அடர்ந்த காடுகளின் நடுவே ஜங்கிள் சபாரி

1 0
Spread the love
Read Time:13 Minute, 37 Second

ஹைதராபாத் நகரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று எண்ணி பல நண்பர்களிடம் பேசி பல்வேறு வகையான தகவல்களைச் சேகரித்து சுமார் ஆறு நாட்கள் தொடர்ந்து காலையில் இருந்து இரவு வரை நிற்க நேரமில்லாமல் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம்.

முதல் நாள் காலை திங்கள்கிழமையன்று ஹைதராபாத்தில் இருந்து கிளம்பி கீசர குப்தா  என்கிற கோயில், திருப்பதியைப் போன்று மிகப் பெரிய மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள யாதகிரிகுட்டா, 108 கோபுரங்களின் கலசங்கள் சுரேந்திரபுரி மற்றும் லும்பினி பார்க், என்.டி.ஆர். கார்டன், ஏரிக்கு நடுவே உள்ள ஒரே கல்லாலான புத்தர் சிலையை ஹுசைன் சாகர் லேக்கில் தரிசனம் செய்தோம்.

இரண்டாம் நாளான இன்று ஸ்ரீசைலத்தில் கண்ணை கவரும் ஆக்டோபஸ்   வியூ,    ஆளை மிரட்டும் அடர்ந்த காடுகளின் நடுவே ஜங்கிள் சபாரி,  ஆச்சரியத்தில் ஆழ்த்திய ராமானுஜர் சிலை,  பார்க்க வேண்டிய பழங்குடியினர் கண்காட்சியகம் ஆகியவற்றை கண்டுரசித்தோம்.

இரண்டாவது நாள் காலையில் 4.30   மணிக்குக் கிளம்பி ஸ்ரீசைலம் செல்லத் தயாரானோம். நாலரை மணிக்கு எங்களது பயணம் ஆரம்பமானது. வழி நெடுக கடுமையான பனிமூட்டம். (எங்கள் அறைக்கு எங்கள் ஓட்டுநர் காலை 3.55 மணிக்கெல்லாம் வந்துவிட்டார்.)

பனி மூட்டத்திற்கு நடுவே வாகனத்தை இயக்குவதற்கு எங்களது ஓட்டுநர் மிகவும் சிரமப்பட்டார். தோராயமாக மிகவும் பொறுமையாகச் சில மணி நேரங்கள் பயணம் செய்தோம். காலை ஏழு மணிக்குப் பிறகுதான் ஓரளவு வெளிச்சம் தெரிந்தது.

எட்டரை மணிக்கு டொமெல்பேண்ட்டா  என்கிற இடத்தில் காலை உணவை அருந்தினோம். இட்லி, வடை, பூரி, தோசை மிகவும் நன்றாக இருந்தது. அங்கிருந்து கிளம்பிச் செல்லும் வழியில் ஸ்ரீசைலம் டேமை பார்த்தோம். மிகப்பெரிய இடமாக இருந்தது. மலை உச்சியின் வழியாக, காடுகளின் வழியாகப் பயணித்தோம்.

ஸ்ரீசைலம் டேம் பகுதியில்  வியூ பாயிண்ட்  இருக்கின்றது. பரிசல்கள் செல்கின்றன. அவற்றையெல்லாம் நாங்கள் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். கிளம்பி எங்களுடைய பயணம் ஒன்பதரை மணிக்கெல்லாம் ஸ்ரீசைலத்தில் கோவிலைச் சென்று அடைந்தது.

ஸ்ரீசைலத்தில் ஊருக்கு உள்ளே செல்வதற்கு டோல்கேட் வசூல் செய்கிறார்கள். ஊருக்குள் செல்வதற்கு டோல்கேட் வசூல் செய்யும் ஒரே இடம் அந்த ஊர்தான்.  ரூபாய் 100 வசூல் செய்து விடுகின்றார்கள்.

ஸ்ரீசைலம் செல்லும் வழியில் ஆர்ம்பநாடு  என்கிற காடு மற்றும் மலைப் பகுதியின் வழியே நாம் செல்ல வேண்டியிருக்கிறது. மிகவும் அடர்ந்த காடு. டைகர்  ரிசர்வே என்று எங்களிடம் தெரிவித்தார்கள். சுமார் 30 கிலோ மீட்டருக்கு எங்கேயும் வாகனத்தை நிறுத்தக்கூடாது. அங்கே ஒரு பார்க்கிங் வேறு வைத்துள்ளனர். அதிலும் நாம் பணம் செலுத்திவிட்டு டிக்கெட் பெற்றுக் கொண்டுதான் உள்ளே செல்ல வேண்டும்.

