே நண்பர்களே இது அருமையான வாய்ப்பு. ஹைதராபாத்தில் 6 நாள்கள் அது மிகப்பெரிய விஷயம். இதன் தொடர்ச்சியாக நாம் இன்னும் பல்வேறு படங்களை  பார்க்கலாம்.

நண்பர்களே, ஹைதராபாத் அதற்கான பயணம் இத்துடன் நிறைவு பெற்றது. மீண்டும் அடுத்த சந்திப்பில் சந்திப்போம். நண்பர்களே  இன்னும் ஓரிரு நாட்களில் விடுபட்டு போன அனைத்து படங்களையும், செலவு எவ்வளவு ஆனது என்பதை  வெளியிட உள்ளேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

(பயணம் தொடரும்.)

எம்.எஸ்.லெட்சுமணன், காரைக்குடி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!