குவாய் தீவில் சிவனுக்கு பிரம்மாண்டக் கோயில்

1 0
Spread the love
Read Time:11 Minute, 16 Second

சைவசமய ஆகமவிதிப்படி சோழர் கால கட்டட முறையில் அமெரிக்காவை அடுத்துள்ள குவாய் தீவில் பிரம்மாண்ட முறையில் சிவன் கோயில் உருவாகிவருகிறது. அதன் சிறப்புகளையும் தமிழரின் பெருமைகளையும் பார்ப்போம்.

அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் உள்ள ஹவாய் தீவுகளுக்கு மத்தியில் குவாய் என்கிற ஒரு அழகிய மிகப் பழமையான தீவு உள்ளது. அங்குதான் சிவனுக்குத் தமிழ் கோயில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஏன் இந்த சிவன் கோயில் தமிழ்க் கோயில் என்றால் சைவ ஆகமவிதிகளின்படி கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்தக் கோயிலில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மந்திர நூலை எழுதிய திருமூலருக்குச் சிலை வடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வான்புகழ் வள்ளுவனுக்கும் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலைகளை வடித்தவர் நீலமேகம் ஸ்தபதி. அதோடு தமிழ் எழுத்துக்கள் நமசிவய என்பதை படிகளிலும் அங்கங்கேயும் பதிக்கப்பட்டுள்ளது.

ஏன் திருமூலருக்கு முக்கியத்துவம் என்றால் இந்த குவாய் ஆதீனத்தில் சமய தத்துவங்கள் திருமூலரிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. அதேபோல் மனிதனின் வாழ்க்கைக் கோட்பாட்டை உலக மக்களுக்குத் தெளிவாகச் செல்கிறது திருக்குறள். அதனால் இருவருக்கும் சிலை வடிக்கப்பட்டது.

கோயிலில் நுழைந்தவுடன் இடப்புறம் போதிமரம் உள்ளது. அங்கு தியானம் செய்யலாம். அதைத் தாண்டிப்போனால் கடவுள் கோயில் என்கிற நடராஜர் கோயில் உள்ளது. இதற்குச் சற்று தள்ளி இறைவன் கோயில் உள்ளது. குவாய் ஆதீனம் சத்குரு சிவாய சுப்பிரமணிய சுவாமிகள்தான் இந்தக் கோயிலைத் தோற்றுவித்தார்.

கடவுள் கோயில் (நடராஜர் கோயில்) குருவின் ஞான திருஷ்டியால் கட்டப்பட்டது. இது எந்த சாஸ்திர ஆகமவிதிகளுக்குள்ளும் வராது. இது ஹவாய் தீவு எரிமலைக் கற்களை வைத்துக் கட்டப்பட்டது.

இறைவன் கோயில் ஆகமவிதிப்படி ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிறப்புடன் ஆயிரம் ஆண்டுகள் தாங்கக்கூடிய தொழில்நுட்பத்துடன் தல யாத்திரை கோயிலாகக் கட்டப்பட்டது. இறைவன் கோயில் கருங்கற்களால் கட்டப்பட்டது.

இந்தக் கோயில் தூண்களில் தமிழர்களின் கலை கலாச்சாரங்கள், மருத்துவ முறைகளை, குறிப்பாக காது குத்துதல் போன்ற நிகழ்வுகளை செதுக்கியிருக்கிறார்கள்.

இந்தக் கோயிலைத் தோற்றுவித்த கலிபோர்னியா மாநிலத்தில் பிறந்து வளர்ந்த சத்குரு சிவாய சுப்பிரமணிய சுவாமிகளுக்கு நடனம் பிடிக்கும். அதனால் 10 வயதில் நடனம் கற்கத் தொடங்கும்போது இவரது நடன குரு நடராஜரைப் பற்றி அறிமுகம் செய்துவைத்தார். அன்றிலிருந்து நடராஜர்மேல் ஈர்ப்பு ஏற்பட்டு நன்றாகக் கற்றுக்கொண்டு யாழ்ப்பாணம் சென்றார். அங்கு ஒரு குரு யோக சுவாமிகள் என்பவர் இவருக்கு தீட்சை கொடுத்து சுப்பிரமணிய சுவாமிகள் என்கிற பெயரையும் வைத்தார்.  

அவர் அதன்பிறகு அமெரிக்காவுக்கு வந்து முதன்முதலாக வடஅமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில் ஒரு சிவன் கோயிலைக் கட்டினார்.  அதன் பிறகு சத்குரு சிவாய சுப்பிரமணிய சுவாமி கனவில் இங்கு குவாயில் ஒரு சிவலிங்கம் இருப்பதாகத் தெரிந்தது. அதன்படி இங்கு கோயில் கட்ட தமிழ்நாட்டுக்கு மகாபலிபுரம் சிற்பக் கல்லூரியில் கணபதி ஸ்தபதியைச் சந்தித்து கோயில் கட்ட முயற்சித்தார். அதனால் இந்தக் கோயில் சோழர் கால கோயில் கட்டட முறைப்படி கட்டப்பட்டது. அதில் தொடங்கியதுதான் இந்தக் கோயிலின் தமிழ்ப் பாரம்பரியம்.