அந்த ரோட்டின் வழியாக நாம் பயணம் செய்தால் மிக நீண்ட தூரம் பயணம் செய்த பிறகு ஸ்ரீசைலம் அடைய முடியும். ஸ்ரீசைலத்தில் எங்கள் வாகன ஓட்டுநர் எங்களை இறக்கிவிட்டு சென்றுவிட்டார். எந்தத் தெரு வழியாகச் சென்று கோயிலை அடைய வேண்டும் என்பதை எங்களால் யாரிடமும் கேட்க முடியவில்லை.

ஏனென்றால் எங்களுக்கு ஹிந்தி தெரியாது. அவர்களுக்குத்  தமிழ் தெரியவில்லை. ஆங்கிலமும் தெரியவில்லை. ஹிந்தியும் தெலுங்கும் எங்களுக்குத் தெரியவில்லை இது போன்ற ஒரு சூழ்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக விசாரித்து கோயிலை அடைந்தோம்.

அங்கு மிகப் பெரிய கூட்டம். மிகப் பெரிய கூட்டத்தைக் கடந்து சில மணிநேரங்கள் கழித்து இறைவனைத் தரிசனம் செய்து மீண்டும் அங்கிருந்து நாங்கள் கோயிலின் உள்ளே உள்ள அழகைக் கண்டு ரசித்தோம். சிவாஜிக்கு அவர்களது தாயார் கொடுத்த சில பொருள்கள் அது போன்று பல்வேறு விதமான தகவல்களை நாங்கள் அங்கே பார்த்து தெரிந்து கொண்டோம்.

கோயிலில் மிகப் பழமையான சிலைகள் காணப்பட்டது எங்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஸ்ரீசைலம்  கோயிலில் முக்கியமான ஒரு விஷயம் என்னவெனில் கேமரா, போன் எதையும் உள்ளே கொண்டுசெல்ல முடியாது. எனவே டூரிஸ்ட் பயணம் செய்பவர்கள் முதலிலேயே காரில் இவற்றை வைத்துவிட்டு செல்வது நல்லது.

ஏனென்றால் இவற்றைப் பாதுகாப்பதற்குப் பத்து, பத்து ரூபாய் வசூல் செய்கிறார்கள். அதற்கு மிகப் பெரிய கூட்டம் இருக்கிறது. இந்தக் கூட்டங்களைக் கடந்துதான் நாம் அங்கே செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.

எனவே வாகனத்திலேயே இவற்றை வைத்துவிட்டுச் செல்வது நல்லது. மீண்டும் அங்கிருந்து நாங்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ட்ரைபல்  மியூசியம் சென்று அடைந்தோம். ட்ரைபல்  மியூசியம் மிக அருமையாக அமைந்திருந்தது. 

பல்வேறு விதமான பழங்குடியினர் தொடர்பான தகவல்கள் அங்கிருந்தது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அங்கேயே சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி ராமானுஜர் சிலை இருக்கும் இடம் நோக்கி எங்களுடைய பயணம் ஆரம்பமானது.

செல்லும் வழியிலேயே அடர்ந்த காட்டுப் பகுதியின் வழியே இடையில் அக்கா மகாதேவி குகைகளைக் காணலாம் என முயற்சி செய்தோம். ஆனால் ஸ்ரீசைலம் டேம் அருகே வரும்பொழுது நாங்கள் இதுவரை கூகுள் மேப்பில் அடையாளம் கண்டு போனோம். 

அதற்குப் பிறகு வழி தெரியவில்லை. கேட்டபொழுது தற்பொழுது வாகனங்கள் இயக்கப்படவில்லை என்றும், போட் மூலம் செல்லலாம் என்றும் தெரிவித்தார்கள். அந்தக் குகைகள் இருக்கும் பகுதியில் மலைப்பிரதேசங்களில் தண்ணீர் ஊற்றும் இருப்பதாக அறிந்து கொண்டோம். ஆனால் தற்பொழுது போர்ட் இல்லை என்று சொல்லிவிட்டார்.

மீண்டும் அங்கிருந்து கிளம்பி அடர்ந்த காடுகளின் வழியாக வரும்பொழுது ஆக்டோபஸ் வியூபாயிண்ட் என்பதைப் பார்த்தோம். ஆக்டோபஸ் வியூ பாயிண்ட்  உள்ளே செல்வதற்குத் தலைக்கு 50 ரூபாய் பணம் வசூல் செய்கிறார்கள். 