மூலவரை ஸ்படிக கல்லில் வைக்க நினைத்த சத்குரு சிவாய சுப்பிரமணிய சுவாமிகள் குவாயிலேயே கப்பா என்கிற நகரத்தில் ஸ்படிகக் கல் விற்கிற பெண்ணிடம் சுவாமிகள் ஸ்படிகக் கல் கேட்டார். அந்தப்பெண் 3 அடி ஸ்படிக கல் கனவில் கண்டதாகவும் அது அமெரிக்காவில் ஆர்கென்ஸ்ஸா மாநிலத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். அதன்படி அவரையே சுவாமிகள் அங்கு அனுப்பி பெற வைத்தார். குவாரி நடத்துபவர்கள் ஆச்சரியப்பட்டு மூன்றடியில் இரண்டு ஸ்படிக கல் இரண்டு கிடைத்ததாகவும் ஒன்று இங்கு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அங்கிருந்து கொண்டுவந்த ஸ்படிக லிங்கம் ஆறு பக்கம் பட்டையும் இரண்டு பக்கம் முனை மழுங்கியும் உள்ள அபூர்வ ஸ்படிக லிங்கம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஆலய குடமுழுக்கு நன்னீராட்டு நடைபெறவில்லை. சிவாய சுப்பிரமணிய சுவாமிகள் திருக்குறளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மடத்தில் மொத்தம் 15 சுவாமிகள் இருக்கிறார்கள். அதில் ஓரிருவருக்குத்தான் தமிழ் பேசத்தெரியும். இவர்கள் எல்லாம் தமிழர் வாழ்வியல் முறையிலேயே சம்மணமிட்டு அமர்ந்து கையினால் உண்கிறார்கள். நெற்றியில் நீறு பூசி, உருத்திராட்சை மாலை அணிந்து, காவி உடையில் பக்திப் பழங்களாகக் காட்சியளிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலய அமைவிடம்

கோயில் கட்டுமானம் 1990இல் தொடங்கியது. இறைவன் கோயில் வைலுவா ஆற்றுக்கு அடுத்துள்ளது மற்றும் வையாலேலே மலையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. குவாய் ஆதீனம் என்றும் குவாயின் இந்து மடம் என்றும் அழைக்கப்படுகிறது.

கோயிலின் மையப்பகுதி 700 பவுண்டு, 39 அங்குல உயரம், வெட்டப்படாத குவார்ட்ஸ் படிகமாக இருக்கும். இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய ஆறு பக்க, ஒற்றைப் புள்ளி படிகமான இது 50 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று மதிப்பிடப்பட்டது. பாறையில் இருந்து வெட்டப்படவில்லை. மாறாக, அது சேற்றில் சூழப்பட்ட ஒரு சரியான நிலையில் காணப் பட்டது. ஒருவேளை பூகம்பத்தால் அதன் அசல் வெளியிலிருந்து தெரியப்படுத்தியிருக்கலாம்.

பெங்களூரு கைலாஷ் ஆசிரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ திருச்சி மஹாஸ்வாமிகள் கோவிலின் முக்கியத்துவத்தை விவரிக்கிறார்: “சிதம்பரம், மதுரை, ராமேஸ்வரம் மற்றும் பிற பெரிய சிவன் கோவில்கள் இந்தியாவிற்கு எப்படி இருக்குமோ அதே அளவிற்கு அமெரிக்காவிற்கு இந்த இறைவனின் கோவில் அமையப் போகிறது.

1975 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி சிவாய சுப்ரமணிய சுவாமியின் தரிசனத்தால் இறைவன் கோயில் வடிவமைக்கப்பட்டது. சிவபெருமான் இப்போது கோயில் அமைந்துள்ள நிலத்தில் சிவன் நடனமாடுவதைக் கண்டார். அதன்படி தொடங்கப்பட்ட இந்த ஆலயம். சுமார் ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும் வகையில் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எந்த இயந்திரத்தையும் பயன்படுத்தாமல், முழுவதுமாக கையால் செதுக்கப்பட்டது. இயந்திரத்தின் தாக்கத்தால் கல்லின் உயிர் போய்விடும். அதில்லாமல் கல்லில் உளியால் செதுக்கும்போது தேவையற்ற கற்கள் கீழே உதிர்ந்துவிடும். கல் உறுதியாகிவிடும் என்பதுதான் காரணம்.”

இங்கு இரண்டு இசைத் தூண்கள் உள்ளது. அதன் உயரமான தண்டுகளை ஒரு பொருளால் அடிக்கப்படும்போது துல்லியமான இசை ஒலிகளை எதிரொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற தூண்களில் செதுக்கப்பட்ட, ஆறு கல் சிங்கங்கள், ஒவ்வொன்றும் அதன் வாயில் சுழலும் ஒரு கல் பந்து, ஒரு பெரிய கல் மணி மற்றும் தளர்வான இணைப்புகள் கொண்ட 10 அடி நீளம் கல் சங்கிலிகள் ஆகியவை அடங்கும்.

கணபதி ஸ்தபதி

கோயில் கட்டுமானம்

1980களின் பிற்பகுதியில் வி.கணபதி ஸ்தபதியால் கோயில் வடிவமைப்பு முடிக்கப்பட்டது. 4,000-க்கும் மேற்பட்ட கிரானைட் தொகுதிகள் செதுக்குதல் 1990ஆம் ஆண்டு இந்தியாவின் பெங்களூரில் உள்ள ஒரு பகுதியில்பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர் குவாயில் உள்ள கோயில் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. 2001ஆம் ஆண்டு தொடங்கி, கல் கவாய்க்கு அனுப்பப்பட்டது. 3.2 மில்லியன் பவுண்டுகள் கொண்ட கோயில் சில ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்குரு சிவாய சுப்பிரமணிய சுவாமிகள்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!