ஆக்டோபஸ் வியூபாயிண்ட்   தவிர்க்கமுடியாத மிக அருமையான ஒரு வியூ பாயின்ட். அதை ஆக்டோபஸ் வடிவத்தில் இயற்கையாக அமைந்துள்ளது. பார்ப்பதற்கே மிகவும் அருமையாக இருந்தது. அங்கே சில மணி நேரங்கள் இருந்துவிட்டு மீண்டும் அங்கிருந்து கிளம்பி அடர்ந்த காடுகளின் வழியாகப் பயணம் செய்தோம்.

ஆக்டோபஸ் வியூ பாயிண்ட் அருகே நமது வாகனம் செல்லும்  வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளார்கள்.  கொஞ்ச தூரம் தாண்டியவுடன் ஜங்குல் சபாரி என்று ஒரு போர்டு தொங்கியது.

ஜங்கிள் சவாரி சென்று விசாரித்தோம். மூன்று வாகனங்கள் இருக்கின்றது. ஒரு வாகனத்திற்கு 6 பேர். ஒரு வாகனத்திற்கு 1200 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். நாங்கள் ஒரு மணி நேரம் காத்திருந்தோம்.

மீண்டும் ஒரு மணி நேரம் திறந்தவெளி ஜீப்பில் பயணம். அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே விலங்குகளைப் பார்க்க இயலும் என்று முன்பே தெரிவித்து விடுகிறார்கள். அடர்ந்த காடுகளின் வழியாக எங்களின் பயணம் தொடங்கியது. 

பல்வேறு காடுகளையும் பார்த்துவிட்டு வழியில் மான்களையும் காட்டுப் பன்றிகளையும் பார்த்தோம். அங்கேயும் ஒரு வியூ பாயிண்ட் வைத்திருக்கிறார்கள். அந்த வியூ பாயிண்ட் வழியாகப் பார்த்தால் மிக அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியில் தண்ணீர் நிரம்பியுள்ள ஏரியும் நம் கண்களுக்குப் புலப்படுகிறது.

சிறிது நேரம் அங்கேயே இருந்துவிட்டு அங்கிருந்தும் கிளம்பி ஜங்கிள் சவாரி ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்ந்து மீண்டும் அங்கிருந்து நாங்கள் கிளம்பினோம். வழியில் மான்களையும், காட்டுப் பன்றிகளையும் பார்த்தோம். அவ்வளவுதான் எங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தது என்று வாகன ஓட்டுநர் கூறினார். ஆனால் அடர்ந்த காட்டுப் பயணம் நன்றாக இருந்தது.

ஜங்கிள் சாரியில் இருந்து கிளம்பும்போது,  உணவு எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. உணவு இருக்கும் சரியான இடம் யாருக்கும் தெரியவில்லை. எனவே ஒரு ரோட்டுக் கடையில் அமர்ந்து அங்கே கிடைத்த உணவைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் எங்களுடைய பயணத்தைத் தொடங்கி மாலை 7.10 நிமிடத்திற்கு மேல் நாங்கள் ராமானுஜர் சிலை பகுதியை அடைந்தோம்.

ராமானுஜர் சிலையை நாம் காண்பதற்கு ரூபாய் 200 நுழைவுத்தொகை கொடுத்தே ஆகவேண்டும். நுழைவுத்தொகை கட்டினால் மட்டுமே ராமானுஜரைக் காண இயலும். 

ராமானுஜர் அருகில்   நூற்றுக்கும் மேற்பட்ட கோபுரங்களை வைத்துள்ளதாகக் கூறினார்கள். அவற்றையும் பார்த்துவிட்டு,  ராமானுஜர் தொடர்பாக ஒரு சவுண்ட் அண்ட் லைட் காட்சியும்  நடைபெறுகிறது. அதையும் நாம் பார்க்கலாம். 

ராமானுஜர் சிலையைப் பார்த்துவிட்டு அங்கிருந்து அன்றிரவு நாங்கள் எங்களுடைய அறைக்கு ஹைதராபாத் நோக்கிச் சென்றோம். இரவு அறையை அடையும்போது நேரம் 10.00 மணி. இரவு உணவை கட்சிக்குடா பகுதியில் உள்ள ஸ்வாதி ஹோட்டலில் சாப்பிட்டோம். மிக அருமையாக இருந்தது. மூன்றாவது நாள் பயணத்தை விரைவில் காண்போம்.

(பயணம் தொடரும்) 

எம்.எஸ்.லெட்சுமணன், காரைக்குடி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!